குறிச்சொற்கள் » அரசியல்

ஜம்மு-காஷ்மீர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த "ஆளுநரின் தொலைபேசி அழைப்பு!

மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி-பாஜக கூட்டணி அரசின் ஆட்சியானது, ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என். வோராவின் தொலைபேசி அழைப்பு மூலம் முடிவுக்கு வந்திருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு அதிகாரிகள் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீர் தலைமை செயலகத்தில் மெஹபூபா முஃப்தி தனது வழக்கமான பணிகளில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தார். அப்போது தலைமை செயலர் பி.பி. வியாசுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆளுநர் வோரா, முதல்வர் மெஹபூபா முஃப்தி எங்குள்ளார்? அவருடன் உடனடியாக தொலைபேசியில் பேச ஏற்பாடு செய்யுங்கள் எனக் கேட்டார்.
தில்லியில் பாஜக பொது செயலாளர் ராம் மாதவ், மெஹபூபா அரசுக்கு அளித்த ஆதரவை பாஜக வாபஸ் பெறுவது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இந்த தொலைபேசி அழைப்பு வந்தது.
இதைத் தொடர்ந்து, மெஹபூபாவுடன் வோரா தொலைபேசியில் பேசுவதற்கு வியாஸ் ஏற்பாடு செய்தார். அப்போது மெஹபூபா முஃப்தியிடம், பாஜக மாநில தலைவர் ரவீந்தர் ரெய்னாவிடம் இருந்து தனக்கு கடிதம் வந்திருப்பதாகவும், அந்த கடிதத்துடன் பாஜக அமைச்சர்கள் ராஜிநாமா கடிதங்களும் வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மெஹபூபா அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றுக் கொள்வதென்று முடிவு செய்திருப்பதையும் வோரா தெரியப்படுத்தினார்.
ஆளுநர் தொலைபேசியில் தெரிவித்த இந்தத் தகவலை மெஹபூபா முஃப்தி பொறுமையாகவும், அமைதியாகவும் கேட்டார். அதன்பின்னர் இந்த விவகாரம் குறித்து பாஜகவுடன் இனி பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்று அவர் முடிவெடுத்தார். ஆளுநரை சந்தித்து முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வது தொடர்பான கடிதத்தை அளிக்கும் முடிவையும் அவர் எடுத்தார்.
இந்த நிகழ்வுகளுக்கு பின்னரே, தில்லியில் பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ், மெஹபூபா முஃப்தி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக திரும்பப் பெறுவது தொடர்பான தகவலை செய்தியாளர்களிடம் வெளியிட்டார் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

முக்கிய செய்திகள்

"தமிழக போலீசார்" தேடிவரும் குற்றவாளி, "தமிழக அமைச்சர் இல்ல விழாவில் பங்கேற்பு?

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு வழக்கில், சென்னை உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதிக்க மறுத்துவிட்ட நிலையில், தமிழக காவல்துறை, எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை தேடி வருவதாகவும் கூறியது.

ஆனால், போலீசாரால் தேடப்பட்டு வரும் எஸ்.வி.சேகரோ, மத்திய மாநில அமைச்சர்களுடனும், கோவில் குளங்களுக்கும் போலீசார் துணையுடன் சென்று வருகிறார். இது பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி பொது மக்களிடத்திலும் தமிழக காவல்துறைமீது கடுமையான அதிருப்தியை உருவாக்கி உள்ளது.

இந்த நிலையில், பல மாவட்டங்களில் எஸ்.வி.சேகர் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய தமிழக காவல் துறையோ, அவரை கண்டும் காணாமல் போகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில், சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூவிடமும் எஸ்.வி.சேகரை இதுவரை கைது செய்யாதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.

ஆனால், சென்னையில் நடைபெற்ற அமைச்சர் கடம்பூர் ராஜூவின் மகன் அருண்குமார்-திவ்யா ஆகியோரின் திருமண நிச்சயதார்த்த விழாவில், போலீசாரால் தேடப்பட்டு வரும் எஸ்.வி.சேகரும் பங்கேற்றார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த புகைப்படத்தை எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்டு தான் யார் என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளார்.

