குறிச்சொற்கள் » கட்டுரை

நிகழ்வுகளின் கொடுநிழல்

நேற்றைய தினம் (21.04.2019) இலங்கை வரலாற்றில் பயங்கரவாதம் இன்னொரு பரிமாணத்தை நிறுவியிருக்கிற அச்சம்தரும் நாளாகியது. பெரும்பாலும் உதிரிப் பயங்கரவாத தாக்குதல்கள் அல்ல இவை என்பதை தாக்குதலின் எண்ணிக்கைகளும் அதன் தன்மைகளும் நேரத் திட்டமிடல்களும் நாட்தேர்வும் குண்டுகளின் வலுவான சேதம் தருகிற தன்மைகளும் தற்கொலைத் தாக்குதலும் உணர்த்துகின்றன. 977 more words

முகநூல் குறிப்பு

சிங்கப்பூர் - மலேசியா தமிழ் இலக்கியத் தடம் - சில திருப்பம்

ஆய்வாளர் பால பாஸ்கரன் அவர்களின் ஆய்வுக்கட்டுரைகளை வாசிப்பது ஒரு தனி இன்பம். அசராத உழைப்பும், வாதங்களில் அறிவுக்கூர்மையும், ஆய்வுக்கட்டுரை என்றாலே பொதுவாசகர்க்கு ஒவ்வாமை அளிக்கும் உயிரற்ற, சிக்கலான மொழியைத் தவிர்த்த எழுத்தோட்டமும் ஒன்றையொன்று முந்திக்கொண்டு நிற்கும் அவரது எழுத்துகள் அதேவேளையில் அதிகம் அறியப்படாத செய்திகளையும் வாசகர்க்குத் தரத்தவறுவதில்லை. 492 more words

நூலறிமுகம்

இறைவனிடம் கையேந்துங்கள்.....!

ஸ்ரீ பகவான் முருகேசு சுவாமிகளின் ஆத்ம மாணவரான மகா யோகி எஸ்.புண்ணியரெத்தினம் சுவாமிகள் தன் குருநாதர் மீது கொண்ட தீராத பக்தியினால் அவர் இட்டுச் சென்ற ஆன்ம விதையினை பெரும் கற்பக  விருட்சமாக வேரூன்ற செய்து அந்த நிழலிலே உலகின் பல பாகங்களிலும் பலதரப்பட்ட மக்கள் பல விதமான நன்மைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது; மக்களின் நன்மை கருதி அவர்களின் பேரின்ப பெரு வாழ்வு வேண்டி சுவாமிகளால் குரு வாரங்கள் மற்றும் பூரணை தினங்களில் அருளப்படும் ஞான உபதேசங்களை தொகுத்து வழங்கி வருகிறோம் அந்த வகையில் “இறைவனிடம் கையேந்துங்கள்” எனும் தலைப்பின் கீழே இனம், மதம் என்ற வேறுபாடின்றி  சுவாமிகளின் ஞான அருள் நிறைந்த உபதேசத்தை தருகிறோம். 634 more words

புண்ணியரெத்தினம் சுவாமிகள்

அன்பின் மறு உருவம் குரு....!

மாதாந்தம் ஆன்மீகத்தையும் ஆன்ம ஈடேற்றத்துக்கான வழிமுறைகளையும் வாழ்வியல் தத்துவங்களையும் பாமர மக்களுக்கும் புரியும் விதத்தில் மிகவும் விரிவாகவும் நுணுக்கமாகவும் காலத்தின் தேவைக்கேற்றால் போல் காயத்திரி சித்தர் பகவான் ஆர்.கே முருகேசு சுவாமிகளின் ஆத்ம மாணவர் ஆன்மீகக்குரு மகா யோகி எஸ்.புண்ணியரெத்தினம் சுவாமிகள் ஞான உபதேசத்தினை இடம், பொருள், ஏவல், கால நேரங்களை கடந்து தன்னை நாடி வரும் பக்கத்தர்களுக்கு அருளி அவர்களது நோய்ப்பிணி, பசிப்பிணி நீங்கி நல் வாழ்வு வாழ்ந்து பேறு பெற்றேகிட உலக சேமத்துக்காகவும் பௌர்ணமி தினங்களில் பல உயிர் மூலிகைகள் கொண்டு மகா யாகங்களை தொடர்ச்சியாக செய்து வருகிறார். 523 more words

புண்ணியரெத்தினம் சுவாமிகள்

நம்பிக்கை தரும் நரேந்திர மோதி

’தவளையும் தன் வாயால் கெடும்’ என்றொரு சொல்வழக்கு உண்டு. வாயைத் திறந்து கத்தோ கத்தென்று கத்தி, பிடிபட்டு, கடிபட்டு நாசமாகும் தவளைகள் நாட்டில் பெருகிவருகின்றன. ஒருவகையில் பார்த்தால் எல்லாம் நல்லதிற்குத்தான் என்றும் தோன்றுகிறது. கெடுவான், கேடு நினைப்பான். 1,257 more words

அனுபவம்

வேகமுறும் வெள்ளை மேலாண்மை - க. நவம்

வெள்ளை மேலாண்மை

வேகமுறும் வெள்ளை மேலாண்மை

க. நவம்

தீவிரவாதம் என்னும் போதெல்லாம் இஸ்லாமிய தீவிரவாதமே கடந்த சில தாசாப்தங்களாக மேற்குலகத்தவர் மனங்களில் தோன்றி மறைவது வழக்கமாகிவிட்டது. நியூயோர்க்
9/11 தாக்குதல் பேரழிவுகளும்,
ஈராக்கின் ஷியைற் (Shiite) முஸ்லீம் மக்கள் கூட்டத்தின் மீது சுனி (Sunni)n முஸ்லீம் தீவிரவாதிகள் மற்றும் ஆஃப்கான் ஹசெறஸ் (Hazaras) 838 more words

கட்டுரை

கிரிக்கெட் உலகக்கோப்பை  அணி : தினேஷ் இன், ரிஷப் அவுட் !

2019-ன்  உலகக்கோப்பையைக் கைப்பற்ற வாய்ப்பிருப்பதாகக் கருதப்படும் ஒருசில அணிகளில், இந்தியாவும் ஒன்று. ஐசிசி உலகக்கோப்பைக்கான இந்திய அணி எப்படி அமையும் என்பதில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை மிஞ்சியும், கிரிக்கெட் வல்லுனர்கள்/ வர்ணனையாளர்களின் சலசலப்பு அதிகமாக இருந்துவந்தது. நேற்று மாலை (15/4/19), ஐசிசி-க்குக் கொடுக்கப்பட்ட தேதிப்படி,  இந்திய கிரிக்கெட் போர்டு  அணியை அறிவித்துவிட்டது. 397 more words

அனுபவம்