குறிச்சொற்கள் » மருத்துவம்

சிறுநீரின் நிறத்தை வைத்தே உங்கள் உடல்நிலையை பற்றி அறிந்துக் கொள்ள முடியும்.

சிறுநீரும் உடல்நலமும்;–

உங்கள் சிறுநீரின் நிறத்தை வைத்தே உங்கள் உடல்நிலையை பற்றி அறிந்துக் கொள்ள முடியும்

🚻வெள்ளை நிறம்(சுத்தமான) – நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது

🚻வெளிறிய மஞ்சள் நிறம்– போதுமான அளவு நீர்ச்சத்து

🚻மஞ்சள் நிறம் – உடலில் நீரச்சத்து குறைந்து வருகிறது

🚻பழுப்பு(பழுப்பு/பிரவுன்)நிறம்– கல்லீரல் தொற்று / பழைய இரத்தம்

🚻சிவப்பு(சிவப்பு/பின்க்)நிறம் – தூய இரத்தம் சிறுநீரில் கலந்துவருகிறது / சிறுநீரக கோளாறு / புற்றுநோய்

🚻நீலம் அல்லது பச்சை நிறம்– தவறான மருந்துகள் உட்கொள்ளுதல் / உணவில் அதிகப்படியான சாயம் கலப்பு

🚻தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது.

🚻தினமும் அதிகாலையில் தண்ணீர் குடிப்பது
மேலும் பலவகையான நோய்களிலிருந்து உங்களை பாதுகாத்து கொள்ள உதவும்.

👉நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும். இந்த விழிப்புணர்வு மருத்துவ பதிவை அனைவருக்கும் பகிருங்கள்.

🚻🚻🚻🚻🚻🚻🚻🚻🚻🚻

மேலும் பல விழிப்புணர்வு பதிவுகளுக்கு இதை 👇

கிளிக் செய்யுங்கள்

😃 PoovArt ✍️

குழந்தையை கொன்ற தாய் - அலசல்

சமீபத்திய செய்தி ,குழந்தையைக் கொன்ற தாய். அதுக்கு விதவிதமான ஜட்ஜ்மெண்ட். ஒரு குழந்தைய தாய் கொல்லுவாளா? அவள் பெண்ணா? பேயா? முதற்கொண்டு பல விவாதங்கள். இதைப் பற்றி படித்து அறிந்து, இந்தப் பிரச்னையிலிருந்து வெளிவந்த சில மக்களின் அனுபவங்கள் மூலம் நான் தெரிந்துகொண்டதை, படித்து மொழிபெயர்த்த ஒரு கட்டுரையை இங்கே தருகிறேன்.

உளவியல்

அந்த அறைக்கு புதிதாக அனுமதிக்கப்பட்டிருந்தாள் ஆஸிபா. அவளின் நிலை பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. அவள் மனதளவிலும் உடலளவிலும் ரொம்பவே சோர்ந்திருத்தாள். தான் இளம் வயதில் தன் வாழ்க்கையை வாழத் தொடங்கும் போதே தன் வாழ்க்கை முடியப் போகிறதென்ற அச்சம் அவளை சூழ்ந்து கொண்டது. அவளுடைய குருதிப் புற்று நோய் ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கின்றது என்பதைக் கூறி வைத்தியர்கள் அவளுக்கு நம்பிக்கையூட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஆஸிபாவின் அறையிலேயே ஹஸீனாவும் சிகிச்சைகளுக்காக வைக்கப்பட்டிருந்தாள். சிகிச்சையின் பக்க விளைவினால் அவளின் தலை மயிர்கள் எல்லாமே உதிர்ந்திருத்தன. அவளுடைய தோற்றமும் கூட மாறியிருந்தது. ஆனாலும் அவை எல்லாம் சிறிது காலத்திற்குத்தான் என்பதை ஹஸீனா அறிந்திருந்தாள். தன் மனைவி மனதளவில் சோர்ந்து விடக் கூடாது என்பதற்காக தன் தலைமயிரைக் கூட மழித்திருந்தான் ஹஸீனாவின் கணவன்.

