குறிச்சொற்கள் » கட்டுரை

மே 13 1969 முதல் மே 13 2018 வரை

இன்று மே 13. இந்த தேதி மலேசிய வரலாற்றில் மிகவும் முக்கியமானது. இன வெறி அரசியலுக்கு அடையாளமாக பேசப்படும் தேதி அது. இதே தினத்தில் அரை நூற்றாண்டுகளுக்கு முன் (13.5.1969) சுதந்திர மலேசியாவின் மூன்றாவது பொதுத்தேர்தல் முடிவுக்குப் பிறகு நடந்த இனக்கலவரமும் அதன் பின் மலேசிய அரசியலில் இன அரசியலை முதன்மைபடுத்தி கொண்டுவரப்பட்ட மாற்றங்களும் கடந்த ஐம்பது ஆண்டு அரசியல் போக்கை முடிவு செய்து கொண்டிருந்தது.

கட்டுரை

ஆல்பர்ட் காம்யூவின் புரட்சியாளன் : கிளர்ச்சி நெருப்பு அணைந்து போகுமோ ?

ஆல்பர்ட் காம்யூ (1913-1960) தமிழ் இலக்கிய வெளியில் அந்நியன்

நாவல் மொழிபெயர்ப்பு மூலம் பறவலாக அறியப்பட்டவர். தற்போது அவருடைய புகழ்பெற்ற L’homme révolté                என்ற நீண்ட கட்டுரையைப் புரட்ட்சியாளன் என்ற தலைப்பில் பிரான்சில் வாழும் தமிழ் எழுத்தாலர் நாகரத்தினம் கிருஷ்ணா 1952 தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். புதிரான சமூக வாழ்வு குறித்த தேடலை அதற்குச் சிறிதும் குறையாத புதிரான மொழியிலியே காம்யூ இந்த உரையாடலை நடத்துகிறார்.

ஓரிடத்தில் காம்யூ, ‘புரட்சி பற்றிய பிரச்சனையை மேற்கத்திய சிந்தனை மட்டுமே துல்லியமான பொருளில் கையாண்டிருக்கிறது’’ (ப – 26) என்று எழுதுகிறார்; இந்தக் கூற்றிற்கு மிகப்பொருத்தமாக, கிரேக்க நாகரிகம் தொடங்கி, நவீனத் தொழிற்சமூகம் வரை, இலக்கியவெளியிலும் சமூக வரலாற்று வெளியிலும் தத்துவச் சிந்தனைத் தளத்திலும் ஐரோப்பாவில் நிகழ்த்திக் காட்டப்பட்டுள்ள புரட்சிகளின் வரலாற்றை, மனிதர்களின் எதிர்கால நலனை நோக்கிய தத்துவ விசாரணை என்ற நெறிமுறையில் நின்று இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

‘தான் வாழும் காலத்தைப் புரிந்துகொள்வதற்கான முயற்சி’ (ப – 6) என்று 1951 – இல் வெளிவந்த இந்த நூல் குறித்துக் கூறுகிறார். அவர் வாழ்ந்த அந்தக் காலம் எப்படிப்பட்டதாக இருந்தது. அவரே எழுதுகிறார் :  “தனித்தொதுங்கியிருந்த குற்றம், இன்றைக்கு அறிவியல் போல உலகளாவியதாக இருக்கிறது. நேற்று வரை  தண்டனைக்கு ஆளான குற்றம், இன்றைக்குத் தண்டனைக்குரிய சட்டத்தை வகுக்கிறது’ (ப – 6) திரும்பும் திசைதோறும் கொலைச் செயல் மட்டுமே நீக்கமற நிறைந்திருக்கிறது. நாசுக்காகப் புலம்பிக் கொண்டே பிறர் செய்யும் கொலைக்கு உடன்படும் நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டுள்ளோம். இரண்டாம் உலகப் போர் (1939 – 1945) முடிந்த பின்னணியில் அமைந்த, அவர் வருணிக்கும் அந்தச் சமூகச்சூழல், இன்றைக்கும் ஒரு சிறிதும் குறையாமல் மேலும் கூடுதலான கொடூரங்களோடு தொடர்கிற யதார்த்தச் சூழலில், இந்தப் புத்தகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வந்திருப்பது, விளங்காத பிறவியாய் நெறிகெட்டுக் கிடக்கும் நம் சூழலைப் புதிய கோணத்தில் நுட்பமாகப் புரிந்து கொள்ளப் பேருதவியாக இருக்குமென்று உறுதியாக நம்பலாம்.

