குறிச்சொற்கள் » வாசிப்பு

தவிப்பு

தலைப்பு :தவிப்பு

வகை : நாவல்

பதிப்பகம்: #ஞானபாநு

ஆசிரியர் : #ஞாநி

இந்த நாவலை வாங்கி பல வருடங்கள் கழித்து சென்ற 2017 தொடக்கத்தில் கையில் எடுத்தேன் 15 அத்தியாயம் வரை படித்தேன், அதன் பின் வாசிப்பை தொடர முடியவில்லை அந்த தருவாயிலேயே ஞாநியிடம் இந்த நாவலை தொடர்பாக சில கேள்விகள் கேட்டேன். சலிக்காமல் பதில் சொன்னார் என்று எழுதுவது தேவையற்றது தான் ஆனாலும் என் நட்பு வாட்டாரத்தில் அவர் சுபாவங்கள் பற்றி அதிகம் தெரியாது.

சில வாராங்களாக தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்று திட்டமிட்டவுடன் தவிப்பை கையிலெடுத்தேன் மிகவும் சுவையான வாசிப்பு அனுபவத்தை கொடுத்திருக்கிறது பல பார்வைகளை விரிவடைய செய்திருக்கிறது. மிகப் பெரிய வருத்தம் என்னவென்றால் ஞாநி இருந்திருந்தால் படித்து முடித்ததும் பல கேள்விகளை கேட்டு துளைத்திருப்பேன். கதாப்பாத்திரங்களின் பெயர் காரணம், நாவலில் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றிய வரலாற்று மற்றும் அரசியல் தெளிவு, கதாப்பாத்திரங்களின் வடிவமைப்பு குறித்த வரலாற்று சம்பவங்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம் மேலும்
பலூன் நாடகத்தில் பயன்படுத்தியிருந்த சில கவிதைகளும் இடையில் இருந்தது.


I miss you GnaniSankaran

வாசிப்பு

"சொற்களால் அமையும் உலகு: சில உரைகள் - சில விமர்சனங்கள்" நூலினை முன்வைத்து ஓர் உசாவல்

வாசிப்பும் தேடலும் நிறைந்தவர்களுக்கு
ஏதோ ஒரு விதத்தில் திறப்பினைச் செய்வதாக அமைந்துவிடும் நூல்கள் எல்லாம் முக்கியமானவையாகவே
அமைந்துவிடுகின்றன. வாசிப்பு தரும் அனுபவமானது இதற்கு முன்னர் வாசித்த ஏதோ நூலுடனோ, கண்ட
சம்பவத்துடனோ தனி அனுபவத்துடனோ தொடர்புபட்டதாகி, அனுபவத்தின்

இலக்கியம்

திராவிட அரசியல் - வரலாற்றுத் தடங்கள் கருத்தரங்கம்: வாசிப்பு

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘திராவிட இயக்கம்’ குறித்து வார்த்தைகளில் மட்டுமே அறிந்திருந்த நான், சென்ற ஆண்டில் ஒருநாள் திடீரென ஊக்கம்பெற்றவனாக திராவிட இயக்கம் குறித்து ஆதியிலிருந்து வாசிக்கத் தொடங்கினேன். முதலில் உணர்வுப் பூர்வமாக (அப்படித்தான்) அணுகியவன், தொடர்ச்சியான வாசிப்பு மற்றும் உரையாடல்களின் வழியாக இயக்கத்தையும் அதன் செயல்பாடுகளையும் விமர்சனப் பூர்வமாகவும் அணுகக் கற்றிருக்கிறேன்.

வாசிப்பு

வெற்றுக் கோப்பையும் ஒரு துளி அபத்தமும்: காச்சர் கோச்சர்

Ressentiment :

It  is the French translation of the English word resentment (from Latin intensive prefix re-, and sentir “to feel”). According to the existentialists, ressentiment is a sense of hostility directed at that which one identifies as the cause of one’s frustration, that is, an assignment of blame for one’s frustration.

143 more words
வாசிப்பு

மதுரை சம்பவம் 🚌📚

மதுரை. எப்போதும் என்னை பரவசத்தில் ஆழ்த்திய இந்த மாநகருக்கான முந்தைய பயணங்களின் நினைவுகளோடு அநேக மாதங்களுக்குப் பிறகு இன்று அந்நகருக்கு பயணப்பட்டேன். பேருந்தில் ஏறி அமர்ந்ததுமே என்னுடைய மனம் பெயரிட முடியாத உணர்வுகளில் திளைக்கத் தொடங்கியது.

வாசிப்பு

அகில் குமாரசாமி: சில குறிப்புகள் - 1

எழுத்தாளர் அகில் குமாரசாமி பற்றிய அறிமுகக் கட்டுரையை ஒட்டி எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன் ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கும் குறிப்பு கீழே:

அனோஜன் பாலகிருஷ்ணன்:

‘Half Gods‘ – அகில் குமாரசாமி

புலம்பெயர் இலக்கியம் என்றால் என்ன? எந்தப் பண்புகளின் அடிப்படையில் அவற்றை வகைப்படுத்தலாம் என்பதற்கான விடைகள் இன்னும் தீர்க்கமாக நம்மிடம் இல்லாவிடினும், இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட இனவன்செயல், அரசியல், யுத்த நெருக்கடியால் தமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் உலகின் பல பாகங்களுக்கு கிளம்பிச் சென்றார்கள். 19 more words

வாசிப்பு