குறிச்சொற்கள் » புண்ணியரெத்தினம் சு

காயத்திரி சித்தர் முருகேசு சுவாமிகளின் மாமாங்க மகாசமாதி தினம் 24.09.2019

கலியுக அவதார புருஷர் காயத்திரி சித்தர்  பகவான் ஸ்ரீ முருகேசு சுவாமிகளின் மாமாங்க மகாசமாதி தினம் ( 12வது சமாதி தினம்) எதிர்வரும் 24.09.2019ம் திகதி செவ்வாய்க்கிழமை மண்டுர் பாலமுனை ஸ்ரீ ஆத்மஞானபீடத்தில் சித்தர் மகாயோகி ஸ்ரீசற்குரு புண்ணியரெத்தினம் சுவாமிகளின் தலைமையில் மிக கோலாகலமாக இடம்பெறவுள்ளது. 493 more words

புண்ணியரெத்தினம் சுவாமிகள்

பௌர்ணமி தின பூசையும் மகாயாகமும்- புரட்டாதி 2019

ஓம் குருவே துணை!

மட்டக்களப்பு ஸ்ரீ பேரின்பஞான பீடத்தில் மாதந்தோறும் பூரணை தினத்தில் உலக சேமத்துக்கான மகா யாகம், பூசை, மந்திர ஜெபம், ஆன்மீக அருளுபதேசம், அன்னதானம் என்பனவற்றை செய்து உலக மக்களை காத்து, பிறவிக்கடன் நீக்கி பிறவாப் பேரின்பநிலை அடைய வைக்கவல்ல அரும்பணி ஆற்றிக்கொண்டிருக்கின்றார் மட்டக்களப்பு ஸ்ரீ பேரின்பஞான பீடத்தின் ஸ்தாபகரும், காயத்திரிச் சித்தர் ஸ்ரீ முருகேசு மகரிஷி அவர்களின் பிரதம மாணவருமான மகாயோகி ஸ்ரீ சற்குரு புண்ணியரெத்தினம் சுவாமிகள். 100 more words

புண்ணியரெத்தினம் சுவாமிகள்

மனிதா! அறம் சார்ந்து வாழப் பழகிக் கொள்; வாழ்க்கையில் என்றென்றும் சந்தோசமாய் வாழ்வாய்!!

ஆன்மீக மெய்யன்பர்களுக்கு இனிய வணக்கங்கள்…. பிரபஞ்ச இயக்கத்தில் புவியிலே பிறப்பெடுத்துள்ள மனிதர்கள் தொடக்கம் அனைத்து ஜீவராசிகளும் அறம் எனும் தர்மத்தினை சார்ந்து வாழப் பழகிக் கொண்டால் வாழ்வில் துன்பம் ஏது துயரம் ஏது இவ்வாறான தலைப்பிலே சற்குருநாதர் ஆன்மீகக்குரு மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகள் உலக மக்களின் மனதினை பீடித்துள்ள காம, லோப, மோக, மத, மாத்சர்ய, அகங்கார, ஆணவ மாயைகளை போக்கி அகத்தூய்மையான மகிழ்வு நிறைந்த பேரின்ப வாழ்வினை வாழ்ந்து பெரும் பேறான ஆன்ம ஈடேற்றத்தினை பெறவைத்திட அருளிய ஞான உபதேசத் தொகுப்பினை தொடர்ந்தும் தரவிருக்கிறோம். 1,247 more words

புண்ணியரெத்தினம் சுவாமிகள்

பிரார்த்தனை

ஆன்மீக மெய்யன்பர்களுக்கு இனிய வணக்கங்கள்…

நாம் இணையத்தளங்கள் வாயிலாக பல்லாயிரக்கணக்கான உலகியல் வினோத நிகழ்வுகளை காணொளிகளாக செய்தியாக மற்றும் நேரிலுமாக காண்கிறோம் மகிழ்கிறோம். ஆனால் நம் அறிவினை விருத்தி செய்து அகத்தினுள் வீற்றிருக்கும் மாபெரும் மகிழ்ச்சியினை அதாவது பேரின்பத்தினை காண முயலவில்லை. 1,145 more words

புண்ணியரெத்தினம் சுவாமிகள்

நினைப்பேதான் (எண்ணம்) வாழ்க்கை; அவசியம் படியுங்கள்!!