தங்கள் எஜமானர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கக் கொல்லவும் வேண்டும், கொல்லப்படவும் வேண்டும் என்கிற நிலையில் நிறுத்தப்பட்டிருந்த ரோமாபுரி அடிமைகளின் கிளர்ச்சியை விளக்குகிறார். எழுபது அடிமைகளுடன் தொடங்கிய அந்தக் கிளர்ச்சி, எழுபதாயிரம் கிளர்ச்சியாளர்களைக் கொண்ட படையாக மாறி, இராணுவத்தைத் தோற்கடித்து ரோம் நகருக்குள்ளே அணிவகுத்துச் சென்றது; ஸ்பார்ட்டகஸ் தலைமை தாங்கி நடத்திய இந்தக் கிளர்ச்சி புதிதாக எதையும் கொண்டுவரவில்லை; “அடிமைகளின் இராணுவம் அடிமைகளை விடுவித்து அவர்களுடைய முன்னாள் எஜமான்களை அவர்களிடம் அடிமைகளாக ஒப்படைத்தது” என்கிறார். விளைவு, மனிதர்களை மீண்டும் கொல்வதற்கு வழிகாட்டியதொன்றே அதன் பலன் என்கிறார்.

அடிமைகளால் சிலுவையில் அறையப்பட்ட ஒரு ரோமானிய உயர்குடிமகனுக்காக, படைத்தளபதி கிராஸ்ஸஸ், ஆயிரம் சிலுவையில் ஆயிரம் அடிமைகளை ஏற்றிக்  நெடுகச் சாலையில் நிறுத்திக் காட்டினான். இந்தக் கிளர்ச்சி இறுதியில் உணர்த்தியது என்ன? இத்தனை மனிதக் கொலைகளால், அழிவுகளால் அறிந்து கொண்ட செய்தி என்ன?  “முதலாவதாக அதிகார உலகில் சரிநிகர் சமம் என்பதற்கு இடமில்லை; அடுத்ததாக தங்கள் குருதிக்கு, மிகக் கடுமையான வட்டி கணக்கிடக் கூடியவர்கள் எஜமானர்கள் என்ற உண்மை” என்கிறார். இப்படித்தான் எந்தச் சங்கிலியிலிருந்து விடுபட முயல்கிறோமோ அதைவிடக் கடினமான சங்கிலிக்குள் சிக்கிக் கொள்ளுவதுதான் புரட்சிகளின் வரலாறாக இருக்கிறது என்பதைத்தான் பலவாறு தனக்குள் செறிந்து கிடக்கும் தத்துவச் சிந்தனைகளின் மூலம், ஒரு படைப்பாளிக்கே உரிய உருவகம், அங்கதம், கவித்துவம், துக்கம், தொனி முதலியவைகளைச் சுமந்துவரும் ஒருவகையான கனமான மொழியால் உரையாடலை வளர்த்தெடுத்துக் கொண்டு போகிறார்.

ஸ்பார்ட்டகஸ் நடத்திய கிளர்ச்சியை எப்படி வர்ணித்தாரோ அதுபோலவே ஐரோப்பாவில் கத்தோலிக்கத் திருச்சபையின் ஒடுக்குமுறைக்கு எதிரான புரட்சி, அரசக் கொலை நடத்திய பிரெஞ்சுப் புரட்சி, மீஎதார்த்தவாதிகள் நடத்திய கிளர்ச்சி, மார்க்சிய அடிப்படையில் நடந்த இரஷ்யப் புரட்சிகள், தேசியமென்று முசோலினி, ஹிட்லர் நடத்திய புரட்சிகள் என நடந்த அனைத்துப் புரட்சிகளாலும் நடந்த விளைவு என்ன? இந்தத் தற்கொலைகளும் கூட்டுக் கொலைகளும் மானுட நலத்திற்கு வழங்கியது என்ன? தனிமனிதப் பயங்கரவாதத்தையும் அரசுப்பயங்கரவாதத்தையும் வளர்த்தெடுத்த இந்தப் புரட்சிகளால் மானுட சமூகம் கண்டதென்ன? என்று கேட்கிறார். இப்படியான ஓர் அணுகுமுறையில் நடந்த புரட்சிகளை எல்லாம் விமர்சித்துச் செல்வதால், இவர் புரட்சிக்கு எதிரானவரா என்றால் இல்லை.  புரட்சிக்கு ஆதார சக்தியான  ‘கிளர்ச்சி’ மனிதர்களின் இயல்பான உணர்ச்சி சார்ந்தது, மனித வளர்ச்சிக்கு அதுவே ஆதாரசக்தி என்றே கருதுகிறார்.

