காலா: சாமியார் கண்ட ஷோலே!

முன்குறிப்பு:
ஏறத்தாழ ஒன்றரை மாதம் முன்பு காலா படத்தை ஒரே ஒரு முறை பார்த்த நினைவிலிருந்து எழுதுகிறேன். கபாலியின் ‘மாயநதி’ பாடலுக்கு மயங்காதவர்கள், ரஜினியை விமர்சித்தால் கமல் ரசிகன் அல்லது பிஜேபி விரோதி, ரஞ்சித்தை விமர்சித்தால் ஆதிக்க சாதி வெறியன் அல்லது ரஜினி ரசிகன் ஆகிய நுட்பமான புரிதல்கள் வாய்க்கப் பெற்ற அன்பர்கள் மேற்கொண்டு படிப்பதைத் தவிர்க்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

தமிழ்

காலா - விமர்சனங்கள் பலவிதம்

ரஜினிகாந்த் படத்திற்கென்று ஒரு டெம்பிளேட் உண்டு.  அப்பாவியாக சிறிது நேரம், அந்த அப்பாவி தனத்திற்காக அவரை விரும்பும் நாயகி, அவருடய பொறுமை மற்றும் பொறுப்பிற்காக ஊரே அவரைக் கொண்டாடுவது, காமெடி கலந்த சண்டைக்கு காட்சி, வில்லனுடன் மோதல், பிறகு வீறு கொண்டு எழுந்து வில்லனை அழிப்பது. இந்த டெம்பிளேட் களத்துடன் தான் பலவருடங்களாக ரஜினிகாந்த் படங்கள் வந்திருக்கின்றன. இந்த டெம்பிளேட்டை எதிர்பார்த்தே அவர் படங்களுக்கு செல்கின்றனர்.

ரஜினிகாந்த் படங்கள் எப்பொழுதும்  நல்ல பொழுது போக்கு அம்சங்களுடன் உள்ள படமாக இருக்குமே அன்றி சீரியசான சமூக கருத்தோ அல்லது வாழ்வியல் முறை குறித்த விவாதங்களோ இருக்காது. சுமார் இரண்டரை மணி நேரம் லாஜிக் பார்க்காமல் மகிழலாம் என்று படத்திற்கு வருவோரே அதிகம்.

ரஜினிகாந்தின் படத்தை பார்ப்பவர்கள் அல்லது விமர்சிப்பவர்கள், நல்ல சினிமா ரசிகர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தீவிர ரஜினி ரசிகர் அல்லது எதிர்ப்பாளராக இருந்தால் போதும்.

ரஜினிகாந்திற்கு பிடிக்கிறதோ புரிகிறதோ அவர் படங்களை ஒரு திருவிழா போல தான் அவர் ரசிகர்கள் பார்க்கிறார்கள். பிறகு, அந்த படத்தைப் பார்த்து மாய்ந்து மாய்ந்து எழுத அல்லது பேசவேண்டும். எதிர்போருக்கும்  அதே நிலை தான்.  காலாவும் அதற்கு விதிவிலக்கில்லை.

கமல்ஹாசன் படம் வந்த பிறகு அதற்கு சில விளக்க உரைகள் வரும். அந்த விளக்க உரைகள் பார்த்த பிறகு தான், படத்தின் பல அம்சங்கள் புரியும்.  இந்த முறை, காலாவிற்கும் விளக்க உரைகள் வந்து கொண்டு இருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் படத்தின் டைரக்டர் ரஞ்சித்.

தமிழில் சில நடிகர்கள் தங்களை ஒரு சாதியினருடன் அடையாளப்படுத்திக்க கொண்டனர்; அவர்களுக்கு சாதி சார்ந்த ரசிகர்கள் கிடைத்தனர். டைரக்டர்களுள் எவரேனும் தன்னை ஒரு மதம் அல்லது சாதியுடன் அடையாளப் படுத்திக் கொண்டதாக நினைவில்லை. டைரக்டர் ரஞ்சித் தன்னை ஒரு சாதிய வட்டத்திற்குள் அடைத்துக் கொள்வதால், அவர் படங்களுக்கு அரசியல் அல்லது சாதிய சாயம் பூசப்படுகிறது.  இதனை அவரும் ரசிப்பதால், ரஞ்சித்திற்கு ஒரு விதமான ரசிகர்களும் எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள்.

காலா பாடல் வெளியீட்டின் போது ரஜனிகாந்த் கூறியது போல, இவர் படங்கள் எதற்கு ஓடுகிறது என்பதே இன்னும் பலருக்கு தெரியவில்லை. சமீப காலங்களில் அது ரஜினிகாந்த்திற்கே தெரியாததால் தான் லிங்கா கபாலி போன்ற படங்களில் அவர் நடித்தார்.  அது காலாவிலும் தொடர்கிறது எண்ணத் தோன்றுகிறது.

