குறிச்சொற்கள் » செய்திகள்

ஐக்கிய ஜமாஅத் சார்பில் இரங்கல் கூட்டம்.

தொண்டி ஐக்கிய ஜமாத் சார்பில் ராணுவ வீரர்களுக்கு இரங்கல் கூட்டம்

தொண்டி பாவோடி மைதானத்தில் காஷ்மீரில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து இரங்கல் கூட்டம் இன்று (19-2-2019) நடைபெற்றது.

இதில் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் மற்றும் தொண்டி அனைத்து தெரு முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புகைப்பட உதவி :
வழக்கறிஞர் ஆசிக்

தொண்டி செய்திகள்

கூட்ட‍ணி உதயம் - அதிமுக, பாஜக, பாமக

கூட்ட‍ணி உதயம் – அதிமுக, பாஜக, பாமக

கூட்ட‍ணி உதயம் – அதிமுக, பாஜக, பாமக

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிமுக மற்றும் பாஜக இடையே

செய்திகள்

நம்புதாளையில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

நம்புதாளை அரசு துவக்கப் பள்ளியில் ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

நம்புதாளை அரசு துவக்கப் பள்ளி நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி கூட்டம் 18-2-2019 இன்று நடைபெற்றது.

403 மாணவர்களும் அனைத்து ஆசிரியர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள் உடன் பள்ளியின் PTA தலைவர் செய்யது யூசுப் அவர்களும் கலந்துகொண்டார்கள்.

பதிவு நாள் 18-2-2019

செய்திகள்

சிரியா செய்திகள்!

ஃகான் ஷேய்ஃகூன் மற்றும் ம’அரட் அல் நுஃமான் ஆகிய இட்லிப் பிராந்திய பகுதிகளில் வாழும் மக்கள் மீது குறி வைத்து அரச படைகள் தாக்குதல்கள் நடத்தியுள்ளன.

மேலும், இட்லிப் நகரில் ஒரு கார் வெடிகுண்டு தாக்குதலும் மற்றொரு வெடி குண்டு தாக்குதலும் நடந்துள்ளது!!

கார் வெடிகுண்டு தாக்குதல்களில் மட்டும் 10 ற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்!! குழந்தைகள் உட்பட பலர் படுகாயமடைந்துள்ளனர்!!

செய்திகள்

நினைச்சு நினைச்சு ஏமாந்து போகிறேன் - நடிகை மேகா ஆகாஷ்

நினைச்சு நினைச்சு ஏமாந்து போகிறேன் – நடிகை மேகா ஆகாஷ்

நினைச்சு நினைச்சு ஏமாந்து போகிறேன் – நடிகை மேகா ஆகாஷ்

கதாநாயகியாக `ஒரு பக்க கதை’ படத்தின் மூலம் அறிமுகமான

செய்திகள்

சிரியா செய்திகள்!

தெற்கு இட்லிப் பிராந்தியத்தில் உட்பட்ட ஃகான் ஷேய்ஃகூன் (Khan Shaykhon) நகரில் அரசப் படைகள் நடத்திய தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட குறைந்தது 09 பொது மக்கள் இறந்துள்ளனர்!

கிட்டத்தட்ட 25 ற்கும் மேற்பட்ட பீரங்கி ஷெல் தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன!!

செய்திகள்

பள்ளபட்டி தெற்குமந்தை பகுதியில் டெங்குபீதி

பள்ளபட்டி தெற்குமந்தை தெரு ஆஜாத் நகரில், சிறுமிக்கு டெங்குகாய்ச்சல்.!

பள்ளபட்டி ஆஜாத்நகரில், சாக்கடை நீர் தேங்கிவருவதாலும், அருகிலுள்ள குப்பைகிடங்கிலிருந்து திடீர் புகையினாலும், அப்பகுதியினர் பெரும்அவதியுற்று வருவதாக கூறுகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் வசித்துவரும் SM அபூதாஹிர் அவர்கள் கூறுகையில், கடந்த ஒருவாரமாக எனது 7 வயது மகளுக்கு காய்ச்சலாக இருந்துவந்தது., காய்ச்சல் தொடர்ந்து குறையாததால், கரூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்து பரிசோதித்தோம். மருத்துவர்கள் டெங்கு என்றனர்., வீட்டில் அனைவரும் பீதியடைந்துள்ளோம். உடனடியாக அதேமருத்துவமனையில் தொடர்சிகிச்சை கொடுத்துவருகிறோம்., இதற்கு காரணம் வீட்டின் அருகேயுள்ள சாக்கடையில் பலவாரமாக சாக்கடைநீர் போகாமல் அப்படியே தேங்கியுள்ளதால்தான். துப்புரவாளர்களிடம் பலமுறை சுட்டிகாட்டியும் அவர்கள் சாக்கடையிலுள்ளவற்றை மட்டுமே வாரிபோட்டுவிட்டு செல்கின்றனர்.. ஆனால் முக்கிய பிரச்சனை சாக்கடைநீர் தேக்கம்தான். அதுமட்டுமல்ல வீட்டின் அருகேயுள்ள குப்பைகிடங்கில் அப்பப்ப புகையேற்பட்டு, மூச்சு தினறலாகி போகிறது…! எனது குடும்பத்தில் பலருக்கு, ஏதாவது சுகாதார தொந்தரவு ஏற்பட்டு அவதியுறுகிறோம்.

எனவே பள்ளபட்டி பேரூராட்சி நிர்வாகம், இவற்றை கவனத்தில்கொண்டு சாக்கடைநீர் செல்லும்படியான சூழலை அமைத்துதரவும், குப்பைகிடங்கின் மக்கிய குப்பைகளை உடனே அகற்றி, விவசாயிகளுக்கு விற்பனை செய்து, புகையேற்படாமல் பார்த்துகொள்ள வேண்டும். என்பதாக கூறினார்.

பேரூராட்சி அதிகாரிகள், மற்றும் சுகாதாரபிரிவு அதிகாரிகள் உடனடியாக இதை கவனத்தில்கொண்டு நேரடியாக ஆய்வு செய்து, அப்பகுதியினருக்கு சுகாரத்தை உறுதிசெய்து கொடுக்க வேண்டும்.

செய்தி