இன்று அசோகமித்ரன் அவர்களுக்கு பிறந்தநாள்.

மனமும் உடலும் முதிர்ச்சியடைந்த

ஒரு பிராயத்தில் தான் நான் அவரது கதைகளை

வாசிக்க ஆரம்பித்தேன்.

மேலோட்டமாகப் பார்த்தால் நடுத்தர வர்க்கத்தைப் பற்றிய

சாதாரண கதைகளாகத்தான் அவை தோற்றமளிக்கின்றன.

ஆனால் தோற்றத்தின் எளிமையை மீறி

அவை அசாதாரமான கதைகள்.

மனிதனின் எல்லா (பெரும்பாலும் கீழ்மையான )வல்லமைகளையும் மீறி வாழ்க்கை அவனை மிக எளிமையாக எந்த பிரயத்தனமும் இன்றி வென்றுவிடும் விதத்தை சொல்லிச் செல்லும் கதைகள். எளிமையும் சாரமும் மிகுந்த ஓர் மொழி அவருடையது.அருகம்புல் சாரு போல.

எல்லாக் கதைகளிலும் வாழ்வின் ஏதோ ஒரு தீராத கோட்டுச் சித்திரங்களை நாம் காணமுடியும். மேலோட்டமான அறிவால் அடைய முடியாத வாழ்வின் சந்தோசம் ஒரு மீன் முள்ளைப் போல அவரது ஆக்கங்களில்

எப்போதும் இருக்கிறது. அதைக் கண்டறிய முயல்வதே ஒரு வாசகனின் சவால்.

‘பிரயாணம்’ எனக்கு எப்போதும் பிடித்தமான கதை.

நாவல்களில் ‘கரைந்த நிழல்களும்’ மானசரேவரும்.

வாழ்வின் கசப்புகளை எந்தப் புகாருமின்றி கடந்து போக அவரது கதைகளே எனக்குக் கற்றுத்தந்தன.

அவருக்கு என் குரு வணக்கம்.!

[ 22/9/2014 அன்று அசோகமித்ரனின் பிறந்த நாளன்று முகநூலில் எழுதிய குறிப்பு]