Time will heal, so will Sidha

Sidha healers residing in the mountains are usually picturised wearing saffron dhotis with uncombed voluminous hair falling all over their face. The chief healer of Kolli hills, Mooligai Selavaraj’s image does not concur with any of it. 363 more words

Health

மூலச்சூடு போக மூக்கிரட்டை BOERHAAVIA DIFFUSA

மூலச்சூடு போக மூக்கிரட்டை BOERHAAVIA DIFFUSA

பொதுவான குணம் மூக்கிரட்டை தரையோடு படர்ந்து வளரும் சிறு கொடி. இலைகள் மேல்புரம் பச்சையாகவும் கீழ்புரம் வெழுத்து சாம்பல் நிறத்திலும் நீழ்வட்டமாக எதிர் அடுக்கில் இருக்கும். செந்நிறச் சிறு பூக்களையும் சிறு கிழங்கு போன்ற வேர்களையும் உடைய கொடி. 7 more words

MOOLIGAI

சிறுநீர் பெருக்கும் முள்ளங்கி RAPHANUS

சிறுநீர் பெருக்கும் முள்ளங்கி  RAPHANUS

பொதுவான குணம் முள்ளங்கி சமைத்துண்ணக்கூடிய கிழங்கினம். மணற்பாங்கான இடத்திலும், வளமான மண்ணில் நன்கு வளரும். குளிர் காலத்தில் மலைப்பிரதேசங்களில் அதிக மகசூல் கொடுக்கும். இதன் கிழங்குகள் முட்டை வடிவத்திலும், சிலிண்டர் வடிவத்திலும், உருண்டை வடிவத்திலும் இருக்கும். கிழங்குகள் இழசாக இருக்கும் போதே பிடுங்கி உபயோகிக்க வேண்டும். முற்றினால் வெண்டாகிவிடும் சமையலுக்குப் பயன்படுத்த முடியாது. இழசாக இருக்கும் போது செடியைப் பிடுங்கி கிழங்கைக் கழுவி விட்டுப் பச்சாயாகவே உப்பு காரம் போட்டுச் சாப்பிடுவார்கள், கடித்துத் தின்ன நன்றாக இருக்கும். இங்கு வெள்ளை முள்ளங்கிப் பயன்கள் கூறப்படுகின்றன. இது விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகின்றது. மேட்டுப்பாத்தி அமைத்து மண்ணைப் பக்குவப்படுத்தி விதைகளைத்தூவி பின் 2 அஙுகுல மணல்போட்டு பூவாழியில் தண்ணீர் தெளிக்க வேண்டும். ஈரம் அதிகம் காயாமல் இருந்து கொண்டே இருக்க வேண்டும். சில நாட்களில் நாற்றுகள் வளர்ந்த பின் எடுத்துப் பார்களில் நடவேண்டும். அல்லது பார்களின் உச்சியிலும் விதை ஊன்றி முழைக்க வைக்கலாம். சுமார் 45 நாட்கள் முதல் 60 நாட்களுக்குள் முள்ளங்கி பிடுங்கும் தருணம் வந்து விடும். தமிழகமெங்கும் இது பயிரிடப்படுகிறது. விதை எடுக்க மட்டும் முற்ற விடுவார்கள்.

வேறுபெயர்கள்  மூலகம், மற்றும் உள்ளங்கி.

ஆங்கிலப் பெயர் RAPHANUS   தாவரக் குடும்பப் பெயர் -: BRASSICACEAE
மருத்துவக் குணங்கள்

முள்ளங்கிக் கிழங்கு சிறுநீர் பெருக்கும், குளிர்ச்சியுண்டாக்கும். இலை பசியைத் தூண்டிச் சிறுநீர் பெருக்கித் தாது பலங்கொடுக்கும், விதை காமம் பெருக்கும்.

சமைத்துண்ண அதிமூத்திரம், நீர்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக் காசம், கபநோய், இருமல் ஆகியவை தீரும்.

முள்ளங்கிச்சாறு 30 மி.லி. காலை, மாலை கொடுக்கச் சிறுநீரக் கோளாறு, நீர்தாரைக் குற்றங்கள் நீங்கும்.

இலைச்சாற்றை 5 மி.லி. ஆக நாள்தோறும் 3 வேளை சாப்பிட்டு வர மலக்கட்டு, சிறுநீர்க் கட்டு, சூதகக்கட்டு எளிய வாத நோய்கள் தீரும்.

