ஆருயிர் ஆதிரையாள் 5

வணக்கம் தோழமைகளே,

ஆருயிர் ஆதிரையாள் கதையின் ஐந்தாம் அத்தியாயத்தை பதிவிட்டுள்ளேன்.

https://annasweetytamilnovels.com/aa-5/

https://ezhilanbunovels.com/community/viewtopic.php?f=42&t=175

படித்துவிட்டு நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்

காதல் கதை

கேள்விக்குறி - டி வி ராதாகிருஷ்ணன்

அந்தக் காட்சியை விடியலில் மச்சக்காளை தான் முதலில் பார்த்தான்.

சுப்பிரமணியம் ஊருக்கு வெளியில் ஒரு மரத்தில் தன் வேட்டியின் ஒரு முனையை மரத்தின் கிளையில் கட்டி..மற்றொரு முனையை தன் கழுத்தில் சுருக்காக்கி  அண்டர்வியருடன் தொங்கிக் கொண்டிருந்தான். 1,175 more words

நீல வெளிச்சம் -மலையாளத்தில் முகமது பஷீர் தமிழில் மீனா

மலையாள இலக்கிய உலகின் மிகச் சிறந்த படைப்பாளியான வைக்கம் முகமது பஷீர் பால்யகால சகி, பாத்திமாவின் ஆடு,சப்தங்கள்,மதிலுக்குள், அனர்க்க நிமிஷம் உள்ளிட்ட அற்புதமான படைப்புக்களுக்குச் சொந்தக்காரர்

தன் கதை குறித்து அவர் :

நீல வெளிச்சம் என்ற இச்சிறுகதை என் வாழ்க்கையின் விளக்க முடியாத அனுபவங்களில் ஒன்றாகும்.அனுபவம் என்பது மிகச் சரியான வார்த்தையில்லை.ஒன்றொன்றாக,அடுத்தடுத்து விரைவாக மாறுகிற,ஒரு கனவில் நிகழ்கிற உண்மை அல்லது கற்பனைத் தோற்றங்களின் தொகுதி என்று வேண்டுமானால் சொல்லலாம். 1,215 more words

அந்த மூன்று நாட்கள் - டாக்டர் ரேவதி ராமச்சந்திரன்

                                                       

என்ன தலைப்பு இது என்று யோசிக்கிறீர்களா! வாங்க கதைக்குள் இல்லை இல்லை நிஜத்திற்குள் போகலாம்.  

எனக்கு ஆஸ்திக்கு ஒரு பையனும், ஆசைக்கு ஒரு பெண்ணும். பையன் தான் ஆஸ்தி, வேறு ஆஸ்தி நாஸ்தி. 439 more words

“எலுமிச்சை “- லக்ஷ்மணன்

அவனுக்கு ஒரே ஆச்சர்யம். கொஞ்சம் நிம்மதியும் கூட. வாடகைக்கு ஒரு வீடு பார்த்து அது மனைவிக்கு பிடித்துப்போய் அங்கு குடி போவதும் நாடு விட்டு நாடு புலம் பெயர்ந்து போவதும் அவனைப் பொறுத்த வரை ஒன்றுதான்.   611 more words

   நாட்டிய மங்கையின் வழிபாடு - 6 - கவியரசர் தாகூர்- தமிழில் மீனாக்ஷி பாலகணேஷ்

                        

முன்கதைச்சுருக்கம்: புத்தரின் உபதேசங்களில் ஈடுபட்ட மகத நாட்டரசன் பிம்பிசாரன் தனது அரண்மனைத் தோட்டத்து அசோகமரத்தடியில் புத்தர்பிரானுக்காக ஒரு வழிபாட்டு மேடையை அமைத்திருக்கிறான். அவன் இளவரசன் அஜாதசத்ருவிற்கு அரசைக் கொடுத்துவிட்டு நகரிலிருந்து சிறிது தொலைவில் வசித்துவந்தான். அரசி லோகேஸ்வரி இதனை விரும்பவில்லை. 876 more words

யாளி - பானுமதி.ந

நீலக் கண்ணாடியென அந்தத் திரை ஒளிர்ந்தது. அது ஒரு சட்டகத்தைப் போலக் காணப்பட்டாலும் அதன் வெல்வெட் வழுவழுப்பு, தோன்றித் தோன்றி மறைந்து கொண்டிருந்தது. அதைத் தொட்டுப் பார்க்கும் ஆசையும், அச்சமும் ஒரே நேரம் எழுவதைத் தடுக்க முடியவில்லை. 1,197 more words