குறிச்சொற்கள் » ஆய்வுகள்

தாஜ்மகாலும் சாரணபாஸ்கரனாரும்

தாஜ்மகாலை பாடாத கவிஞன் இருக்கவே முடியாது. யார்தான் அதை பாடவில்லை.?

“இதுதான் காதலுக்காக சிந்தப்பட்ட உயரமான கண்ணீர்த்துளி” என்று மிக  அழகாகச் சொல்லுவார் கவிஞர் வைரமுத்து. , “கண்மணியை உள்ளே புதைத்துவிட்டு வெள்ளை விழி மட்டும் வெளியே தெரிகிறது” என்று அவர் பாடியபோது அவருடைய கற்பனை வளத்தில் நாமும் மூழ்கிப் போகிறோம்.

கவிஞர் சாரண பாஸ்கரனும் தாஜ்மகாலைப் புகழ்ந்து அழகாக கவிதை வடித்திருக்கிறார். தாஜ்மகாலை அவர் காணச் செல்கிறார். தனியாக அல்ல; தன் துணைவியாருடன். அந்த பளிங்கு கட்டிடத்தை நெருங்கியவுடன் அவரது இல்லத்தரசி மகிழ்ந்துப்போய் “நற்கனவு இன்றைக்கே பலித்தது” என்று கணவரிடம் பூரிப்பாய்ச் சொல்கிறார். இவரும் அதை நேரில் கண்டு மூச்சடைத்து, பேச்சடைத்து நிற்கிறார்.

இல்லத்தரசி உயர்ந்து நிற்கும் மினாராவைக் காட்டி ஏதோ சொல்கிறார். பிறகு இருவரும் யமுனை நதிக்கரையின் அழகை அணுஅணுவாய் இரசிக்கிறர்கள்.  நாமும் அவரது அனுபவத்திலும், சொல்லாடலிலும் மூழ்கிப் போகிறோம்.

“கவிஞன் தன்னுடைய அனுபவத்தை கவிதையை சித்தரித்திருக்கிறான். இதிலென்ன பெரிய ஆச்சரியம்?” என்று நீங்கள் என்னைக் கேட்பது நன்றாகப் புரிகிறது,

ஆம். ஆச்சரியம் இருக்கத்தான் செய்கிறது.

முதல் ஆச்சரியம் கவிஞர் சாரண பாஸ்கரன் ஆக்ரா சென்றதும் இல்லை, தாஜ்மகாலைக்  கண்ணால்   கண்டதும் இல்லை.

இரண்டாவது ஆச்சரியம் அவர் இக்கவிதையை 1958-ஆம் ஆண்டு மணிச்சரத்தில் எழுதியபோது அவருக்கு மனைவியே இல்லை.

அதைப்பற்றி பிற்காலத்தில் அவரிடம் கேட்டபோது அவர் உரைத்த பதில்:

“அந்த மஹல் நிறைவாழ்வு வாழ்ந்தஒரு தம்பதியரின் (மும்தாஜ்-ஷாஜகான்) நினைவுச் சின்னம். அதைக்காணச் செல்வோரும் தம்பதி சமேதராகவே செல்லவேண்டும் என்பதற்காகவே அதை எழுதுவதற்காக ஒரு மனைவியையும் துணைக்கு அழைத்துக் கொள்ள வேண்டிய அவசியமேற்பட்டது.

“தொழில் தர்மம்” “Job Satisfaction” என்றெல்லாம் கூறுகிறார்களே..? அது இதுதானோ..?

(காஷ்மீர்.. பியுட்டிஃபுல் காஷ்மீர்,  காஷ்மீர் வொண்டர்ஃபுல் காஷ்மீர் என்று பாடிய கவிஞர் வாலி கூட காஷ்மீரை எட்டிப் பார்க்காதவர்தான்)

#அப்துல்கையூம்

சாரண பாஸ்கரன்

மனு ஸ்மிருதி குறித்து.. டாக்டர் ராஜம் அவர்களுடன்..

ராஜம்:
அன்புள்ள திரு சன்னா, வணக்கம். எனக்குள்ள சில ஐயங்களுக்கும்  கேள்விகளுக்கு நீங்கள்தான் துல்லியமான விடையளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.   நான் தமிழகத்தில் இருந்தவரை (1975) ‘தலித்’ என்ற சொல்லைக் கேள்விப்பட்டதில்லை. இந்தச்சொல்லின் பொருள் என்ன? இது எப்போது ஏன் தமிழகத்தில் புகுந்தது?

கௌதம சன்னா

மோடி_நிகழ்த்திய_பொருளாதாரப்_பேரழிவு-2…

கரன்சியில் நடத்திய நாடகம்..

ஜப்பானுக்கு விமானம் ஏறிய மோடி படியில் நின்று புன்னகைத்தவாறு கையசைத்தத் தோற்றத்ததைப் பார்த்த போது, ஓர் அமெரிக்க சிப்பாய் இந்தியாவின் மீது அணு குண்டை வீசிவிட்டு பெருமிதத்தோடு தப்பி ஓடுவதைப் போலத் தோன்றியது. ஒரு பொருளாதாரப் பேரழிவை நிகழ்த்திவிட்டு எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் அவர் காணப்படுவதைப் போலவே அவரது தேச பக்தர்களும் இருப்பது ஆச்சர்யம்தான்.

கௌதம சன்னா

மோடி_நிகழ்த்தியப்_பொருளாதாரப்_பேரழிவு-1

பங்கு சந்தை வீழ்ச்சி..

