குறிச்சொற்கள் » கிராமம்

அப்பாவின் அலமாரி

அப்பாவின் அலமாரி

அப்பாவின் அறையில்
ஒரு ஓரமாய்
அமைதியாய் இருந்தது
அந்த அலமாரி.

அதைத் திறக்கும்
அனுமதி
எங்களுக்கெல்லாம்
தரப்படவில்லை.

அதற்குள்
அலாவுதீன் பூதம்
அடைபட்டுக் கிடப்பதாய்
எங்கள்
கற்பனைகள் கண்ணடிக்கும்..

புதிர்களை அவிழ்க்கும் 106 more words

இலக்கியம்

நினைவுகள் வாழும் வீடு

நினைவுகள் வாழும் வீடு


மௌனத்தின்
பதுங்கு குழியாய்
சலனமற்றிருக்கிறது
குடும்ப வீடு.

குருவிகளற்ற கூடாய்
அது
எதிர்பார்ப்புகளின்
ஏக்கங்களைச் சுமந்து
காத்திருக்கிறது.

பழமையின்
சுவடுகள் கலையாமலிருக்க
சருகு போர்த்தி
அடைகாக்கிறது
முற்றம்

சத்தங்களோடு
சல்லாபிக் கிடந்த காற்று 51 more words

TAMIL POEMS

மரங்களும், நாங்களும்

மரங்களும், நாங்களும்

மரங்களே
எங்கள் அடையாளங்களாய்
இருந்தன.

மரங்களை வைத்தே
எதையும்
அறிமுகம் செய்தோம்.

பெரிய புளியமரத்துக்கு
தெக்கே
இருந்தது
தண்ணீர்க் கிணறு.

விழுதிறக்கிய
ஆலமரம் தாண்டிப் போனால்
சர்ப்பக் குளம்.

வளைந்த
தென்னைமரத்துக்கு 37 more words

POEMS

திரும்பும் காலம்

திரும்பும் காலம்

உமியைச் சேகரித்து
நெருப்பில் சுட்டு
உப்புடன் கலந்து
பல்தேய்த்த காலம்
பழசு.

வேப்பங்குச்சியை
பதமாய் ஒடித்து
பல்துலக்கிய
கசப்புப் பொழுதுகள்
பழசு.

கொட்டாங்குச்சியில்
குச்சி சொருகி
கரண்டியாய்ப்
பயன்படுத்திய
காலமும் பழசு. 38 more words

POEMS

Kavithai : அன்றைய பொழுதுகள்

அன்றைய பொழுதுகள்

அரைடவுசர்
காலங்களில்
பல்டியடித்த குளங்களில்
முழங்காலளவு சகதி.

எருமை குளித்து
கரையேறிய
படிக்கரையில்
புரண்டு விளையாடிய
பொழுதுகள்.

சிப்பி பொறுக்கி
மீன் பிடித்து
கலங்கிய குளத்தில்
குளித்து கரையேறிய
நினைவுகள்.

பந்தடி களத்தில் 51 more words

POEMS

தண்ணீர்!

தண்ணீரை காப்போம்! நம் முன்னோர்கள் வழியை பின்பற்றுவோம்!

கேரளா மற்றும் கர்நாடகாவில் தொடர் கன மழையின் காரணமாக காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, முக்கொம்பு அணையில் இருந்து அதிக தண்ணீரை கொள்ளிட ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. 184 more words

தமிழகம்