தத்துவக் கொள்கைகளில்  “நான் சிந்திக்கிறேன், அதனால் இருக்கிறேன்” என்ற சொற்றொடர் ஆற்றும் அதே பங்களிப்பை இங்கே கிளர்ச்சியும் செய்கிறது. (ப – 30)

மனிதனுடைய ஒரே ஆற்றல் கிளர்ச்சி. இது அவனிடமுள்ள விநோதமான ‘அன்பு’ ஒன்றை நம்பியிருக்கிறது (ப – 476) என்றெல்லாம் அல்பெர் கமுய் எழுதிக் கொண்டு போகும்போது, வெறுப்பு அரசியலால் நடந்த புரட்சிகளுக்கு எதிராக அன்பு நெறிப்பட்ட கிளர்ச்சியை, மனித விடுதலைக்கு முன் வைக்கிறார் எனப் படுகிறது. எனக்குக் காந்தி நினைவுக்கு வந்தார். பன்னாட்டு நிதிக் குழுமங்களால் உலக வளங்கள் எல்லாம் சுருட்டப்பட்டு மூலதனக் குவியல் வெறித்தனமான அரங்கேறிக் கொண்டிருக்கும் நமது கேடுற்ற யுகத்தில், கமுய் சொல்வது போல நாமும்

“சொந்த நிலத்தில் அளவான மகசூல், திட்டமான அன்பு, பூமி மூன்றையும் திரும்பவும் வெல்ல வேண்டும் (ப – 480)

கிளர்ச்சி நெருப்பை அவியாமல் காப்பாற்றிக் கொண்டு வர வேண்டும். அதற்குத்தான் இந்தப் பிரெஞ்சுப் மொழிப் படைப்பின் தமிழ்மொழிபெயர்ப்பு நூல் என்று கருதுகிறேன். வாழ்வு குறித்தும், மனிதம் படும் வதை குறித்தும் கொண்ட தீவிரமான ஈடுபாட்டோடு கூடிய தேடல் உணர்வுதான் இத்தகையக் கடுமையானதொரு மொழிபெயர்ப்பு வேலைப்பாட்டினைச் சாதித்துக் காட்டியிருக்கிறது.

க. பஞ்சாங்கம்

நூல் விவரம்

ஆல்பர்ட் காம்யூ, புரட்சியாளன், மொ.பு. நாகரத்தினம் கிருஷ்ணா, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில், 2016, பக்.399. விலை, ரூ.475.

கட்டுரை

மே, 11 : என்ன உலகமே, ஞாபகமிருக்கா !

20 வருடங்களுக்கு முன் (1998), இதே நாளில்தான் இந்தியா போக்ரான்-2 என்று பின்னால் அழைக்கப்பட்ட, அதிரடி நவீன அணு ஆயுத சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியது. ’ஆபரேஷன் ஷக்தி’ என கோட்-பெயர் கொண்ட இந்த அணு ஆயுத சோதனைகளின் முதல் பாகமாக மூன்று அணு ஆயுதங்களை ராஜஸ்தானின் போக்ரான் (Pokhran) பாலைவனத்தில், பூமிக்கடியில் வெடித்து தூள்கிளப்பியது இந்தியா! 28 more words

அனுபவம்

பிம்பங்களைச் சிதைப்போம்

// ஈழ விடுதலைப் போராட்டத் தலைவர்கள் எல்லோருமே பிம்பக் கட்டமைப்புகள்தான். அவர்கள் சமூகம் குறித்து, விடுதலை குறித்து, பொருளாதாரம் குறித்து, சுற்றுச்சூழல் குறித்து, சமூகவிடுதலை குறித்து, தத்துவம் குறித்து, வரலாறு குறித்து தீவிரமாகவும் ஆய்வுத்தன்மையுடனும் பேசிய, எழுதிய, பேட்டியளித்த கருத்துகளை கண்டடைய முடிவதேயில்லை.//  – 06.05.18, FB 6 more words

விமர்சனம்

"நீட்"டான அபாயம்

நீட்டான தமிழக மாணவர்கள், இனிமேல் ”நீட்” தேர்வால் அவதி படுவர்.