சமீபத்தில், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுடன் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், தேடப்பட்டு வரும் குற்றவாளியான எஸ்.வி.சேகர் தமிழக அமைச்சர் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முகநூல் பக்கத்தில் சாதாரணமாக முதல்வர் குறித்தோ, அமைச்சர்கள் குறித்தோ பதிவிட்டால் ஓடோடி சென்று கைது செய்யும் காவல்துறை, எஸ்.வி.சேகரை கைது செய்ய உச்சநீதி மன்றமே தடை விதிக்க மறுத்து விட்ட நிலையில், தமிழக மக்களையும், தமிழக காவல்துறையையும் பார்த்து எகத்தாளமாக போஸ் கொடுக்கும் எஸ்.வி.சேகரை கைது செய்ய மறுத்து வரும் தமிழக அரசையும், காவல்துறையையின் நடவடிக்கையை கண்டு மக்கள் வெகுண்டு போய் உள்ளனர்.

சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் கடந்த விசாரணையின்போது, எஸ்.வி. சேகரை கைது செய்யாமலேயே, போலீசார் அவர் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதனையடுத்து வருகிற 20-ந்தேதி ஆஜராக வேண்டும் எஸ்.வி. சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

நதிகள் இணைப்பை துரிதகதியில் செயல் படுத்த மத்திய அரசுக்கு கோரிக்கை!!!

நிதி ஆயோக் அமைப்பின் 4-வது கூட்டம் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திரமோடி தலைமை தாங்கினார். இதில் மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:- 15 more words

முக்கிய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தீவிரமாகும் "தமிழக அரசு!

புதுடெல்லி,

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கூட்டத்திற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

4–வது நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பாக நிறைய கோரிக்கைகள் வைத்திருக்கின்றோம்.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் நீர் மேலாண்மை பணிகளுக்கு முக்கியத்துவம் தருவது குறித்தும், தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்படும் குடிமராமத்து திட்டத்தைப் பற்றியும், விளக்கி மத்திய அரசிற்கு குறிப்பிட்டோம். அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டு இருக்கின்றோம்.

மக்கள் நல்வாழ்வுத் துறையில் ‘‘அனைவருக்கும் நல்வாழ்வு’’ என்ற முன்னோடி திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும், தற்போது தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசின் புதிய திட்டத்துடன் ஒருங்கிணைந்து அதிக மக்கள் பயன்பெற வழிவகை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.

ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் மத்திய அரசால் வளர்ச்சி நோக்கி செல்லும் மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்விரு மாவட்டங்களிலும், மருத்துவக் கல்லூரி துவக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. அதேபோல, விருதுநகர் மாவட்டத்திலே, பல்மருத்துவமனை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த பல்மருத்துவமனையினை அமைப்பதற்கு மத்திய அரசு விரைந்து அனுமதி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.
நோபல் பரிசிற்கு இணையாக காந்தியடிகள் பசுமை பூமி விருது உருவாக்கி ஆண்டுதோறும் வழங்க வேண்டும் என்றும், திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள காந்தி கிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தை மத்திய பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தி ரூ.500 கோடி நிதி உதவி வழங்கிட வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கின்றோம். அதேபோல், மதுரையில் அமைந்துள்ள காந்தி அருங்காட்சியகத்திற்கு ரூ.10 கோடி நிதி வழங்கி மேம்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கின்றோம்.

