குறிச்சொற்கள் » கவிதைகள்

வித விதமாய்..

நெட்டையாய் 
குள்ளமாய் 

இடுப்பில் கை வைத்தபடி
கால் பரப்பி 

சற்றே சாய்ந்து ஒயிலாய்

கைக்கடக்கமாய்
தலை தட்டாது நிற்க
வாகாய்

அட்டணக்காலிட்டு
அடிமரத்தில் சாய்ந்து
புல்லாங்குழலிசைக்க 
தோதாய்

புல் பூண்டுக்கும் இடம் தராது
முழுக்கக் 
கிளை பரப்பி
எல்லாவற்றையும்
உறிஞ்சிக் குடிக்கும்
பேயாய்

எல்லா விதமாயும்
தான் இருக்கிறது

என் தோட்டத்தில்
கவிதைகள்

மிட்டாய்

மிட்டாய் தருகிறேன்
நிலவைக் காட்டுகிறேன்
கிலுகிலுப்பை ஆட்டுகிறேன்
கிச்சு கிச்சு மூட்டுகிறேன்
தூக்கிப் போட்டு பிடிக்கிறேன்

அரை நொடி நிறுத்திவிட்டு

ஆற்றவொண்ணாத்
துயர் கொண்டதாய்
அடியாழத்திலிருந்து

மீண்டும்
அழ ஆரம்பிக்கிறது
அது
கவிதைகள்

நன்றி...

💐 இன்று

இருக்கிறேன்

இறைவா, நலமோடு…

💐 ஒரு

உறுப்பு மாற்று

அறுவை சிகிச்சைக்கு

முன்னால் …

💐 என்னாயுள் கால

சம்பாத்தியமெல்லாம்

கால் தூசி !

💐 யோசி,

மனிதனை நேசி,

இயற்கையை சுவாசி. 10 more words

Poetry Tamil

மாற்றம்

அன்பினால் நேரும் மாற்றம்

என்றும் நிரந்தரமானது

பயத்தினால் நேரும் மாற்றம்

என்றும் நிலையற்றது

கவிதைகள்

கொள்ளை நோய் பரவும் முன்னே
தனிமைப்படுத்தப்பட்ட ஒருவனுக்கு
இந்த தனிமைப்படுத்துதல்
ஒன்றும் புதிதல்ல..!

ஊரடங்கு அறிவிக்கப்படும் முன்னே
சந்திப்பதற்கும் சந்திக்கப்படுவதற்கும்
யாருமற்ற ஒருவனுக்கு
ஊரடங்கினால் என்ன இழப்பு
ஏற்பட்டு விடப் போகிறது..!

கைகளைக் கொடுத்து பரஸ்பரம் 48 more words

கவிதைகள்