வருகின்ற 6 ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நீட் தேர்வு நிச்சயமாக பல பிரச்சனைகளை நம் தமிழக மாணவர்களுக்கு தந்து இருக்கின்றது என்பதில் மாற்று கருத்து தேவை இல்லை.

சென்ற வருடம் நீட் தேர்வு தமிழகத்திற்கு இருக்கிறதா இல்லையா என்பதில் பல சந்தேகங்கள் நிறைந்து, பிறகு மத்திய அரசால் நீட் தேர்வு நடைபெற்றது.

அதிலும் நிறைய தில்லுமுல்லுகள். மாணவர்கள் ஆடை முதல் உடைமை கட்டுப்பாடு வரை பல பிரெச்சனைகள் நம் தமிழக்கத்தில் நடந்தது. இங்கே தமிழ்நாட்டில் பலர் சட்டையை கிழித்துவிட்டு (ஆடை கட்டுப்பாட்டின் படி) மனது நொந்து தேர்வு எழுதிக்கொண்டிருக்க, வடக்கு மாநிலங்களில் முழு கை சட்டை மற்றும் டீஷிர்ட் என்று எந்த கட்டுப்பாடும் இன்றி தேர்வு எழுதினர்.

இவை அனைத்தையும் நாம் மிகவும் எதிர்த்தாலும் எந்த பயனும் இன்றி இந்த முறையும் நமக்கு கிடைத்தது என்னவோ அநீதி தான்.

மற்ற மாநிலங்களில், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மையம் அருகிலும், தமிழ்நாட்டில் குறிப்பாக தெற்கு தமிழகத்தை (திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் மற்றும் திருச்சி) சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தேர்வு நடைபெறும் தேதி : மே 6.

அனால் ஏப்ரல் 26 ஆம் தேதி நீதிமன்றத்தில் இதை வைத்து வழக்கு நடக்கின்றது. அதாவது தமிழகத்தில் அவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும் என்று வாதாடி கொண்டு இருந்தனர். ஏழை மாணவர்கள் அதிகம் என்றும் அவர்களால் அதிகம் செலவு செய்வது கடினம் என்று பல கருத்துக்கள் முன் வைக்க படுகின்றது.

இதை கேட்டு அறிந்த நீதிமன்றம் “சிபிஎஸ்ஈ”விடம் கூறியதாவது, ‘வெளி மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் பெரும்பாலும் கிராமபுரத்தை சேர்ந்தவர்கள். அவர்களால் வெகு தொலைவு சென்று செலவு செய்து தேர்வு எழுதுவது சிரமம். அது மட்டும் இன்றி அவர்களுடைய பாதுகாப்பையும் நாம் கருத்தில் வைக்க வேண்டும். அதனால் அந்த மாணவர்களுக்கு அருகில் தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும்.’

ஆனால் நீதி மன்றமோ இன்றைய (மே 3 ) தீர்ப்பில் “மாணவர்கள் இந்த முறை எங்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுஉள்ளதோ அங்கே சென்று எழுதவும்.” என்று கூறி விட்டது.

பல மாணவர்கள் எப்படியும் தேர்வு மையம் மாறி விடும் என்ற எண்ணத்தில் கேரளாவிற்கு பதிவு செய்த ரயில் டிக்கெட்களை ரத்து செய்து இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கின்றனர்.

இது சிறிய பிரச்சனை இல்லை. ஆனால் நீட் தேர்வை ஆதரிப்போர் பலர் “வேறு மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதுவதில் என்ன பிரச்சனை என்றும், இதுக்கு கூட செலவு செய்ய முடியாத என்றும்” கூறுவதை காண முடிகின்றது. நம்மால் செலவு செய்ய முடியும் அதனால் அடுத்தவர்களுக்கு செலவு செய்யலாம் என்கிற மனநிலை இது. இது மிகவும் தவறு.