ஆன்மீக மெய்யன்பர்களுக்கு இனிய வணக்கங்கள்.. மேலே வழங்கப்பட்டுள்ள தலைப்பினை உள்வாங்கி இந்த ஆன்மீகத் தொகுப்பு சற்குருநாதர் மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளின் அருள் ஆசியுடன் அனைத்து மக்களின் நலன் கருதி வெளியிடப்படுகிறது.

சுவாமிகளை நாடி அவர் அருளினை பெற்றிட விரைந்திடும் பக்தர்களில் ஒரு சிலர் அவரை அணுகி பல வாழ்வியல் வினாக்களைத் தொடுப்பார்கள் ஒரு சிலர் இதனை இன்றே கேட்டுத் தெளிவு பெற வேண்டும் என்று நினைத்துக் கொண்டு சென்று அமர்ந்திருப்பார்கள் ஆனால் அவர்கள் கேள்விகளை தொடுக்கும் முன்பதாகவே சுவாமிகளின் அருள் உபதேசம் அவர்களுக்கான தெளிவான பதிலினை நல்கி விடும் இவ்வாறு சில பக்தர்கள் சுவாமிகளிடம் வினவிய வினாக்களும் அவற்றுக்கான தெளிந்த பதில்களையும் கீழே தரவிருக்கிறோம். 837 more words

புண்ணியரெத்தினம் சுவாமிகள்

மனிதர்கள் தங்களை சூழ்ந்துள்ள துன்பங்களை வென்றிட யாரை நாட வேண்டும் (தொடர்-03)

இத்தொகுப்பின் முன்னைய பாகங்களை இங்கு படிக்கவும்….

  1. தொடர் 01
  2. தொடர் 02

மனதினை வெற்றி கண்டு இன்பமான வாழ்வினை வாழ்ந்திட யாரின் வழிகாட்டல் அவசியமாகிறது?..

முதலில் மனதினை அறிந்தோம் அடுத்து மனத்திற்கும் மனிதனுக்குமான தொடர்பினை அறிந்தோம் பின்னராக மனதினை எவ்வாறு ஒரே திசையில் பயணிக்கச் செய்வது அவ்வாறு பயணிக்கச் செய்வதினால் ஏற்படும் நன்மைகள் என்ன என்றும் அவ்வாறு குறிக்கோளற்று செயல்படும் மனதில் எவ்வாறான சிக்கல்கள் தோன்றுகின்றன அதனால் ஏற்படும் அதிபயங்கர நிகழ்வுகளையும் பல உதாரணங்கள் மூலம் ஆன்ம விசாரணை செய்து அறிந்து தெளிந்து கொண்டோம்; அடுத்து இந்த விடயங்களையெல்லாம் பின்பற்றி வெற்றி கண்டிட வழிகாட்டி ஒருவரின் அனுக்கிரகம் வேண்டுமல்லவா! 569 more words

புண்ணியரெத்தினம் சுவாமிகள்

இருமனப் போராட்டம்; அதனை வென்றிட மேற் கொள்ள வேண்டிய ஆழ் நிலைத் தியானமும் (தொடர்-02)

இத்தொகுப்பின் முன்னைய பாகமான தொடர் 01 இனை இங்கு படிக்கவும்….

ஆழ் நிலைத் தியானத்தில் மனம் நான் அல்ல, நான் எனப்படுவது ஆன்மா. ஆன்மாவின் செயலைப் பிரதிபலிப்பதுதான் மனம் எனும் ஆன்ம தெளிவு எம்முள் ஏற்பட்டுவிடும் இதற்கு இன்னுமொரு உதாரணமும் கூறலாம்; ஒருவர் பணம் பொருள் ஈட்டுவதற்காக தமது குடும்பத்தை மனைவி மக்களை பிரிந்து வெளிநாடொன்றிற்கு செல்கிறார். 419 more words

புண்ணியரெத்தினம் சுவாமிகள்