அறையிலே ஆஸிபாவும் ஹஸீனாவும் தனிமையில் பேசிக் கொண்டிருக்கும் போதெல்லாம் தான் முன் இருந்த நிலையையும் இப்போதிருக்கும் முன்னேற்றத்தையும் கூறி ஆஸிபாவிற்கு ஆறுதல் கூறி வந்தாள் ஹஸீனா. தனிப்பட்ட தகவல்கள் எல்லாம் பரிமாறப்பட்டு இருவருக்குமான உறவு நெருக்கமடையத் தொடங்கியது.

ஆஸிபா அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவள் கணவன் ஒரு தடவை கூட அவளைப் பார்க்க வராமையானது ஹஸீனாவின் மனதிலே பல சந்தேகங்களைத் தோற்றுவிக்கவே அது பற்றி வினவினாள் ஹஸீனா.

ஓய்வு நேரங்களிலே ஊதிப் பார்ப்பதை தொழிலாய் செய்கின்ற தன் கணவன் வெளியூருக்கு தொழில் நிமித்தம் சென்ற வேளையில்தான் தன் தாய் வைத்தியசாலைக்கு கொண்டு வந்ததாகவும் வந்த இடத்தில்தான் வலுக்கட்டாயமாக அனுமதிக்கப்பட்டதாகவும் கூறினாள் ஆஸிபா.

தன் வியாதி என்ன என்பதை அறியாமல்தான் தன் கணவன் வீட்டில் வைத்திருந்தாகவும் புற்று நோய் என்றறிந்தால் தன்னை முன் கூட்டியே தன் கணவர் வைத்தியசாலையிலே சிகிச்சைகளுக்கு அனுமதித்திருப்பார் என்று நம்பிக்கையுடன் கூறினாள் ஆஸிபா.

இரண்டு நாட்கள் கழிந்து பார்வையாளர்களுக்கான நேரமொன்றிலே வருகை தந்திருந்தான் ஆஸிபாவின் கணவன். தன் கணவர் தன்னை கட்டியணைத்து ஆறுதல் சொல்வாரென்று காத்திருந்த அப் பெண்ணின் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் வீணாகிடவே வந்தும் வராததுமாக ஆஸிபாவிலும் அவள் தாயிலும் எரிந்து விழுந்தான் அவள் கணவன்.

சிகிச்சை பெற்று வந்த தன் மனைவியினை வைத்திய சாலையிலிருந்து வீட்டுக்கு கொள்ளப்போவதாகவும், ஆங்கில சிகிச்சை முறையை பின்பற்றினால் இவ்வாறு தலையில் முடியுமற்றுத் தான் இருக்க வேண்டுமென ஹஸீனாவை காட்டி ஆர்ப்பரிக்கவே அவ்விடத்தில் எல்லோரும் கூடிவிட்டனர்.

மருத்துவர்கள், தாதிமார், ஹஸீனா போன்றோரின் வேண்டுகோள், எதிர்ப்பு எல்லாவற்றையும் உதறித் தள்ளி அத்தனை பேருக்கும் முன்பாக வலுக்கட்டாயமாக தன் மனைவியை கொண்டு சென்றான் முகத்தில் தொங்கும் தாடியுடன் ஜுப்பா அணிந்த அந்த மௌலவி கணவன்.

நாட்கள் நகர்ந்து ஐந்து மாதங்கள் கடந்து போயின. ஹஸீனாவின் உடலில் முன்னேற்றம் தெரிந்தது. அவள் இப்போதெல்லாம் சிகிச்சைக்காக மாதத்தில் இரு தடவைகள் மாத்திரமே சென்று வந்தாள். தன் தோழி ஆஸிபாவின் நினைவு வரவே அவள் வீட்டுக்குச் சென்று சுகம் விசாரித்திட என்ணினாள் ஹஸீனா. தன் தோழி ஆங்கில மருத்துவத்தை விட்டிருந்தாலும் வேறு மருத்துவங்களின் மூலம் சுகம் பெற்றிருப்பாள் என்ற நம்பிக்கை அவளுக்கிருந்தது.