  1. இங்கு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பதற்காகவே இலவச மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டு இன்றளவும் பின்பற்றப்பட்டு இருக்கின்றது.
  2. இங்கு பேருந்து செலவு இருப்பதால் மாணவர்கள் கஷ்டபட கூடாது என்பதற்காக இலவச பேருந்து டிக்கெட் வழங்க பட்டுக்கொண்டிருக்கிறது.
  3. பெண்கள் அதிகம் படிக்க வேண்டும் என்பதற்காக இலவச சைக்கிள் வழங்க பட்டு கொண்டிருக்கின்றது.

இப்படி பல சிரமங்களில் திக்கி திணறி வாழும் குழுவிற்குள் இந்த செயல் குண்டு துளைப்பதை போன்றதாகும்.

இதில் நேரடியாக பாதிக்கப்படுபவர்கள்,

  1. பெண்கள் .
  2. மிகவும் வறுமை நிலையை உடைய மக்கள்.
  3. உடல் ஊனமுற்றவர்கள்.
  4. பெற்றோருடன் பயணம் செய்ய முடியாத மாணவர்கள்.
  5. தேர்வு மையம் மாறி விடும் என்று எண்ணி பயணசீட்டு பதியாதவர்கள்.

மேலும் சிரமங்களை மீறி தேர்வு எழுத செல்பவர்களுக்கு, பயணத்தின் மூலம் சிறு தொந்தரவுகள் இருக்கும், பணம் செலவு செய்வதில் பிரச்சனைகள் இருக்கும், மொழி சிரமங்கள் இருக்கும்.

சென்ற முறையை விட இந்த முறை தமிழகம் நீட் தேர்வின் மூலமாக மிகவும் சிரமத்துளாகி இருக்கிறது என்பது மறுக்கவே கூடாத உண்மை.

நிச்சயமாக இந்த முறை தமிழக மாணவர்கள் குறிப்பாக பெண்கள், மருத்துவ படிப்பில் குறைவாக தான் சேருவர் என்று பல மருத்துவர்களும் சமூக சிந்தனையாளர்களும் குறிப்பிட்டுருப்பது மிகுந்த கோவத்தை உண்டாக்குகிறது.

நாம் நீட் தேர்வையும் எதிர்க்க வேண்டும். நீட் தேர்வினால் நம்மை சிரமப்படுத்தும் போக்கையும் எதிர்க்க வேண்டும்.

கட்டுரை

ஐபிஎல்: மண்ணைக் கவ்விய மும்பை இண்டியன்ஸ்!

நேற்று (24-4-18) ஐபிஎல்-இல் குறைந்தபட்ச ஸ்கோர் போட்டியொன்று, காண சற்று விசித்திரமாக இருந்தது. மும்பை இண்டியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மும்பையில் மோதிய போட்டி. எப்போதும் தோற்பதே நமக்கு வழக்கமாப் போச்சே..இந்தத் தடவையாவது ஜெயிச்சு, சச்சின் டெண்டுல்கரின் பிறந்த நாளில் அவருக்கு ஒரு வெற்றிப்பரிசு தரலாம் என நினைத்து மும்பை இண்டியன்ஸ் இறங்கியதாகத்தான் தோன்றியது ஆரம்பத்தில். 14 more words

அனுபவம்

தன்னைத்தானே வெல்ல முடியாத மனிதர்கள் தத்தமது வாழ்வினை எவ்வாறு வெல்ல முடியும்?

ஓம் குருவே துணை!

உலக வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திண்டாடும் மனிதர்களுக்கு நற் போதனைகளை அருளி அவர்களது வாழ்வினை பிரகாசமாக மிளிர வைப்பதற்காக கால நேரங்களை பொருட்படுத்தாது, தன்னலம் கருதாது, உலக மக்கள் உய்வடைவதற்காக மக்கள் தொண்டே மகேசன் தொண்டெனக் கருதி தனது குருநாதரான பகவான் காயத்திரி சித்தர் ஆர்.கே.முருகேசு சுவாமிகளின் நெறி நின்று, அவர் இட்ட கட்டளையினை சிரம் மேற் தாங்கி இந்த தெய்வீக ஞானப் பணியினை மட்டக்களப்பு பெரிய உப்போடையில் ஸ்ரீ பேரின்ப ஞானபீடம் அமைத்து முன்னெடுத்து வருகிறார் ஆன்மீகக் குரு மகாயோகி திரு.எஸ்.புண்ணியரெத்தினம் சுவாமிகள்.

