யாரோ இவன் என் காதலன் - 9

அத்தியாயம் – 9

சென்னையை நெருங்கும் சமயம் “அப்பறம் உன் நிஜமான வேலையைப் பத்தி எப்ப சொல்லப் போற ஜெய்”

“நான் முன்னாடியே சொன்னேனே”

“ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் கூட செக்யூரிட்டி டீம், போலிஸ் எல்லாரும் நெருக்கமா இருக்குறது எனக்கு ஆச்சிரியமான விஷயம்”

தொடர்கள்

அன்பா...காதலா...

பரிச்சியம் வேண்டினேன்

பரிகாசம் செய்தாய்…

விலகி நின்றேன்

விரும்பி வந்தாய்…

நட்பா என்றேன்

நாணிச் சிரித்தாய்…

விழியின் விரிப்பில்

வாஞ்சைகள் சிதறினாய்…

வயதின் கனவில்

வண்ணங்கள் தீட்டினாய்…

அன்பா… காதலா…

மயக்கம்கள் தந்தாய்…

பிரிந்த போதிலும்

பரிவே வேண்டினாய்…

மீண்டும் …

பார்த்த நோடியில்

காலத்தை கடத்தினாய்…

விடை பெறும் தருணத்தில்

ஒரு சிறு தயக்கமும் தந்தாய்…

தமிழ்

உன் சாயல் மறைவிற்குள்...

மழை நின்ற ஓர் நாளில்

சிலிர்த்து உறங்கிய மனதில்

நனைந்தபடி ஓர்கனவு…

துளிகளுக்குள் ஒளிந்தபடி

உன் சாயல் மறைவிற்குள்…

நீ யோ அது…

நானோதானோ…

உன் பரிமானம் ஏற்றபடி…

நினைவில் தொலைத்த நகலை

பற்றியபடி…

முன் ஒரு அடி எடுத்தால் எனையே

விழுங்கி…

பின் ஒரு அடி எடுத்தால் உனையே

ஒளித்து…

சதுராடும் இருளில் நமையே

தொலைத்து…

தோய்த்து எடுத்த வானத்தில்

வானவில் வரைந்து…

தேடுகிறேன் உன்னை …

எந்த வண்ணத்தில் உனை

மறைத்து வைத்தேன் என்று

மறந்ததனால்…

தமிழ்

யாரோ இவன் என் காதலன் - 8

அத்தியாயம் – 8

காலை அவளைக் கண்களை சுருக்கி சுருக்கி நம்ப முடியாதது போல  பார்த்தான் ஜெய்.

“நிஜம்தானா… நான் காணுறது கனவில்லையே”

அவனைத் தள்ளி நிறுத்தி வேறு கோணத்தில் பார்க்க வேண்டும் என்று முதல் நாள் செய்த முடிவை செயல்படுத்தத் தொடங்கினாள்.

தொடர்கள்

யாரோ இவன் என் காதலன் - 7

அத்தியாயம் – 7

ஜெய் காண்பித்த புகைப்படத்தில் அவளது தந்தை மட்டும் தனியாக நின்றுக் கொண்டிருந்தார். அவரது கண்கள் ஏதோ ஒரு பயங்கரத்தைக் கண்டதை போல திகிலைக் காட்டின.

“ஏன்  உங்கப்பா கண்ணு இப்படி நிலைகுத்தியிருக்கு.

தொடர்கள்

நீ - நான் (கவிதை)

நம் தளத்தில் தனது அழகான கவிதை மூலம் கால் பதித்திருக்கும் அர்ச்சனா அவர்களை வரவேற்கிறோம். அவரது கவிதைகளைப் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன்,

தமிழ் மதுரா

நீ – நான்

கவிதை ஒன்று கேட்டால்

என் பெயர் சொல்லும்

முட்டாள் கவிஞன் நீ!!

முத்தங்கள் கேட்டால்

கன்னங்களைக் கடிக்கும்

வளர்ந்த குழந்தை நான்!!

ஆசைகளை மறைத்துக்கொண்டு

அரிஸ்டாட்டில் பேசும்

அறிவுக்களஞ்சியம் நீ!!

அனைத்தும் அறிந்திருந்தும்

உன் பேச்சுக்கு தலையசைக்கும்

தஞ்சை பொம்மை நான்!!

உரசலும் தீண்டலும்

கேட்காமலே அள்ளிக்கொடுக்கும்

கலியுகக் கர்ணன் நீ!!

சீண்டல்கள் பிடித்தாலும்

கோபப் பார்வை வீசும்

குடும்பக் குத்துவிளக்கு நான்!!

காதலை நெஞ்சில் சுமந்து

கனவுகளைக் கண்ணில் சுமக்கும்

என் எதிர்காலம் நீ!!

வாழ்வதன் அர்த்தமாய்

வாழ்க்கையின் நோக்கமாய்

உன் நிகழ்காலம் நான்!!

— அர்ச்சனா

தமிழ்