குறிச்சொற்கள் » நிகழ்வுகள்

இடமாற்றம்

பிளாகிங் கொஞ்சம் போரடிக்கிறது. அதே பழைய தீம்கள். அலுப்பூட்டும் வடிவமைப்பு. சொந்த வீடா என்ன மாற யோசிக்க? கொஞ்சம் வசதியான வெளிச்சமும் காற்றோட்டமுமான இடத்திற்கு மாறிக்கொள்வதைப்போல மாறிப்பார்க்கிறேன். இதன் சாதக பாதகங்கள் தெரியவில்லை.

முயன்று பார்ப்போம் இல்லை என்றால் பழைய வீட்டுக்கே போய்விட வேண்டியதுதான்.

கவிதை

ஷ்ரெட்டிங் மெஷின்!

வாழ்க்கை நிகழ்வுகள் எதற்கும் சம்பந்தம் கிடையாது. அதில் நாம் ஒரு தொடர்ச்சியான கதையாக அதை இதை ஒட்டவைத்து ஒரு கதையை உருவாக்கி ஒட்டவைத்து படித்து குழம்பி அங்கலாய்க்கிறோம்!
எ.கா.
பலப்பல செய்தித்தாள்களை பேப்பர் ஷ்ரெட்டிங் மெஷினில் போட்டால் அது அதைத் துண்டு துண்டாக நீளவாக்கில் வெட்டிவிடும். பின் அந்த மெஷினைத் திறந்தால் துண்டிக்கப்பட்ட காகிதங்கள் இருக்கும். அவற்றை ஒவ்வொன்றாக ஒட்டி படித்தால் ஒரு திகில் நாவலாகவோ அர்த்தமற்ற கதையாகவோ இருக்கும்.
மனம் – ஷ்ரெட்டிங் மிஷின்
துண்டுக் காகிதங்கள் – நினைவுகள்
செய்தித் தாள்கள் – அன்றாட நிகழ்வுகள்,நாம் மனதில் வாரிப்போடும் சினிமா,நாவல்,காதல்,கத்திரிக்காய்
ஒட்டிவைத்து படிப்பது – ஒவ்வொரு சம்பவத்தையும் தொடர்பு படுத்தி பொருள் காண முனைவது

பேரணி பகவான் ஸ்ரீ பார்ஸ்வநாதர் ஜினாலய பஞ்ச கல்யாண பெருவிழாவின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா

பேரணி 1008 பகவான் ஸ்ரீ பார்ஸ்வநாதர் ஜினாலய பஞ்ச கல்யாண பெருவிழாவின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா  புகைப்படங்கள்!

2018