சுவாமிகளால் தினந்தோறும் பக்தர்களுக்கு அருளப்படும் ஆன்மீக அருளுபதேசத் தொகுப்பினை உலக வாழ் மக்களின் நன்மை கருதி இவ்விணையத்தளம்  வாயிலாக தருவதில் ஆனந்தமடைகிறோம்.

அந்த வகையில்,  மலர்ந்த விளம்பி வருடப்பிறப்பினை முன்னிட்டு இடம்பெற்ற விசேட பூசையினைத் தொடர்ந்து,  ஆன்மீகக் குரு மகாயோகி திரு.எஸ்.புண்ணியரெத்தினம் சுவாமிகள் ஆற்றிய உபதேசத்தின் தொகுப்பு:

“தன்னைத்தானே வெல்ல முடியாத மனிதர்கள் தத்தமது வாழ்வினை எவ்வாறு வெல்ல முடியும்?

நோய்ப்பிணி பசிப்பிணி இவைகளைக் கடந்து மனதில் ஏற்படும் தீய எண்ணப் பிரவாகங்கள் அதனால் குடும்பங்கள் மற்றும் உறவுகளுக்குள் ஏற்படும் கருத்து வேறு பாடுகள் கோப தாபங்கள் என மனதால் ஏற்படும் சிக்கல்கள் பற்றி பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

மனிதப் பிறவியென்பது எமது பாவ புண்ணியங்களின் அளவு கோலாகவே காணப்படுகிறது தராசு சம நிலை இழக்கும் போது ஒன்று கொள்வனவாளர் நஷ்டப் படுவார் அல்லது விற்பனையாளர் நஷ்டப்படுவார் அதே போல்தான் பல பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களை கணக்கிடும் அளவு கோல்தான் இந்த மனிதப் பிறவி ஏனெனில் பாவம் புண்ணியம் இரண்டும் சம நிலையில் உள்ள போதே இந்த அரிய பிறவி கிட்டுகிறது
இவ்வாறு பிறந்த மனிதன் தன்னை உணர்ந்து தலைவனை உணர முற்படாதவிடத்து ஊழ்வினைப் பயன் துன்பப்பாதைக்கு வழி வகுத்து மீண்டும் ஒரு பிறவிக்கு இட்டுச் செல்கிறது என்பதில் எந்த வித ஐயமுமில்லை.

மனம் எனும் இம் மூன்றெழுத்தில் பிரபஞ்சத்தை இயக்கவல்ல படைத்தல், காத்தல், அழித்தல் என முப்பெரும் சக்திகள் அடங்கி ஒடுங்கி செயலற்றுள்ளதை எம்மில் எத்தனை பேர்கள் அறிவார்கள். இந்த உயரிய சக்தி பொருந்திய ஆழ் மனதினை இயங்கச் செய்து உயர் பேரின்பமாம் இறையின்பத்தை தொட்டு அனுபவித்து இறையெனும் திகட்டாத மாறாத தெவிட்டாத சக்தியோடு இரண்டறக் கலப்பது எவ்வாறு?

பஞ்ச பூதங்களால் ஆனதுதான் இந்த உலகம்; அதே போல் பஞ்ச பூத தத்துவங்கள் அடங்கிய பஞ்ச புலன்களால் ஆனது மனித சரீரம். உலகில் எவ்வாறு மாற்றங்கள் நிகழ்கின்றனவோ, அதே போல மனித சரீரத்திலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. இதற்கு சிறிதான உதாரணம் ஒன்று: “வெப்பமாக காணப்படும் ஒரு பிரதேசத்தில் திடீரென கால நிலை மாற்றமடைந்து குளிச்சியான பனிப் பொழிகிறது என வைத்துக் கொள்வோம். உடனடியாக அந்த கால நிலைக்கு மனித சரீரம் தன்னை மாற்றிக் கொள்ளாது. அதனால் சிலருக்கு தடிமல், காய்ச்சல் என சில உபாதைகள் வரலாம், ஆனால் ஒன்றோ அல்லது இரண்டு நாட்களின் பின்னர் உடல் சம நிலையினைப் பேணும் தன்மையினை பெற்றுக் கொள்ளும்”

இந்த உதாரண நிகழ்வின் மூலம் பாரிய உண்மையினை நாம் உணர்ந்து கொள்ள முடியும். அண்டத்தில் மாற்றம் ஏற்படும் போது பிண்டங்களிலும் அந்த மாற்றத்தின் தாக்கம் உணரப் படுகிறது. ஆக இவ்வாறு சாதாரண கால நிலைகளின் தாக்கங்களை உணர முடிகின்ற பிண்டங்களால் ஏன் ஏனைய சக்திகளையும் உணர முடியாதுள்ளது!

