மீனவர் துயரங்களுக்கு விடிவு...பாம்பன் பகுதியில் புதிய துறைமுகம்!

தமிழ்நாடு: மீனவர் துயரங்களுக்கு விடிவு காணும் விதத்தில், 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாம்பன் குந்துகால் பகுதியில் புதிய துறைமுகம் அமைகிறது. மீனவர்களின் கோரிக்கையை ஏற்று துறைமுகம் அமைய உள்ள பகுதியில், மீன்வளத்துறை செயலாளர் உள்ளிட்ட அரசின் உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

1976ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தபடி, ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் மீன்பிடி எல்லை குறுகிவிட்டது. இதனால் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க புறப்படும்போதும், இலங்கை எல்லையை எளிதாக அடையும் சூழல் உள்ளது. இதை தவிர்க்கும் வகையிலும், ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஏதுவாகவும், பாம்பனில் துறைமுகம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று, மீன் இறக்கு தளம், படகு நிறுத்தம், தூண்டில் வளைவு ஆகியவற்றை உள்ளடக்கிய மீன்பிடி துறைமுகம் மன்னார் வளைகுடா பகுதியான பாம்பன் குந்துகாலில் அமைய உள்ளது.

இதனைத் தொடர்ந்து, இன்று ராமேஸ்வரம் வந்த தமிழக மீனவளத்துறை செயலாளர் ககன்தீப்சிங்பேடி, மீனவ சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், மீன்வளத்துறை உயர் அதிகாரிகள், மீனவ சங்க பிரதிநிதிகளுடன் சென்று, ககன்தீப்சிங் பேடி பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், பாம்பன் குந்துகால் துறைமுகம் மூலமாகவும், 113 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையும் மூக்கையூர் துறைமுகம் மூலமாகவும், மீனவர்கள் துயரத்திற்கு விடிவு கிடைக்கும் எனத் தெரிவித்தார்.

Categorised

விவசாயிகளுக்காக கலை நிகழ்ச்சிகள்: நடிகர் விஷால்

தமிழ்நாடு: விவசாயிகளுக்காக கலை நிகழ்ச்சிகள் நடத்தி அவர்களுக்கு உதவ உள்ளதாக நடிகர் விஷால் கூறினார்.

டெல்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 2 வாரங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். வறட்சி நிவாரணத் தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை டெல்லியில் நேற்று நேரில் சந்தித்த நடிகர் விஷால், பிரகாஷ் ராஜ், பாண்டிராஜ் ஆகியோர் அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். விவசாயிகள் பிரச்னை தொடர்பாக இன்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியை நடிகர் விஷால் குழுவினர் சந்தித்து பேசினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், பொதுமக்களுக்கு தாழ்மையான வேண்டுகோள் ஒன்றை வைத்தார். சினிமா பார்ப்பதற்காக ஒவ்வொருவரும் பணம் செலவழித்து தியேட்டர் செல்கிறோம். அவ்வாறு செலவழிக்கும் பணத்தில் சிறிது பணத்தை சேர்த்து நாம் விவசாயிகளுக்கு கொடுத்தால் அவர்களின் பிரச்னை ஓரளவிற்கு தீரும். அது எவ்வாறு செயல்பாட்டிற்கு வரும் என்பது தெரியவில்லை. ஆனால் நாம் ஒவ்வொருவரும் இதனை செயல்படுத்த முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் சென்னை வந்தபின், விவசாயிகளுக்காக கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தி ஓரளவிற்கு அவர்களுக்கு உதவ உள்ளதாகவும் கூறினார்.

Categorised

ஜப்பானிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் மேற்கொள்ள ஆர்வம்!

தமிழ்நாடு: திறமைமிக்க தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்கள் தமிழகத்தில் இருப்பதால், ஜப்பானிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொடர்ந்து தொழில் மேற்கொள்வதில் ஆர்வமாக இருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஜப்பானிய நிறுவனங்கள் மீது இந்திய தொழிற்துறையின் எதிர்பார்ப்புகள்’ என்ற தலைப்பில், சென்னையிலுள்ள இந்தியா – ஜப்பான் வர்த்தக தொழில் கூட்டமைப்பு ஆய்வு மேற்கொண்டது. இதில், ஜப்பான் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் தமிழகத்தைச் சேர்ந்த 122 நிறுவனங்கள் பங்கேற்றன. அவற்றில், 39 சதவிகித நிறுவனங்கள் தொழில்நுட்பத்துக்காகவும், தொழிலை அறிந்துகொள்ளவும், ஜப்பான் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகத் தெரிவித்துள்ளன.

புதிய பொருட்களைத் தயாரிக்க ஜப்பான் நிறுவனங்கள் துணைபுரிவதாக 25 சதவிகிதத்தினரும், சர்வதேச சந்தையில் சுலபமாக நுழைய ஜப்பான் நிறுவனங்கள் உதவிகரமாக இருப்பதாக 17 சதவிகிதத்தினரும் தெரிவித்துள்ளனர். ஜப்பானில் முதலீடு செய்வது லாபகரமானதல்ல என்பதால் அதை விரும்பவில்லை என, ஆய்வில் பங்கேற்ற 68 சதவிகிதப் பேர் தெரிவித்துள்ளனர். இந்தியாவிலுள்ள ஜப்பானிய நிறுவனங்களில் 50 சதவிகித நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Categorised

10 Things to Avoid in Chennai

Image courtesy: Manu Manohar

Chennai is one of the important cities situated in the South India. Chennai is one of the main commercial centers in South India. 1,042 more words

10 Tips

Coastlines of uncertainty

These turbulent winds of salt that sluice our lands
bring food and fright through hungry bands.
Papacy and its pomposity did the sails wash ashore, 246 more words

Celebrating Green: Sacred and Wild

via Photo Challenge: It IS Easy Being Green!

Burst of green inside the grand granite temple complex of Meenakshi, in Madurai.

River Amaravati flows serenely flanked along the margins by green thicket.

Photos