யாரும் எதிர்பாராத நேரத்தில் கொரில்லாத் தாக்குதலைப் போல மோடியால் நிகழ்த்தப்பட்ட இந்த ரூபாய் மாற்றம் எனும் பொருளாதாரத் தாக்குதலின் சிதைவுகளை, விளைவுகளை பார்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. சீர்திருத்தம் என்ற இந்த மாயையின் பின்னால் திரளும் தேச பக்தர்களின் அறிவுக்கு எட்டாத பகுதிகளுக்கு போவது நமது கடமை..

அரசியல்

சேரி சாதி தீண்டாமை - 9

சேரிகளின் தோற்றம் பற்றின அம்பேத்கரின் கோட்பாடு எழுப்பும் இடைவெளிகள்..

– கௌதம சன்னா

சேரிகள் உருவாக்கம் பற்றின் அம்பேத்கரிகளின் — கருத்துகள் அடிப்படையான ஒரு தளத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளன. என்றாலும் நம் காலத்தில் அவரது கருத்துகளைப் புரிந்துக் கொள்வதில் உள்ள இடர்பாடுகளைக் கண்க்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கௌதம சன்னா

குறள் புள்ளிவிவரம் - தளை

குறள் வெண்பாவில் இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் மட்டுமே வரும். இயற்சீர் வெண்டளை மா முன் நிரை அல்லது விள முன் நேர் என்று வரும். வெண்சீர் வெண்டளை கனி முன் நேர் என்று வரும். அவற்றைப் பற்றிய புள்ளிவிவரங்கள் கீழே உள்ளன.

தளை எண்ணிக்கை விழுக்காடு மொத்தம் 7980 100.00% மா முன் நிரை 3421 42.87% விள முன் நேர் 1627 20.39% இயற்சீர் வெண்டளை 5048 63.26% வெண்சீர் வெண்டளை 2932 36.74%

குறள்களில் இயற்சீரும் வெண்சீரும் பொதுவாகக் கலந்து வரும். ஆனால், முழுவதும் இயற்சீரால் அமைந்த 1 குறளும், முழுவதும் வெண்சீரால் அமைந்த பல குறள்களும் உள்ளன. அவற்றின் புள்ளிவிவரம் கீழே உள்ளது.

இயற்சீர் வெண்சீர்
குறள் விழுக்காடு 0 6 1 0.08% காண்பி 1 5 21 1.58% காண்பி 2 4 158 11.88% காண்பி 3 3 367 27.59%  காண்பி 4 2 404 30.38% காண்பி 5 1 280 21.05% காண்பி 6 0 99 7.44% காண்பி
எழுதியவை

குறள் புள்ளிவிவரம் - சீர்

தமிழ்ச் செய்யுள்கள் அசை, சீர், தளைக் கட்டுப்பாடுகளை பின்பற்றியே ஆக வேண்டும். அதிலும், வெண்பா எழுதும் போது, இக்கட்டுப்பாடுகளை மீற முடியாது.

குறள்களில் உள்ள சீர்களின் மொத்த எண்ணிக்கை 9310. அதாவது, 1330 x 7. ஒவ்வொரு குறளும் 7 சீர்களால் அமைய வேண்டும் என்பது இலக்கணம். அதன்படியே அமைந்துள்ளன. வெண்பா இலக்கணப் படி, ஓரசைச் சீர்கள் கடைச் சீராக மட்டுமே அமைய முடியும். எனவே, ஒரு குறளில் 0 அல்லது 1 ஓரசைச் சீர்கள் மட்டுமே அமையும்.

சீர் பற்றிய புள்ளிவிவரங்கள் கீழே உள்ளன.

அசை எண்ணிக்கை விழுக்காடு மொத்தம் 9310 100.00% ஓரசை 839 9.01% ஈரசை 5539 59.50% மூவசை 2932 31.49%

சீர்களின் எண்ணிக்கை அடிப்படையில், குறள்கள் எத்தனை அமைந்துள்ளன என்று கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

ஓரசை ஈரசை மூவசை குறள்கள் விழுக்காடு 0 1 6 1 0.08% காண்பி 0 2 5 11 0.83% காண்பி 0 3 4 49 3.68% காண்பி 0 4 3 139 10.45% காண்பி 0 5 2 139 10.45% காண்பி 0 6 1 118 8.87% காண்பி 0 7 0 34 2.56% காண்பி 1 1 5 10 0.75% காண்பி 1 2 4 109 8.20% காண்பி 1 3 3 228 17.14% காண்பி 1 4 2 265 19.92% காண்பி 1 5 1 162 12.18% காண்பி 1 6 0 65 4.89% காண்பி

வெண்பாவின் ஈற்றுச் சீர் நாள் (நேரசை), மலர் (நிரையசை), காசு (தேமா) அல்லது பிறப்பு (புளிமா) என்ற முறையில் அமைதல் வேண்டும். இம்முறைகளில் அமைந்த குறள்கள் எத்தனை என்ற புள்ளிவிவரம் கீழே உள்ளது.

ஈற்றுச் சீர் குறள்கள் விழுக்காடு நாள் 174 13.08% காண்பி மலர் 665 50.00% காண்பி காசு 200 15.04% காண்பி பிறப்பு 291 21.88% காண்பி

ஓரசைச் சீர்கள் நேர், நிரை என்றும், ஈரசைச் சீர்கள் மாச்சீர், விளச்சீர் என்றும், மூவசைச் சீர்கள் காய்ச்சீர், கனிச்சீர் என்றும் வகைப் படுத்தப் பட்டுள்ளன. வெண்பாவில் கனிச்சீர் வராது. அதே போல, நான்கசைச் சீர்களும் வரா. அவற்றின் புள்ளிவிவரம் கீழே உள்ளது.

சீர் எண்ணிக்கை விழுக்காடு
எழுதியவை