மனிதன் தனக்கும் தன்னை சார்ந்த சமூகத்துக்கும் எதுவெல்லாம் தேவையோ அந்த விடயங்களை இந்த பிரபஞ்சத்தை இயக்கும் ஆழ் மனமான இறைவனிடம் இருந்து ஈர்த்தெடுக்க தவறி விட்டான். தன் மேல் மனத்தில் படிந்துள்ள ஜென்மாதி ஜென்மங்களில் செய்த பாவ வினைகளை தூர்வார தவறியதன் விளைவே தனி மனித சிக்கல். அது விகாரமாகி பல மனித சிக்கல், இன்னும் பூதாகரமாகி நாடுகளுக்கிடையே யுத்தங்கள், உலகப் போர்கள் உயிர்களை அழிக்கவல்ல இராசாயன நச்சு வாயுக்களின் தாக்கம் என உலக அழிவுக்கு வித்திட்டு விருட்சமாக வளர்ந்து, அந்த தீய விருட்சத்தின் பலனாக இயற்கை சீற்றமடைந்து எரிமலைக் குமுறல்களாக, சுனாமியாக, நில நடுக்கங்களாக ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டு பல உயிர்களையும், தேசங்களையும் காவு கொண்டு வருவதனை கண்கூடாக பார்க்க முடிகிறது.

இவற்றுக்கெல்லாம் மனிதனே காரணமாக அமைந்து விட்டு இறைவனை நொந்து கொள்கிறான். பஞ்ச புலன்களால் சேகரிக்கப்படும் தீய எண்ணங்களை உயரிய சக்தி படைத்த “வேதங்களில் நான் காயத்திரி” என ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவினால் கூறப்பட்ட மகா மந்திரமான காயத்ரி மந்திரத்தினை உள்ளன்போடு காலை மாலை என இரு நேரங்களிலும் ஜெபித்து பின்னர் ஐந்து நிமிடமாவது தத்தமது இஷ்ட தெய்வங்களை நினைத்து வழிபட்டு வருவோமானால் மனதில் படிந்துள்ள பாவ வினைகள் மகா சக்தி படைத்த இம் மந்திரத்தின் அதிர்வலைகள் மூலம் சுத்தமாக்கப்பட்டு நல்ல எண்ணங்களான அன்பு, கருணை, காருண்யம், பரோபகார சிந்தனைகள், பிறருக்கு உதவும் குணம், தன்னைப் போல் பிறரையும் நேசிக்கும் தன்மை என இறைவனை அடையும் மார்க்கத்திற்கான திறவு கோல்கள் மனித மனத்தினூடாக வசப்படும். இவ்வாறு நல்ல தன்மை பொருந்திய மனம் ஏகாக்காரம் எனும் ஒரு நிலைப் படும். அந்த ஒரு நிலையில் வில்லில் நாணேற்றிய அம்பு போல குறி தவறாது இலக்கினை நோக்கி மிக வேகமாக பயணிக்கும். உணர்வு நிலையில் எம்மையெல்லாம் காத்தருளும் ஆழ்மனமான மனதிற்குள், மேல் மனதின் மூலம் சித்த மனதில் சேகரிக்கப்பட்ட தீய எண்ணங்களை கடந்து, மெதுவாக நுழையும். அங்கே நுழைந்த எண்ணம் தன்னிலை மறந்து இறையின்பத்தில் திளைத்து, தான் யார்? தலைவன் யார்? என்ற கேள்விகளுக்கு விடையினைத் தேடிக் கொண்டு, ஞானம் எனும் ஆறாவது அறிவினைப் பெற்று, புனிதமடைந்த உயர் ஆத்மாவாக உடலுக்குள் இருந்து கொண்டே புலன்களின் தாக்கத்தில் இருந்து விடுதலையடைந்து முக்தி பெற்றவர்களாக, ஜீவன் முக்தராக, சித்தர்களாக, யோகிகளாக, ஞானிகளாக வாழலாம்.