‘வாதங்கரப்பான் வயிற்றெரிவு சூலை குடல்

வாதங்காசம் ஐயம் வன்தலைநோய்-மோதுநீர்க்

கோவை பன்னோய் பல் கிரந்தி குன்மம் இரைப்புக்கடுப்பு

சாவும் முள்ளங்கிக் கந்தத்தால்.’

என இதன் மருத்துவ குணத்தைக் கூறுகிறார் கும்பமுனி. இந்த முள்ளங்கியால் வாத நோய், நீர்வடியும் படையான கரப்பான், வயிற்றெரிச்சல், நரம்பு சூலை எனப்படும் உடல் நரம்பு வலி, காசநோய், தலைவலி, மயக்கம், ஆஸ்துமா என்ற இரைப்பு, கடுப்பு என்ற சீதபேதி ஆகியன குணமாகும் என்பது பாடல் கருத்தாகும். சிறுநீரகத்தை நன்கு இயக்கும் குணமுடையது. அதனால் சிறுநீரைப் பெருக்கி நீர்கொர்வை என்ற உடல் வீக்கத்தைக் குறைக்கும். வாரம் இருமுறை இதனை உணவில் செர்க்க வேண்டும். பொரியல், சாம்பார் எதுவும் செய்து சாப்பிடலாம். வெள்ளை முள்ளங்கி மிக்க குணமுடையது.

இதனை இடித்து சாறு பிழிந்து 30-50 மி.லி. அளவு காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இது சாப்பிடும்போது உணவில் புளி தவிர்க்கவும். மேலே கூறப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும். பிற மருந்துகளோடு இது இந்த நோய்களுக்குத் துணை மருந்தாகும்.

கருவுற்ற தாய்மார்கள் இதனை வாரந்தோறும் சாப்பிட்டு வந்தால் பேறு எளிதாகும். சிறுநீர் மிகுதியும் கழியும். கை, கால் வீக்கம் வராது.

இதன் விதையைக் குடிநீராக – காசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி உண்டாகும்.

MOOLIGAI

mooligaimaruthuvam

மலச்சிக்கலுக்கு கொன்றை  CASSIA FISTULA

பொதுவான குணம் கொன்றை தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் காணப் படும் சிறு மர வகையைச் சேர்ந்தது. பல கிளைகள் விடும், ஒவ்வொரு கிளையிலும் பல சிறு கிளைகள் தோன்றி அதில் கொத்துக் கொத்தாக இலைக் கொத்துக்கள் தோன்றும், இதன் இலை நெல்லி இலை போல இருக்கும். ஒரே காம்பில் பல இலைகள் ஒன்றுக்கொன்று எதிர் வரிசையாகத் தோன்றும் ஒவ்வொரு இணுக்கு சேருமிடத்திலும் ஒரு சிறு கிளை தோன்றி, அதில் பல நரம்புகள் தோன்றி அந்த நரம்புகளில் கொத்துக் கொத்தாக மொட்டுக்கள் விட்டு சிகப்பு நிறப் பூக்கள் மலரும். இந்த பூ ஆவரம்பூவின் வடிவத்திலிருக்கும்.இடையிடையே இலேசான மஞ்சள் நிறமும் கலந்திருக்கும். பூவின் நடுவில் 5-6 மகரந்த நரம்புகள் வெளியே நீண்டிருக்கும். நீண்ட உரிளைவடிவக் காய்களையும், உடைய இலையுதிர் மரம். இது விதை மூலம் இனப் பெருக்கம் ஆகின்றது.

வேறுபெயர்கள்  பெருங்கொன்றை,சிறுகொன்றை

ஆங்கிலப் பெயர் CASSIA FISTULA  தாவரக்குடும்பம்:CAESALPINIACEAE
மருத்துவக் குணங்கள்

மரம், நோய்நீக்கி உடல் தேற்றும். காய்ச்சல் தணிக்கும் மலமிளக்கும் வாந்தியுண்டாக்கும் உடல் தாதுக்களை அழுகாமல் தடுக்கும். பூ வயிற்று வாய்வகற்றும் நுண்புழுக் கொல்லும் மலமிளக்கும். காயிலுள்ள சதை (சரக்கொன்றைப் புளி) மலமிளக்கும்.

வேர்ப் பட்டை 20 கிராம் பஞ்சு போல் நசுக்கி 1 லிட்டர் நீரில் இட்டு கால் விட்டராகக் காய்ச்சி 5 கிராம் திரிகடுகு சூரணம் சேர்த்து காலையில் பாதியும் மாலையில் பாதியும் சாப்பிட காய்ச்சல் தணியும் இதய நோய் குணமாகும். நீண்ட நாள் சாப்பிட மேக நோய் புண்கள், கணுச்சூலை தீரும். ஒரு முறை மலம் கழியுமாறு அளவை திட்டப் படுத்திக் கொள்ள வேண்டும்.