சினிமாவைத் தாண்டி தனிநபர் விருப்பு வெறுப்பு கொண்டு  காலா படத்தைப்  பார்க்க செல்வதால், விமர்சனங்களும் அதற்கேற்றாற் போல் இருக்கிறது. இந்த பதிவு விமர்சனங்களை அதன் விமர்சகர்களின் மூலம் பிரிக்க முயலுகிறது.

விமர்சகர்களை  நான்கு விதமாக பிரிக்கலாம்.

  1. ரஜினி, ரஞ்சித் இருவரையும் பிடிக்கும்
  2. ரஜினியை பிடிக்கும், ரஞ்சித்தை பிடிக்காது
  3. ரஜினியை பிடிக்காது, ரஞ்சித்தை பிடிக்கும்
  4. ரஜினி, ரஞ்சித் இருவரையும் பிடிக்காது

காலா விமர்சனங்கள் இந்த நான்கு வகையான விமர்சகர்களால் எழுதப்பட்டவையே.

முதல் வகை: ரஜினி, ரஞ்சித் இருவரையும் பிடிக்கும்

இந்தப்  படம், உலக திரை வரலாற்றில்  ஒரு மைல்கல் என்னும் அளவிற்கு புகழ்ந்து தள்ளி இருக்குமெனில் இந்த வகை விமர்சனங்கள் முதல் வகை ரசிகர்களால் எழுதப் பட்டது. ரஜினியை அதிகமாக புகழ்ந்து, ரஞ்சித்தை கொஞ்சமாக புகழ்ந்திருந்தால், இவர் முதலில் ரஜினி ரசிகர்; பிறகு அந்த படத்தின் இயக்குனரின் ரசிகர். விமர்சனத்தில் ரஞ்சித்திற்கு அதிக புகழ்ச்சியும், ரஜினிக்கு சிறிது கம்மியாக இருக்குமாயின், இவர் ரஞ்சித்தின் ரசிகர், ரஜினி படம் பார்க்க வந்திருக்கிறார் என்று அர்த்தம்.

இந்த முதல் வகை விமர்சகர்கள், முதல் நாள் படம் பார்த்துவிட்டு ஒரு உணர்ச்சிவயப் பட்ட நிலையயில் எழுதுபவர்கள். இவர்களின் விமர்சனங்களை நம்பி படத்திற்கு சென்று ஏமாந்தர்வர்கள் எப்பொழுதும் அதிகமாகவே இருப்பார்கள்.

இரண்டாம் வகை: ரஜினியை பிடிக்கும், ரஞ்சித்தை பிடிக்காது

பாட்ஷா, படையப்பா போன்ற படங்களில் உள்ளது போல் பல பஞ்ச் டயலாக் இருக்கும் என்று நம்பி இந்த படத்தை காண வந்து, அது போல் இரு வசனமும் இல்லாது கண்டு பொங்கி  ரஞ்சித் ரஜினியை ஏமாற்றி விட்டார் என்பது போல் விமர்சனம் இருக்குமாயின், அது இரண்டாவது வகையினரை சேர்ந்தது.

படம் பார்க்கும் போது , “வேங்கையின் மகன் ஒத்தையில நிக்கிறேன். தில்லு இருந்தா மொத்தமா வாங்கலே, சண்ட செய்வோம்,” என்று ரஜினி சவால் விட்டவுடன் இந்த வகை ரசிகர்களுக்குள் ஒரு வித கிளர்ச்சி உருவாகி ஆவலுடன் இருந்திருப்பார்கள்.  அந்த சண்டை காட்சியைப் பார்த்தவுடன் இவர்களுக்கு ரஜினியின் மேல் ஏற்பட்ட ஏமாற்றத்தை விட ரஞ்சித்தின் மேல் ஏற்பட்ட கோபம் அதிகமாக இருந்திருக்கும்.

எனினும் இவர்களால் ரஜினிப் படம் தோற்பதைத் தாங்கி கொள்ள முடியாது. இவர்கள் மனதுக்குள் புழுங்கினாலும் “தலைவருக்காக ஒருமுறை” பார்க்கலாம் என்று கருத்து சொல்லுவார்கள். இவர்கள் பொதுவெளியில் ரஜினியையும், காலாவையும் காப்பாற்றினாலும் தனிப்பட்ட முறையில் அழுது தள்ளிவிடுவார்கள்.