தன் ஞானத்தின் மூலம் ஒவ்வொரு செயலின் தன்மைகளையும் பிரித்தறிந்து நன்மை தீமைகளை உணர்ந்து செயலாற்றும் சக்தி பெற்ற மனிதர்கள் வாழும் உலகில் பின்னர் நோய்ப்பிணி ஏது! பசிப்பிணி ஏது! இயற்கை சீற்றங்கள் ஏது! நினைத்தால்தான் மரணம் எனும் நிலையினை அல்லவா மனிதன் பெற்று விடுவான். எமதர்மர் கூட கையேந்தி நிற்கும் நிலை ஏற்பட்டு விடும்.

தாவரங்களும் விலங்குகளும் தமக்கு தேவையான உணவினை அவற்றுக்குரிய சக்திகளை மட்டுமே இப் பிரபஞ்சத்தில் இருந்து எடுத்துக் கொண்டு தானும் பயனுற்று மற்றவர்களுக்கும் பயன் தந்து மகிழ்கின்றன. ஆனால் மனிதன் தனக்கு தேவையான இறைவனை தன் மனதினுள் இருத்த தவறியதன் விளைவே இன்றைய உலக வேகத்திற்கு தன்னால் ஈடுகொடுக்க முடியாதவனாய் அழுகிறான்.

தொடக்கப் புள்ளியினை உற்று நோக்கினால் இடையில் வந்த பிசிறுகள் தானாக நீங்கி விடும். இவ்வாறு தடைகளை நீக்கி இறை சாம்ராஜ்யம் அழைத்துச் செல்ல அந்த நிலையினை அடைந்த உணர்ந்த ஒருவர் வேண்டுமென்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எந்த விடயத்திற்கும் வழிகாட்டி மிக மிக அவசியம் அந்த வகையில் எம்மையெல்லாம் இந்த தர்ம வழியில் மனதை செலுத்த வைத்து இறையின்பத்தினை ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டுமென்று திட சங்கற்பம் பூண்டு நேரடியாகவும் பத்திரிகை வாயிலாகவும் வள்ளலார் கூவியதைப் போன்று “கடை விரித்தேன் கொள்வாரில்லை கட்டிக் கொண்டேன்” என இக் கலியுகத்திலும் தன் சார்ந்த எதைப் பற்றியும் கருத்தில் கொள்ளாது உலக மக்களின் நன்மையினை மட்டும் கருத்தில் கொண்டு எந்த விதமான ஆடம்பரங்களுமின்றி அகத்தியராம் ஞான குரு, அவர் வழித் தோன்றலில் கண்ணையா யோகி மகரிஷி, அவரின் சீடர் பகவான் ஸ்ரீ காயத்திரி சித்தர் என வாழையடி வாழையாக வந்த பரம்படையில் நான்காவது தலை முறையாக அவதரித்த ஞான வள்ளல் மகா யோகி புண்ணியரெத்தினம் சுவாமிகளால் எவருமே அறிந்திட முடியாத, ஆதி காலங்களில் மகரிஷிகளினால் மறைக்கப்பட்ட குப்த வித்தைகள், மனதைப் பற்றிய இரகசிய உண்மைகள் என்பவற்றுடன், மனதை வென்றால் அகிலத்தையும் ஆளலாம், படைப்பாளி மனிதனே! மனிதனும் தெய்வமாகலாம் என உலகின் ஒரு மூலையில் இருந்து கொண்டு உலகமே உய்வதற்கான வழிகளை தன் உபதேசம் மூலம் அருளி ஆசீர்வதித்து வருகிறார்.

இருந்தும் இயந்திர உலகில் மனிதர்கள் போலிகளின் பக்கம் மனதினை செலுத்தி மாயையில் சிக்குண்டு மாதவனை காணத் தவறுகிறார்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களே இறைவன் இல்லையென முடிவுக்கு வந்தவர்கள். இப்போது புரிகிறதல்லவா எது உண்மை எது பொய் என்று எனவே உண்மையினை நோக்கி எம் மனக் குதிரையில் ஏறி சவாரி செய்து இறை சாம்ராஜ்யத்திற்குள் நுழைந்திடுவோம்.

ஓம் நமோ பகவதே புண்ணியரெத்தினாய!
ஓம் புவனலோக ஈஸ்வராய நமக!!