10 கிரைம் சரக்கொன்றைப் பூவை அரை லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி. ஆகக் காய்ச்சி வடிகட்டிச் சாப்பிட வயிற்ற்றுப் புழிக்கள் கழிந்து நோயகலும். நீடித்துச் சாபிட மது மேகம் தீரும்.

பூவை வதக்கித்துவையலாக்கி உணவுடன் சாப்பிட மலச்சிக்கல் அகலும்.
காயின் மேலுள்ள ஓட்டைப் பொடித்துக் குங்கமப்பூ சர்க்கரை சமன் கலந்து பன்னீரில் அரைத்து பெரிய பட்டாணி அளவாய் மாத்திரை செய்து உலர்த்திக் கொண்டு மகப் பேற்றின் போது வயிற்றினுள் குழந்தை இறந்த நிலையில் 10 நிமிடத்திற்கு 1 மாத்திரை கொடுக்க இறந்த குழந்தையை வெளித்தள்ளும்.
சரக்கொன்றைப் புளியை உணவுக்குப் பயன்படுத்தும் புளியுடன் சமன் கலந்து உணவுப் பாகங்களில் பயன்படுத்த மலர்ச்சிக்கல் அறும்.

கொன்றைப் புளியை நீரில் அரைத்துக் கொதிக்க வைத்துப் பற்றுப் போட கணுச் சூலை, வீக்கம் ஆகியவை தீரும்.

சரக்கொன்றைப் பூவையும் கொழுந்தையும் சமனளவு அரைத்துக் கொட்டைப் பாக்களவு பாலில் கலக்கி உண்டு வந்தால் வெட்டை, காமாலை, பாண்டு ஆகியவை தீரும்.

கொழுந்தை அவித்துப் பிழிந்த சாற்றில் சர்க்கரை கலந்து 200 மி.லி. கொடுக்க வயிற்றிலுள்ள நுண்புழுக்கள், திமிர் பூச்சிகள் அகலும்.
பூவை எலுமிச்சைச்சாறு விட்டரைத்து உடலில் பூசி வைத்திருந்து குளிக்கச் சொறி, கரப்பான், தேமல் ஆகியவை தீரும்.

கொன்றை மரத்தின் வேர்ப்பட்டையைக் கொண்டு வந்து கழுவிச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி, ஒரு கை பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாகாக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, காலை மாலையாகக் கொடுத்து வந்தால் வாய்வு சம்பந்த மான வலிகள், வாத சம்பந்தமான வலிகள் உடலில் தோன்றும் அரிப்பு, சிறு சிரங்குகள், மேக கிரணம் இவைகள் படிப்படியாக மறைந்து விடும்.

கொன்றை மரத்தின் பட்டையை நறுக்கி, அதில் ஒரு கைப் படியளவும், தூது வேளைக் கொடியின் இலை,பூ, காய்,வேர் இவைகளில் வகைக்கு 5 கிராம் வீதமும் எடுத்து அதையும் பொடியாக நறுக்கி, வெய்யிலில் காயவைத்து இடித்து சலித்து ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு. மொச்சைக் கொட்டையளவு தூளைஎடுத்து, ஒரு டம்ளர் காச்சிய பசும் பாலில் போட்டுக் கலந்து, காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வந்தால் சுவாசகாசம் படிப்படியாக் குறைந்து அறவே நீங்கி விடும்.

கொன்றைப் பூக்களில் கைப்பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு 100 கிராம் நல்லெண்ணையை விட்டு நன்றாகக் காயவைத்து பூக்கள் சிவந்து வரும் சமயம் இறக்கி, எண்ணணெய் ஆறியபின் வடிகட்டி ஒரு சீசாவில் விட்டு வைத்துக் கொண்டு காது சம்பந்தமான ஏற்படும் கோளாறுகளுக்கு, காலை மாலை ஒரு காதுக்கு இரண்டு துளி வீதம் விட்டு பஞ்சடைத்து வந்தால் , காது சம்பந்தமான கோளாறுகள் குணமாகும்.இலைகளை கண் இமைகளின் மேல் இரவு படுக்குமுன் வைத்துக் கட்டி காலையில் அவிழ்த்துவிட வேண்டும் இந்த விதமாக ஐந்து நாட்கள் கட்டி வந்தால் கண் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் குணமாகும்.

MOOLIGAI