பாட்ட மாத்தி டவுன்லோட் பண்ணுங்க நல்லது😎🤗

“சின்ன கண்ணன் அழைக்கிறான்” ன்னு ஒரு பாட்டு கவிகுயில்ன்னு ஒரு பழைய படத்துல இருக்கும் . அந்த பாட்டுல ஆரம்பத்துல வர புல்லாங்குழல் அப்படியே மிதக்க வெக்கற மாதிரியிருக்கும். சரி டவுன்லோட் பண்ணி கேப்போம்னு யோசிச்சு அதுக்கு முன்னாடி நம்ம மீடியா பார்ட்னர்கிட்ட கேப்போம்னு கேட்டு அவ டவுன்லோட் பண்ணி அனுப்பினது. சின்ன கண்ணன் அழைக்கிறான் ஜானகி வெர்ஸன் அதுல புல்லாங்குழல்க்கு பதிலா நாதஸ்வரம் மேளம் வரும். அதே இடத்துல. அப்பறம் ரெண்டாவது முறை பாலமுரளி கிருஷ்ணா வெர்ஸனும் அனுப்பிட்டா. ரெண்டும் வேற வேற சூழ்நிலைல வர பாட்டு. ஒரே டியூன். இந்த மாதிரி சோகம் சந்தோசம்க்கு ஒரே பாட்டு ரெண்டு முறை வந்தா ஒன்னு டியூன்ன இழுத்து வேற மாதிரி போடுவாங்க, லிரிக்ஸ் மாத்தி போடுவாங்க. ஆனா இது ரெண்டும் ஒரு வார்த்தை கூட மாற்றமே இல்லாம கிட்டத்தட்ட அதே டியூன் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ்லையே அவளோ வித்தியாசம் காமிச்சு பாடகர்கள் குரல்லையும் உணர்வுகளையும் வித்தியாசப்படுத்தி அவளோ அழகா பாட்ட வேற வேறயா ஃபீல் பண்ண வெச்சிருக்காரு. பால முரளி கிருஷ்ணா சாரும், ஜானகி அம்மாவும் செம்ம போட்டி போட்டு தனி தனியே ஆவர்த்தனம் பண்ணியிருக்காங்க. வரிகளை தாண்டி அந்த சூழலை அந்த பாட்டு பாடறவங்க குரல் உணர்வுளையும் பின்னணி இசைலயும் கடத்தறதுக்கு செம்ம உதாரணம் “நெஞ்சில் உண்டாகும் இதுதானா கண்மணி ராராதா” இதுல ஆரம்பிச்சு அந்த பத்திய ரெண்டு பாட்டுலையுமே கேட்டுப்பாருங்க. கண்டிப்பா ரொம்ப வாவ் ஃபீல் குடுக்கும்.

படம் வந்த வருசத்துக்காக விக்கி போனேன் பாட்ட கேட்டு நான் எதிர்பார்த்தது போலவே தான் ரெண்டு பாட்டுவர சூழலும் இருந்திருக்கு.

சினிமா

யாஷிகாவின் அந்தரங்கத்தை விமர்சித்த நபர் - ஆவேசத்தில் திட்டிய யாஷிகா

தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் யாஷிகா உடல் பாகம் தெரியும் அளவில் பதிவிட்ட புகைப்படத்தை கண்ட ஒருவர் யாஷிகாவின் அந்தரங்கத்தை விமர்சித்துள்ளார். அதற்கு யாஷிகா ஆவேசத்தில் மிகவும் கொச்சையாக பதிலளித்துள்ளார்.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை தொடந்து பிசியாக உள்ள யாஷிகா,அவ்வப்போது தனது அரைகுறை புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார். இதனால் சமூக வலைத்தளங்களில் அவரை பல லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் தனது உடல்பாகம் தெரியும் அளவிலான ஒரு படுமோசமான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு யாஷிகாவின் தங்கை கிண்டலாக கமெண்ட் செய்திருந்தார்.

இதற்கிடையில் இணையதளவாசி ஒருவர் யாஷிகாவின் தங்கையிடம், உங்கள் அக்காவிடம் இப்படி மார்பகத்தை காட்டக்கூடாது என்று சொல்ல மாட்டீர்களா என்று அட்வைஸ் செய்துள்ளார். இதற்கு யாஷிகாவின் தங்கை, என் அக்காவை பற்றி பேச உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று கடும் கோபத்துடன் கமெண்ட் செய்தார்.

அதை தொடர்ந்து யாஷிகா, உங்க அம்மா இதுபோன்ற காட்சிகளை பார்க்க கற்றுக்கொடுத்தாரா? இல்லை, அப்ப மூடிட்டு போ என்று மோசமான வார்த்தையால் அந்த நபரை திட்டி தீர்த்தார். இதனை இணையத்தில் பார்த்த சிலர் யாஷிகாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.