2011–ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை கணக்கில் கொண்டு நிதி பங்கீடு செய்வதாக உள்ளது. இது தமிழ்நாடு மக்களின் நலனிற்கு எதிராக அமையும் என்பதால், நிதி பங்கீட்டை 1971–ம் ஆண்டு மக்கள்தொகையை அடிப்படையாக கணக்கில் கொண்டு வழங்கிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி இருக்கின்றோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– பிரதமரை தனியாக சந்தித்து பேச முடிந்ததா?. குறிப்பாக காவிரி விவகாரமாக இருக்கட்டும், கிடைக்க வேண்டிய நிலுவை தொகையாக இருக்கட்டும், இதுமாதிரியான வி‌ஷயங்கள் குறித்து தனியாக பேச முடிந்ததா?.
பதில்:– தனியாக பேசினோம். பிரதமர் கூட்டம் முடித்துவிட்டு வரும்போது, அவரிடத்திலே தமிழ்நாட்டினுடைய நிலைமையை எடுத்து கூறியிருக்கின்றோம். தேவையான நிதியை வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கின்றோம்.

கேள்வி:– பிரதமர் ஏதாவது உத்தரவாதம் கொடுத்திருக்கிறாரா?.

பதில்:– அப்படியெல்லாம் எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை.

கேள்வி:– ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து பிரதமர் உங்களிடம் ஏதேனும் கேட்டாரா?.

பதில்:– ஏற்கனவே விசாரணையில் இருக்கிறது.

கேள்வி:– காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநிலம் தற்போது வரை உறுப்பினர்கள் பெயர் ஏதுவும் கொடுக்கவில்லை. இதுதொடர்பாக மீண்டும் வலியுறுத்தினீர்களா?.

பதில்:– இது தொடர்பாக கூட்டத்திலே பேசியிருக்கின்றேன். விரைந்து குழு அமைத்து, அந்த குழு முதல் கூட்டத்தை கூட்டி, தமிழகத்திற்கு தேவையான நீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றோம்.

கேள்வி:– தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் நீங்கள் நேரில் போகவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறதே?
பதில்:– அதாவது எங்களுடைய துணை முதல்–அமைச்சர் மற்ற அமைச்சர்கள் எல்லாம் நேரடியாக போய் அவர்களுக்கு என்னென்ன தேவையோ அத்தனை வசதிகளும் செய்து கொடுத்துள்ளோம். மருத்துவமனையிலே சிகிச்சை பெறுகின்ற அனைவருமே தினந்தோறும் எங்களுடைய இயக்கத்தை சேர்ந்தவர்கள் பார்த்து கொண்டு வருகிறார்கள். அந்த மாவட்ட அமைச்சர் பலமுறை நேரிலே சந்தித்து, அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்யப்பட்டு இருக்கிறது. ஒருவருக்கு கால் அடிபட்டு, கால் எடுக்கப்பட்டு இருக்கிறது. அவரை சென்னை மருத்துவமனையில் சேர்த்து செயற்கை கால் பொருத்தப்பட்டு அவருக்கு பணி வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தார், அதுவும் வழங்குவதாக அவருக்கு வாக்குறுதி கொடுத்துள்ளோம்.

கேள்வி:– எந்த ஒரு வாழ்வாதார போராட்டம் நடந்தாலும் காவல்துறையை வைத்து தமிழக அரசு அடக்குகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.
பதில்:– இது தவறான கருத்து. இது அத்தனை ஊடகங்களுக்கும் தெரியும். பத்திரிகையாளர்களுக்கும் தெரியும். அரசு வந்து ஏற்கனவே 9–4–2018 அன்றே ஸ்டெர்லைட் நிர்வாகம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திலே மேலும் 5 ஆண்டு காலத்திற்கு எங்களுக்கு அனுமதி வேண்டுமென்று விண்ணப்பம் அளித்திருந்தார்கள். அந்த விண்ணப்பத்தை 9–4–2018 அன்று நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதை 13–4–2018 அன்று மாவட்ட கலெக்டர் பத்திரிகை வாயிலாக விளம்பரப்படுத்தினார். ஆகவே, இந்த ஆலை இயங்காது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக அது தடை செய்யப்பட்டு இருக்கிறது. அவர்கள் கேட்ட விரிவாக்கம் கொடுக்கவில்லை. ஆகவே, இந்த ஆலையை இயக்க முடியாது என்ற அறிவிப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

