குறிச்சொற்கள் » ப.மாரிமுத்து

நீ,சமத்துவம்அடைவது எப்போது ?

இருப்பவரிடம் நீ
இழைப்பாருவதும்
ஏழைகளை ஏமாற்றுவதும் ,
தாய்மார்களிடம் தாகத்தை ஏற்படுத்துவதும்
அண்ணன்தம்பியை அநியாயமாய் பிரிப்பதும்,

படிப்பின் முலம் பறிப்பதும்
மருத்துவத்தின் முலம் மலைபோல் குவிவதும்,

தவமாய் கிடைத்த தன்மானத்தை
உன்னால் இழப்பதும்,

நீ,இருக்கும் ஆணவத்தில்
பெரியவர்,சிறியவர் பேதமின்றி
வார்த்தைகளால் வசைபாடுவதும்

முதுமையில்,அன்னைமார்களை
கருணையில்லாமல் கையேந்தவிடுவதும்,
அப்பாக்களை உனக்காக அலைய விடுவதும்

அரசியலிலும்.அலுவகத்திலும் அசிகப்படுத்தும்
உயிரே இல்லாமல்
பிறர் உயிரை பறிக்கும் பணமே
நீ சமத்துவம் அடைவது எப்போது ?

ப.மாரிமுத்து
சேத்தூர்-9443473213

ப.மாரிமுத்து

மகிழ்ச்சியேவருக! மனநிறைவை தருக!

அதிகாலை நாலுமணிக்கு எழுந்து சிமிழ் விளக்கை ஏற்றி விட்டு ,அம்மா அப்பாவை தூங்க விடாமல் அரைதூக்கத்தில் எழுப்பி, எண்ணைய் தேய்க்க சொல்லி அரைகுறையாய் குளித்துவிட்டு, டெய்லரிடம் டவுசர் சட்டை வாங்க தவம் கிடந்து,அவர் சொல்லும் வேலையெல்லாம் நாம் செய்து , பட்டன் வைத்தவுடன் பெரும் முச்சு விட்டு, சட்டையை வாங்கிஉடுத்தி பட்டாசுவாங்க அப்பாவிடம் பாரதப்போர் நடத்தி ஒத்த ருபாய் கொடுக்கும் முன் ,அவர் செய்யும் அர்சனை அத்தனையும் வாங்கிவிட்டு, சீனி வேட்டு வாங்கிபோட்டு அது வெடிக்கும் போது முன் பற்கள் அத்தனையும் தெரிய சிரிக்கும் அந்த குழந்தை பருவத்தில் நாம் அடைந்த மகிழ்ச்சி, மகத்தானது வாழ்வில் மறக்க முடியாதது. ஐடி ஊழியர் பெறும் முதல் சம்பளத்தை விட உயர்வானது.
பருவமெய்தி வாலிப பருவத்தை அடைந்தவுடன், வேலைவாய்ப்புக்காக வெளியுர்களின் சென்றவுடன்தான் , பாட்டி ,தாத்தா, அப்பா, அம்மா. அக்கா தம்பி நண்பர்கள் ஆகிய உறவுகளின் பிரிவு நம்மை வாட்டி வதைக்கும். அவர்கள் அன்பிற்காக ஏங்கும் நாம் , பண்டிகை காலத்தில் அவர்களை பார்க்க போகிறோம் என் மகிழ்ச்சியில் மாதங்களை, நாட்களையும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் அற்புதமான நாளில் ஒன்று தீபாவளி திருநாள்.
ஒரு நரகாசுரனை வீழ்த்தியதற்காக இத்தனை மகிழ்ச்சியடைகிறோம். மதத்தின் பெயரில்,சாதியின் பெயரில், அரசியலின் பெயரில் வன்முறை நிகழ்த்தும் ஆயிரம் நவீன நரகாசுரன்கள் உருவாகிவிட்டார்கள். அதனால்தான் மகிழ்ச்சிக்காக நாம் ஏங்க வேண்டிருக்கிறது. ஐந்நூறுருபாய் கட்டணத்திற்கு ஆயிரத்து ஐந்நூறு கொடுத்து நாம் பயணம் செய்ய வேண்டிருக்கிறது. இந்தியா போன்ற வளமான தேசத்தில் வேலை வாய்ப்பின்றி தவிக்கும் நிலைக்கு நாம் ஆளாகியிருக்கிறோம். அறிவெனும் ஆயுதம் கொண்டு நாம் இவர்களை வீழ்த்தினால் வாழ்நாளெல்லாம் வாழலாம் நாம் மகிழ்ச்சியுடன்…

ப.மாரிமுத்து
சேத்தூர்-9443473213

ப.மாரிமுத்து

விதையாய் வீழ்ந்து மரமாய் எழுந்த மலரே !

விதையாய் வீழ்ந்து

மரமாய் எழுந்த மலரே !

நீ பிறந்தவுடன்

பெண்கழுதைஎன பிதற்றியவன் நான் ,

பிஞ்சு கரங்களால் கழுத்தை பற்றினாய்,

பஞ்சு கால்களால் நெஞ்சில் உதைத்தாய்,

நெஞ்சில் உதைத்ததனால் என்னவோ

கல்லாய்இருந்தஎன் இதயம்

கனியாய் மாறியது!

முரட்டுமீசையை

நீ முன்அனுமதியில்லாமல்

இழுத்து முறுக்கும்பொதும்!

என் தலைமேல் உன் தலைவைத்து

மோதும் போதும்,

ஆறுமாதமாய் நான் செய்த

அறுபடையின் பலனை

அனுபவித்ததாய் உணர்கிறேன் கண்ணே !

நீ எனக்கு ஊட்டிய சோறு ‚

தேய்த்து விட்ட எண்ணெய் ,

வகிரெடுத்து சீவிய தலை ,

சிதரிய சில்லரைபோல் உன் சிரிப்பு ,

தவறிய என் அன்னையை

உன் வடிவத்தில் பார்த்தென் என் உயிரே !

இந்த பாறையில் விதையை வீழ்ந்து

மரமாய் எழுந்த மலரே ,

திருமணம் எனும் பெயரில்

அறிமுகமில்லா பாறையிடம்

உன்னை அர்ப்பணிக்கிறென் என் உயிரே !

ப.மாரிமுத்து

சேத்துார்

ப.மாரிமுத்து

வணக்கத்திற்குரிய சரஸ்வதியே…. வழங்காயோ

உன் கல்வி கவிதைபோல்,

கட்டுரைபோல்,

மழையின் நாவில் நர்தனமாடட்டும்

ஏழை மக்களுக்கு அது எட்டும்

தூரத்தில் அமையட்டும்

எல்லாக்கல்வியும் இலவசமாய்

எல்லாரும் பெற அருள்வாயே

கல்வியின் அதிபதி சரஸ்வதியே.

இல்லாத பாடத்தில் இது என்னகேள்வி?

உன் கல்வியில் குழந்தைகளுக்கு

புதிதாய் ஒருவேள்வி?

ஏழை அனிதாவின் மரணம்

அதுவே நீட் தேர்வுக்கு

நிறைவாக நிற்கட்டும்

உன் கல்வி கண் ஏழைகளுக்கு

இனிதாவது திறக்கட்டும்

அட்சய மாத்திரமே. அருள்வாயே

                                                                                                           ப. மாரிமுத்து _சேத்தூர்

                                                                                    9443473213.

ப.மாரிமுத்து