குறிச்சொற்கள் » கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் இருந்து இன்றே வீடு திரும்பி விடுவார்

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி கடந்த இரண்டு வருடமாக வயது முதிர்வின் காரணமாக உடல்நல குறைவுடன் காணப்பட்டு வருகிறார்.ஆனால் அவ்வப்போது சக்கர நாற்காலியில் அழைத்து வந்து அவரின் வீட்டு வாசலில் காத்திருக்கும் தொண்டரின் பூக்குரல்கள் கேட்கும் போது கலைஞர் சிறு புன் முறுவலுடன் கைகளை தூக்கி கைகாட்டுவார்.

சமீபத்தில் கோடம்பாக்கத்தில் உள்ள அவருடைய மகன் இல்லத்திற்கு சென்று வந்தார்.

அதன் பின் அவருடைய மனைவி பிறந்தநாளின் சிஐடி நகர் இல்லத்திற்கு சென்று வந்தார்.

இந்நிலையில் கலைஞரின் உடல் நல குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் கருணாநிதியை மருத்துவமனைக்கு அனுப்புவதில் செல்விக்கும், ஸ்டாலினுக்கும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது

தன்னை கேட்காமல் எதற்காக முடிவு எடுக்கிறீர்கள் என்று ஸ்டாலின் குடும்பத்தினரிடம் சத்தம் போட்டுள்ளார். பின்னர் கோபமாக வீட்டுக்கு போய்விட்டார்.

அதன் பின்னர்.கருணாநிதி சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சை முடிந்து இன்றே வீடு திரும்பி விடுவார் என மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது

கலைஞர் மு. கருணாநிதி - 95வது பிறந்த நாள்

03-06-2018

இன்று, தனது 95வது பிறந்த நாள் கொண்டாடும் மாண்புமிகு தமிழக முன்னால் முதல்வர் மற்றும் திமுகவின் தலைவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

கடந்த 70+ ஆண்டுகளில் தமிழகம் மற்றும் இந்திய வரலாற்றின் தவிர்க்க முடியாத மிக முக்கிய அரசியல் தலைவர் கலைஞர் அவர்கள். அவருடைய கவிதை நடை பேச்சு, தலைமை பொறுப்பு, சமயோசித புத்தி மற்றும் சுய மரியாதை சிந்தனை இவற்றுடன் உழைப்பு ஆகியவை திமுகவின் நிரந்தர தலைவராகவும் மற்றும் 5 முறை தமிழக முதலமைச்சராகவும் ஆக்கியது.

அவருக்கு எதிர் பக்கத்தில் இருப்பவர்களும் அவரின் உழைப்பு மற்றும் தமிழ் / அரசியல் அறிவுத் திறனுக்கு ரசிகர்களாக இருப்பார்கள்.

அவர் தன் வாழ்நாளில் நிறைய வெற்றிகளையும் மற்றும் அதற்கு நிகரான தோல்விகளையும் எதிர்கொண்டு இருக்கிறார். இன்றும், அவருடைய தாக்கம் இன்றி அரசியல்வாதியாகவும், கவிஞர்களாகவும் மற்றும் மேடை பேச்சாளர்களாகவும் இருப்பது மிகவும் அரியது.

எனக்கு மிகவும் பிடித்த கலைஞர் அவர்களின் கவிதை நடை பேச்சு.

வாழ்க பல்லாண்டு

தாஜூதீன்

அரசியல்

காமராஜரின் சக்ராவியூகத்தில் இருந்து தப்பித்த கருணாநிதி - சரித்திரம் சொன்ன‍ தகவல்

பெருந்தலைவர் காமராஜரின் சக்ராவியூகத்தில் இருந்து தப்பித்த ஒரேயொருவர் கருணாநிதி – சரித்திரம் சொன்ன‍ தகவல்

அரசியலில் குறிப்பாக தமிழக அரசியலில் வருவோரெல்லாம் வெற்றிக்கொடி நாட்டுவது கிடையாது. அரசியலுக்கு

தெரிந்து கொள்ளுங்கள்

நாங்க ஏன் உங்களுக்கு ஓட்டு போடனும்?

ஓட்டுப்போட சொல்லி ஊரெல்லாம் கோஷங்கள் எழுப்பப்பட்ட போது, கட்சிகளுடைய திருட்டுத்தனத்தை சுட்டிக்காட்டி நான் ஏன் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று இளைஞர்கள் கேட்பதாக உருவாக்கப்பட்ட காணொலி. இதில் ஆடிக்கொண்டே இருப்பதாக வந்த கலாய்ப்புகளுக்கு பின் தற்போது அதனை மாற்றிக்கொண்டு இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

விகடன்