குறிச்சொற்கள் » கம்யூனிசம்

இளம் கம்யூனிஸ்ட் கழகம் - ஆய்வுப் பணி என்ற செயல்தந்திரம்!

ஆய்வுப் பணி என்ற செயல்தந்திரம்.

தமிழ்நாட்டு நிலைமை:

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 10 ஆண்டுகள் அ.தி.மு.க ஆட்சிக்குப் பிறகு, குறிப்பாக 2016 முதல் பா.ஜ.கவின் பினாமியாக அ.தி.மு.க ஆட்சி நடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு, தி.மு.க ஆட்சி அமைத்துள்ளது. 3,913 more words

India

மோடி அரசின் பாசிச போக்குகள்: டோக்ளியாட்டி தரும் வெளிச்சத்தில் ஒரு பார்வை

பேரா. ஆர். சந்திரா.

(கடந்த இதழில் பால்மிரோ டோக்ளியாட்டி எழுதிய “பாசிசம் குறித்த விரிவுரைகள்” எனும் நூல் அறிமுகத்தை வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக அந்நூல் குறித்த சமகால பொருத்தப்பாட்டை இக்கட்டுரை விவரிக்கிறது.) 1,906 more words

அரசியல்

ஸ்டாலின் அரசியல் (அவதூறுகளுக்கு மறுப்பு)!

அமெரிக்காவின் மார்க்சிய-லெனினிய கழகத்தினரின் காலாண்டு பத்திரிகையில் 1984 ஆம் ஆண்டு வெளியான ஒரு சிறு நூலின் மொழிபெயர்ப்பே இப்புத்தகம். இதனைத் தோழர் சுந்தரசோழன் தமிழில் மொழிபெயர்க்க செஞ்சோலை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

1. ஸ்டாலின் சர்வாதிகாரியா? 750 more words

News

பெரு அதிபர் தேர்தலில் பெட்ரோ வெற்றி !

பல கட்ட இடர்பாடுகளை எதிர்கொண்டு அதிபர் தேர்தலில் மார்க்சிய லெனினிய கட்சியான “பெரு விடுதலை” சார்பாக போட்டியிட்ட பெட்ரோ காஸ்டில்லா வெற்றி தென் அமெரிக்காவில் மிக முக்கிய வெற்றியாக பார்க்கப்பட்டுள்ளது. சோசலிசத்தை நோக்கிய பாதையை தேர்ந்தெடுப்பார்களா அல்ல முதலாளித்துவ சீர்திருத்தத்தை தேர்ந்தெடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 1,089 more words

World

கம்யூனிச அவதூறு புத்தகத்தை வெளியிட்ட NCBH !

”உலகெங்கும் பாசிச சக்திகளின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில், ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் பதிப்பகம் என்ன செய்ய வேண்டும் என்பதை விவாதித்து கொண்டிருக்கும் சூழலில் , என்ன செய்ய கூடாது என நமக்கு எதிர்மறையாக கற்று கொடுக்கிறது NCBH . 625 more words

News

தோழர் சுந்தரம்

தோழர் சுந்தரம் நினைவு நாள் (ஜூன்-9, 2017)

தோழர் சு என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் சுந்தரம் காலமாகிவிட்டார். நக்சல்பாரி உழவர் எழுச்சியின் வழியில் இந்தியத் துணைக்கண்ட மக்களின் விடிவுக்குப் புயலாய் எழுந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ) மற்றும் அதன் தொடர்ச்சியாக மக்கள் யுத்தக் குழுவிலும் இயங்கிய சுந்தரம் அவர்கள், தேசிய இனச் சிக்கலை முன்வைத்ததால் மக்கள் யுத்தக்க குழுவில் இருந்து தோழர் தமிழரசன் மற்றும் தோழர்கள் வெளியேற்றப்பட்ட போது தோழர் சுந்தரமும் வெளியேறினார். 133 more words

தமிழ்நாடு

கீழ்வெண்மணி படுகொலையாளன் கொல்லப்பட்டது எப்படி?

கீழ்வெண்மணியில் 44 பேரை எரித்துக் கொன்ற கோபாலகிருஷ்ண நாயுடுவை கொன்றது யார்?

தமது வாழ்வுரிமைக்காகவும், நியாயமான கூலிக்காகவும் போராடிய கீழ்வெண்மணி பகுதியை சேர்ந்த விவசாயத் தொழிலாளர்களை கொன்று குவித்தனர் கோபாலகிருஷ்ண நாயுடுவும் அவனது ரௌடி கும்பலும். 212 more words

கம்யூனிசம்