ஆஸிபாவின் வீட்டுக்குச் சென்றதும் எழும்ப முடியாமல் படுத்திருக்கும் தன் தோழியின் உடல் நிலையைக் கண்டதும் இது கனவா நனவா என்ற நிலை அறியாது திகைத்துப் போனால் ஹஸீனா. நோய் உக்கிரமடைந்து அடையாளமே தெரியாது மாறிப் போயிருந்தாள் அப்பாவி ஆஸிபா. ஹஸீனாவைக் கண்டும் எழும்ப முடியாமல் தன் நிலையினை கண்ணீராலேயே எத்தி வைத்தாள் ஆஸிபா.

தன்னை பெரிய வைத்திய சாலையிலே அனுமதிப்பதாக பொய் கூறி தன் கணவன் வெளியூருக்கு கொண்டு சென்ற பின் ஜின் வைத்தியம், இஸ்லாமிய வைத்தியமென்று தன் நகைகளையும் தன் தாயின் நகைகளையும் விற்று செலவழித்தாகவும் தன் உடலில் எந்த முன்னேற்றம் ஏற்படவில்லை எனத் தன் நிலையினைக் கூறி கண்ணீர் வடித்தாள் ஆஸிபா.

பேசிக் கொண்டிருக்கும் போதே ஆஸிபாவின் உடல் முடியாமல் போகவே ஏழு முறை வுழுச் செய்ய வைத்து தேன், ஷம்ஷம் நீரென இன்னும் பல வஸ்துக்களையும் பருகச் செய்து ஆஸிபாவை உறங்க வைத்தாள் அவள் தாய். தன் தோழியின் நிலையினை என்ணி வருத்தத்துடனும் அவளின் முட்டாள் கணவனின் செயலை என்ணி கோபத்துடனும் வீடு சென்றாள் ஹஸீனா.

ஒரு வாரம் கழிந்த பின்னர் முகநூலிலே தன் தோழிகளின் பதிவுகளை வாசித்துக் கொண்டிருந்த ஹஸீனா ஆறு நாள் மருத்துவ கற்கை நெறி விளப்பரத்தினையும் அதனை பற்றி விபரித்திருக்கும் ஒரு கட்டுரையினையும் பார்த்து அதிர்ந்து போனாள். அவள் தோழியின் உடல் நலத்தை சீரழித்த கள்வர்கள் சமூகத்தில் புற்று நோய் போல் வேரூன்றுவதைப் பார்த்து அவள் நெஞ்சம் பதறியது.

இன்னும் எத்தனை அப்பாவிகள் ஏமாறப் போகின்றார்களோ என்ற யோசனையில் ஆழ்ந்திருந்தவளை தட்டி எழுப்பினான் அவள் கணவன் ஆஸிபாவின் மரணச் செய்தியுடன்..

(உண்மை சம்பவத்தை அடிப்படையாய் கொண்டு எழுதப்பட்டது…)

#ஷியான்_யாக்கூப்
#சிந்தனை_மடல்

கற்பனைச் சிதறல்கள்

இது ஹீலர் பாஸ்கரோடு முடியும் விசயமில்லை!

ஹீலர் பாஸ்கரை கைது செய்தது வரவேற்கத்தக்க விசயமல்ல. மக்களிடையே எழுந்துள்ள எதிர்ப்பு அலையையொட்டி, அதிமுக அரசு தனது மக்கள் நலனை வெளிக்காட்டி கொள்வதற்கான வாய்ப்பாக இதனை பயன்படுத்தியுள்ளது. இதன் மூலம் நேர் எதிரான விளைவுகளே ஏற்படும்.

தமிழ்

நீட் எழுதிய 2லட்சம் பேரின் அலைபேசி எண், புகைப்படங்கள், இணையதளத்தில் கசிந்தது

நீட்’ தேர்வுகளை, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்துகிறது. இந்தாண்டு நீட் தேர்வு எழுதிய, மஹாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த, 2.4 லட்சம் பேரின் தகவல்கள் விற்பனைக்கு உள்ளதாக இணையதளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதியோரின் முழு முகவரி, அலைபேசி எண், புகைப்படம், பிறந்த நாள், இ – மெயில் முகவரி, நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் உள்ளிட்ட தகவல்களை அளிப்பதாக அந்த இணையதளம் கூறியுள்ளது. இதற்கு, இரண்டு லட்சம் ரூபாய், பணம் செலுத்த வேண்டும் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதியோரின் அலைபேசி எண்களின் முதல் மூன்று எண்கள் மட்டுமே இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. விருப்பம் உள்ளோர், பணம் செலுத்தி, மொத்த தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம் என இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. ‘நீட்’ தேர்வு எழுதியோரின் தகவல்கள் விற்பனைக்கு வந்துள்ளது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்!