மூன்றாம் வகை:  ரஜினியை பிடிக்காது, ரஞ்சித்தை பிடிக்கும்

காலா  படத்திற்கு விளக்கவுரை தெளிவுரை கொண்டு வரும் பதிவுகள் இந்த வகையினருடையது .   இந்த வகையில் தீவிரமானவர்கள், ரஜினியையும் ஏசுவார்கள். இதில் வரும் சில குறியீடுகளுக்கான விளக்கங்களைப் பார்த்தால், ரஞ்சித்துக்கே இது தெரியுமா என்று சந்தேகங்கள் வரும்.

ரஜினிகாந்துக்கு கருப்பு சட்டை போட்டால் அவர் ரசிகர்கள் தலைவர் சபரி மலைக்கு மாலை போட்டு இருக்கார்னு நினைப்பார்களே தவிர பெரியார் கருத்து சொல்ல வரார்னு நினைக்க மாட்டார்கள். ஆனால், இந்த வகை குறியீடுகளை எதிர்த்து பேசினால் நமக்கு சாதி சாயம் பூசும் அபாயம் உண்டு. ஆக, இந்த வகை விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் விடுவது நமக்கு நல்லது.

நான்காம் வகை:  ரஜினி, ரஞ்சித் இருவரையும் பிடிக்காது

இந்த வகையினர் படம் வரும் முன்னரே விமர்சனங்களை எழுத முற்பட்டு இருப்பார்கள்.   இருவரையும் தனிப் பட்ட முறையில் பிடிக்காத காரணத்தினால் இவர்கள் இதற்கு முன் எழுதிய விமர்சனங்களில் இருந்து கூட இரண்டு மூன்று வரிகள் இந்த பட விமர்சனத்திலும் காணலாம்.  இந்த வகை ரசிகர்கள் ஒரு சிலர், பல நல்ல படங்களை பார்த்து அதுபோல் தமிழில் இல்லையே என்று எங்குபவர்களாக கூட இருக்கக்கூடும். அனால் என்ன செய்ய, முனியாண்டி விலாஸில் குஸ்காவே ஒழுங்காக கிடைக்காத போது தயிர்சாதமா கிடைக்கும்?

ரஜினி என்னும் குதிரை நாற்பது வருடங்களாக சினிமாவில் ஓடிக்கொண்டிருக்கிறது. அரசியல் தளத்திற்கு தன்னை தயார் படுத்திக்க கொண்டிருப்பதால், இன்னும் ஒரு வருடமாவது திரைத்துறையில் ஓடும். இந்த குதிரை அஸ்வமேத குதிரையாக வெளியேறுமா அல்லது நொண்டி அடித்து வெளியேறுமா என்று காலம் தான் சொல்லும், அது வரை இதன் ஓட்டத்தை விமர்சித்துக் கொண்டே இருப்போம்! வித விதமாக!!

Films

போராடுவோம்

இருட்டில் வாழ்கிறாய் நீ
குருட்டு நம்பிக்கையோடு
வெளிச்சம் தேடித் தேடி
வெறகில் வெந்து சாவாய்
காணிக்கை பேரில் இங்கு
கல் சிலைக்கு
லஞ்சம் கோடி
கோடி குமியுது
உண்டியலில்
நாட்டில் ஆனால் பஞ்சம்

நிற்த்தாலும் மதத்தாலும்
பிரிந்துவிட்டோம்
மனிதாபிமானத்தை
நாமெல்லாம்
மறந்துவிட்டோம்
காசின் திருவிளையாடல் கண்டு
நாம் மயங்கி விட்டோம்
அடையாளம் நாம்
தொலைத்துவிட்டோம்
உரிமையை
இழந்துவிட்டோம்
நாம் இறந்துவிட்டோம்

அலட்சியம்
ஏழையின் உயிரென்றால்
அலட்சியம்
பணந்தான் நோயின்
மருத்துவம்
மருத்துவமணையின் அரசியல்

உதவிசெய்யத் தகுதி இருந்தும்
ஊனமாக நிற்கிறாய்
ஊனமாக நிற்கிறாய்
ஊனமாக நிற்கிறாய்
ஊமைகள் வாழுமிடத்தில்
வார்த்தைகளை விற்கிறாய்
வார்த்தைகளை விற்கிறாய்

நிலம் நீர் எங்கள் உரிமை
போராடுவோம்
எங்கள் வறுமைகள் ஒழிய
போராடுவோம்
புது புரட்சி உருவாக்கப்
போராடுவோம்
எங்கள் தலைமுறை காக்கப்
போராடுவோம்
எங்கள் கண்கள் தூங்கும் வரைப்
போராடுவோம்
எங்கள் இறுதி மூச்சுவரைப்
போராடுவோம்

போராடுவோம்
போராடுவோம்
போராடுவோம்
நாங்கள்
போராடுவோம்

*
ரஞ்சித்து ஆசம்யா ஆசம்..#காலா