18–4–2018 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சென்று ஏதாவது இயங்குகிறதா, அல்லது என்ன நிலையில் இருக்கிறது என்று ஆய்வு செய்தார்கள். ஆய்வுக்கு பிறகு அவர்களுடைய பரிந்துரையின் அடிப்படையிலே 23–4–2018 அன்று அந்த ஆலைக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது. 20–4–2018 அன்று அங்கிருக்கிற போராட்டக்காரர்களை மாவட்ட சப்–கலெக்டர் அழைத்து பேசியிருக்கின்றார்.
அரசு என்ன என்ன திட்டங்களை செய்திருக்கிறது, என்ன என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது? ஆலை திறக்காது, திறக்கமுடியாத அளவிற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்பது போராட்டக் குழுவினர் அனைவருக்கும் தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முக்கிய செய்திகள்

கலைஞர் மு. கருணாநிதி - 95வது பிறந்த நாள்

03-06-2018

இன்று, தனது 95வது பிறந்த நாள் கொண்டாடும் மாண்புமிகு தமிழக முன்னால் முதல்வர் மற்றும் திமுகவின் தலைவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

கடந்த 70+ ஆண்டுகளில் தமிழகம் மற்றும் இந்திய வரலாற்றின் தவிர்க்க முடியாத மிக முக்கிய அரசியல் தலைவர் கலைஞர் அவர்கள். அவருடைய கவிதை நடை பேச்சு, தலைமை பொறுப்பு, சமயோசித புத்தி மற்றும் சுய மரியாதை சிந்தனை இவற்றுடன் உழைப்பு ஆகியவை திமுகவின் நிரந்தர தலைவராகவும் மற்றும் 5 முறை தமிழக முதலமைச்சராகவும் ஆக்கியது.

அவருக்கு எதிர் பக்கத்தில் இருப்பவர்களும் அவரின் உழைப்பு மற்றும் தமிழ் / அரசியல் அறிவுத் திறனுக்கு ரசிகர்களாக இருப்பார்கள்.

அவர் தன் வாழ்நாளில் நிறைய வெற்றிகளையும் மற்றும் அதற்கு நிகரான தோல்விகளையும் எதிர்கொண்டு இருக்கிறார். இன்றும், அவருடைய தாக்கம் இன்றி அரசியல்வாதியாகவும், கவிஞர்களாகவும் மற்றும் மேடை பேச்சாளர்களாகவும் இருப்பது மிகவும் அரியது.

எனக்கு மிகவும் பிடித்த கலைஞர் அவர்களின் கவிதை நடை பேச்சு.

வாழ்க பல்லாண்டு

தாஜூதீன்

அரசியல்

விடுதலைப் புலிகள் மீதான தடையை ரத்து செய்த ஐரோப்பிய நீதிமன்றம் – அரசியல் பின்னணி என்ன?

(2017 ஜீலை ஜீனியர் விகடனில் வெளிவந்து, கூடுதல் தகவல்களோடு http://www.visai.in இணையத்தில் வெளிவந்த கட்டுரை)

ஜூலை 2017 இல், ஐரோப்பிய நீதிமன்றம் (European Court of Justice), விடுதலைப்புலிகள் அமைப்பை தொடர்ந்து தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்க உத்தரவிட்டிருக்கிறது. 23 more words

அரசியல்

பத்திரிகையாளர் கருணாநிதி!

தனக்கு முன்பும் பின்பும் யாரும் எட்ட முடியாத சாதனைகளைப் புரிந்துவிட்டு அமைதியாக இன்று ஓய்வெடுத்துக்கொண்டிருப்பவர். இந்திய ஒன்றியத்தில் தனித்துவம் மிக்க மாநிலமாக தமிழ்நாட்டை வடிவமைத்த சிற்பிகளுள் ஒருவர். பாஸ்கர் என்கிற எலக்ட்ரீஷியனின் விருப்பத்தின் பேரில் எம்.ஆர்.ராதாவால் ‘கலைஞர்’ என்று பட்டம் பெற்றவர்.

ஆளுமை