காலை நேரங்களில் நிறைய பேர் பூங்காக்களிலும், சாலை ஓரங்களிலும் நடைப்பயிற்சி செய்பவர்களை பார்க்கலாம். மேலும், நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதயநோயாளிகளுக்கு ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்துவதால் உடற்பயிற்சி மையங்களுக்குச் செல்வதும் அதிகரித்து வருகிறது.
நீச்சல், ட்ரெட்மில், ஸ்டேட்டிக் சைக்கிள், ரெஸிஸ்டன்பேன்ட் பயிற்சிகள் போன்ற ஏரோபிக் பயிற்சிகளை செய்ய பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டியது அவசியமாகிறது. எல்லோருக்கும் அது சாத்தியமில்லை என்பதால், அதற்குப் பதில் ‘படி ஏறுங்கள்’ இதய ஆரோக்கியத்துக்கும், தசை பலவீனத்துக்கும் மிகவும் நல்லது என்கிறது ஓர் ஆய்வு.
‘மாடிப்படி ஏறுவதால், ரத்த அழுத்தம் குறைவதோடு கால்களுக்கும் வலுகிடைக்கிறது’ என வட அமெரிக்க மெனோபாஸ் சொசைட்டி(North American Menopause Society (NAMS) தன் ஆய்விதழில் குறிப்பிட்டுள்ளது. வயதாவதால் தசைகள் பலவீனமடைய வாய்ப்புகள் உள்ளன. மேலும், வயதோடு தொடர்புடைய உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயசம்பந்த நோய்களும் ஏற்படுகின்றன.
இவர்களுக்கு கடுமையான பயிற்சிகள் அல்லாமல் தசைகளை வலுப்படுத்தக்கூடிய, அதேநேரத்தில் இதய ஆரோக்கியத்திற்கும் ஏற்ற வகையான ஏரோபிக் மற்றும் ரெஸிஸ்டன்ஸ் கலந்த பயிற்சிகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அலுவலகங்கள், வீடு, ஷாப்பிங் மால் என எங்கே சென்றாலும் படிகள் ஏறுவதற்கு லிஃப்ட், எஸ்கலேட்டர் வசதிகளை பயன்படுத்தாமல், படிகளில் ஏறுவதை வழக்கமாக பின்பற்றுவதால், இந்த இரண்டு பயிற்சிகளையும் செய்வதால் ஏற்படும் ஒருமித்த பலன்களைப் பெற முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது இந்த ஆய்வு.
மேலும், மெனோபாஸ் பருவத்தை அடைந்த பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறைவதால் இதயத்தின் ரத்தநாளங்கள் இறுக்கமடைவது, மூட்டு இணைப்புகளில் நெகிழ்வுத்தன்மை குறைவு மற்றும் உயர்ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. மெனோபாஸ் அடைந்த பெண்களை, ஒரு நாளுக்கு 5 முறை 192 படிகள் ஏற வைத்து 4 வாரங்கள் பயிற்சி மேற்கொண்டு ஆராய்ந்ததில், அவர்களிடத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டதையும் கண்டறிந்துள்ளனர்.

மருத்துவம்

ஒமேகா(Omega) என்பது என்ன ?

உணவியல் நிபுணர்களும், மருத்துவர்களும் அடிக்கடி குறிப்பிடுகிற வார்த்தைகளில் ஒன்று ஒமேகா. மருத்துவ இதழ்களின் கட்டுரைகளிலும் இந்த ஒமேகா அதிகம் இடம் பெறுவதைக் கவனித்திருப்பீர்கள். இந்த ஒமேகாவுக்கு நம் ஆரோக்கியத்தில் அப்படி என்ன முக்கியத்துவம்?!

* ஒமேகா(Omega) என்பது நன்மை செய்யும் கொழுப்பு அமில வகையைச் சேர்ந்தது. 8 more words

மருத்துவம்