190. பொன்னியின் செல்வன்

மாதொருபாகன் என்று தொடங்கிய பாரம்பரியம், பிறகு வள்ளுவன் சிலை, பெரியார் சிலை, தமிழை ஆண்டாள், சபரிமலை அய்யப்பன் என்று வரிசையாக தொட்டுத் தொடர்ந்து இன்று வந்து நிற்குமிடம் இராசராச சோழன். கிருமி ஒன்றுதான். தாக்கப்படும் உடற்பாகங்கள் தான் வேறு. 906 more words

ஞானசேகர்

வேள்...

வேள்

இருள் மெல்ல மெல்லத் தன் கரங்களைப் பரப்பி உலகை இறுக்க மூடியிருந்தது. விறன்மலையை அடுத்துப் பரந்து விரிந்திருந்த கொடும்பாளூரின் மேற்கு வாயிலை ஒட்டிய குகை ஒன்றில் கூடியிருந்தனர் அவ்விருக்குவேள் அரசின் ஆதிக்கமையங்கள்.

சந்தன நிறத்திலான பட்டுத்துணி பெரியதாக விரிக்கப்பட்டு, அதன் மீது சில இடக்குறியீடுகள் குறிக்கப்பட்டிருந்தன. 2,455 more words

ஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு

முருகேசு பாக்கியநாதன் சில வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டரின் தமிழ்ச்சேவை என்கிற தொடரொன்றினை தாய்வீடு பத்திரிகையில் எழுதிவந்தார்.  அக்காலப் பகுதியில் தாய்வீட்டில் வெளிவந்துகொண்டிருந்த பல்வேறு தொடர்கள் அடிப்படையில் ஆவணப்படுத்தல் செயற்பாடுகளுடன் தொடர்புடையனவாக இருந்தன.  அவற்றையெல்லாம் தொடர்ந்து படித்துவந்ததுடன் அந்த முயற்சிகள் பற்றிய எனது கருத்துகளையும் தாய்வீடு ஆசிரியர் டிலிப்குமார் அவர்களுடன் பகிர்ந்தே வந்தேன்.  1,053 more words

ஈ. ஹெச். கார் பார்வையில் வரலாறு – ஹெலன் கார்

(இப்போது பரவலான வாசக, விமரிசன பாராட்டு பெற்றிருக்கும் செர்னோபில் என்ற ஹெச்பிஓ மினி சீரிஸ், “பொய்களுக்கு நாம் கொடுக்கும் விலை என்ன?” என்ற கேள்வியில் துவங்குகிறது. நெஞ்சைத் தொடும், பதைபதைக்க வைக்கும் அத்தொடரில் பின் வருவது எல்லாமே அந்தக் கேள்விக்கான விடையை அடையும் தேடல்தான். 1,646 more words

வரலாறு

ஜூடன்ப்ளட்ஸ் 1010 – ஐரோப்பாவுக்கு ஆற்றிய உரை, திமோதி ஸ்னைடர்

(கவலைப்பட நமக்கு உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு விஷயமிருக்கிறது. இதோ இன்னும் ஓரிரு நாட்களில் ஐரோப்பிய யூனியன் தேர்தல் முடிவுகள் வந்து விடும். உலகெங்கும் மேலோங்கி எழுந்து கொண்டிருக்கிற பாப்புலிஸ்ட்நேட்டிவிசம் என்று அழைக்கப்படும் போக்கை மக்கள் மற்றுமொரு பிரதேசத்தில் அங்கீகரிக்கப் போகிறார்களா என்று தெரியவில்லை. 3,207 more words

வரலாறு

189. TEN JUDGEMENTS THAT CHANGED INDIA

ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமல்ல.
உடனடி மணமுறிவு தரும் முத்தலாக் முறை குற்றமாகும்.
பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் செல்லலாம்.
இப்படி சமூகத்தில் புரையோடிப் போன விடயங்களைத் தனது தீர்ப்புகள் மூலம் நம்மை எல்லாம் சென்ற வருடம் வியக்க வைத்தது உச்ச நீதிமன்றம். 264 more words

ஞானசேகர்

ஆச்சரியம் அளிக்கப்போகும் கிழக்கு இந்தியா!

நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்களான பிகார் (40), ஜார்க்கண்ட் (14), மேற்கு வங்கம் (42), ஒடிசா (21) ஆகியவற்றில் மொத்தமாக 117 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

இவற்றில் பிகாரில் பாஜகவின் தோழமைக் கட்சியான ஐக்கிய ஜனதாதளமும், ஜார்க்கண்டில் பாஜகவும், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும், ஒடிசாவில் பிஜு ஜனதா தளமும் ஆட்சி செய்கின்றன. 1,066 more words

தினமணி