சினிமா

மேலாடையை திறந்தபடி நிகழ்ச்சிக்கு வந்த பிரியங்கா சோப்ரா

பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட் வரை பிரபலமான நடிகைதான் பிரியங்கா சோப்ரா. இவர் சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு டி.வி நிகழ்ச்சியில் உள்ளாடை அணியாமல் மேலாடை திறந்த நிலையில் உடலை காட்டியபடி கலந்துகொண்டார்.

உலக அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா தன்னைவிட வயது குறைந்த அமெரிக்க பாடகர் நிக் என்பவரை சமீபத்தில்தான் திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்த பல புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் கூட இவர்கள் படுக்கை அறையில் எடுத்த ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

திருமணமாகி தற்போது அமெரிக்காவில் இருக்கும் பிரியங்கா சோப்ரா அங்குள்ள ஒரு டி.வி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு வந்த பிரியங்கா சோப்ரா உள்ளாடை எதுவும் அணியாமல் மேலாடையையும் திறந்துவிட்ட படி உடை அணிந்து வந்துள்ளார். அந்த நிகழ்ச்சியின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. https://youtu.be/MmIMHIgX__A

திருமணத்திற்கு பிறகும் இப்படியா என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

சினிமா

சிம்புவை நேரில் சென்று வாழ்த்திய தனுஷ்

சென்னையில் தனது பிறந்தநாளை கொண்டாடிய சிம்புவிற்கு தனுஷ், ஜெயம் ரவி, யாஷிகா ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த வாரம் சிம்பு நடித்த “வந்தா ராஜாவாதான் வருவேன்” படம் வெளியானதையடுத்து இன்று தனது பிறந்தநாளை கிண்டியில் உள்ள ஒரு விடுதியில் வைத்து கொண்டாடிய சிம்பு தனது நெருங்கிய நண்பர்களையும் சினிமா நட்சத்திரங்களையும் அழைத்திருந்தார். இது பிறந்தநாளோடு கூடிய படத்தின் வெற்றியையும் கொண்டாடும் வகையில் அமைந்தது.

பிறந்தநாள் விழாவில் நடிகர்கள் தனுஷ், ஜெயம் ரவி, மஹத், ஹரீஷ் கல்யாண், நடிகைகள் யாஷிகா, ஐஸ்வர்யா தத்தா ஆகியோரும் கலந்துகொண்டனர். எஸ்.டி.ஆர் என எழுதப்பட்டிருந்த கேக்கை சிம்பு வெட்டியவுடன், தனுஷ் உள்ளிட்டவர்களுக்கு ஊட்டினார். இந்த வீடியோவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று நடக்கவிருக்கும் இளையராஜா 75 இரண்டாம் நாள் இசை நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா

The starting point of reformation: Anger or Pity?

When I watched Ashutosh Gowarikar’s Swades & Lagaan movies, I was angrier at the way Dalits in the movies had been treated. Both the movies show Dalit characters as a weak & submissive character who don’t fight for their dignity. 803 more words

17 ஆயிரம் ரசிகர்களுடன் இன்று தொடங்கிய இளையராஜா 75

இசையமைப்பாளர் இளையராஜா அவர்களின் 75 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தும் இளையராஜா 75 இசைநிகழ்ச்சி இன்று தொடங்கியது. இதில் சுமார் 17 ஆயிரம் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இசையமைப்பாளர் இளையராஜாவை கவுரவப்படுத்த ‘இளையராஜா 75’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்றும், நாளையும் நடத்தப்படுகிறது.

விழா இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. தென்னிந்திய திரையுலகினர் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும் இருந்து சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் பங்கேற்கின்றனர். கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார். துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இன்று மாலை சினிமா பிரபலங்களின் கலைநிகழ்ச்சி, காமெடி நிகழ்ச்சி மற்றும் இசைநிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை மாலை இளையராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள்.

‘இளையராஜா 75’ நிகழ்ச்சியை முன்னிட்டு, நந்தனம் பகுதியில் வாகன நெரிசலை தவிர்ப்பதற்கு போக்குவரத்து போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

சினிமா

மே 22 ஒரு சம்பவம் - படமாகும் தூத்துக்குடி துப்பாக்கிசூடு

கடந்த வருடம் நடந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியான நிலையில், அந்த சம்பவம் தற்போது படமாக போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வருடம் தமிழ்நாட்டையே உலுக்கிய ஒரு சம்பவம் தான், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக போராட்டத்தின் 100 வது நாளான மே 22 அன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். அப்போது அவர்கள்மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் அந்த சம்பவத்தை படமாக்கப்போவதாக இயக்குனர் சந்தோஷ் கோபால் அறிவித்துள்ளார். இவர் ஜல்லிக்கட்டு, பசுமை வழிச்சாலை போன்ற தமிழ்நாட்டின் பிரச்சனைகளையும் படமாக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா