2008 முடிவதற்கு முன்பாகவே பதிந்து வைக்க முடிகிறது :)
எந்த வரிசையிலும் இல்லை; என்றாலும்
'ஹே கண்பத்', நோ ஸ்மோக்கிங் போன்றவை அடிக்கடி கேட்கும் பட்டியலில் இருக்கின்றன.
சக்தே இந்தியா, சீனி கம், குரு ஏற்கனவே நிறைய தடவை கேட்டிருப்பீர்கள்!
வெல்கம் படத்தின் குத்துப் பாடல், சிவாஜியோடு முட்டிய ஜூம் பராபர் ஆகியவை கேட்டிருக்காவிட்டால், பாப் கல்ச்சர் அறிய காது கொடுக்கவும்.
'ஹம் தோ அய்ஸே ஹை பையா' பாடல் பால் மணம் மாறா பாலகனாக இருந்தபோது வந்த 'ஃபிர் பீ தில் ஹை ஹிந்துஸ்தானி' போல் துள்ளலாக இருக்கிறது; 'காசி' சென்றுவந்தவுடன் பார்த்ததாலோ என்னவோ தனிப் பாசத்துடன் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
படங்களை மொத்தமாக குறிப்பிட வேண்டும் (அல்லது) எந்தப் பாடலை சொல்வது என்னும் குழப்பத்தில் தீம் கோர்வைகளைத் தவிர்த்து, ஒரு படம் ஒருமுறைதான் இடம்பெறுமாறு அமைத்த பட்டியல் இது.
தமிழ்ப்படப் பாடல் பட்டியலுக்கு - Tamil Film Songs - Best of 2007 Movie Music « Snap Judgment
சந்தா ரே (நிலாப் பாடல்) - ஏகலவ்யா
பாடியவர்: ஹம்ஸிகா ஐயர்
இசை: ஷாந்தனு மொய்த்ரா
பாடலாசிரியர்: ஸ்வானாந்த் கிர்கிரே
சா ரஹா - 'ராம் கோபால் வர்மா'வின் ஆக்
பாடியவர்: ஷ்வேதா பண்டிட், வினோத் ரதோட்
இசை: அமர் மொஹிலே, டிஜே அமித், கணேஷ் ஹெக்டே, நிதின் ரால்வாக்கர், பிரசன்னா சேகர்
பாடலாசிரியர்: ஜெய்தீப் சாஹ்னி
ஹம்தோ அய்ஸே ஹேன் - லகா சுனரி மே தாக்
இசை: ஷாந்தனு மொய்த்ரா
ஜப் பீ சிகரெட் - நோ ஸ்மோகிங்
பாடியவர்: அத்னான் சாமி
இசை: விஷால் பரத்வாஜ்
பாடலாசிரியர்: குல்சார்
மௌலா மேரே லே லே மேரி ஜான் - சக் தே இந்தியா
பாடியவர்: கிருஷ்ணா, சலிம் மெர்சன்ட்
இசை: சலீம் - சுலைமான்
பாடலாசிரியர்: ஜெய்தீப் சானி
ஆஜா நாச்லே - ஆஜா நாச்லே
பாடியவர்: சுனிதி சௌஹான்
இசை: சலிம் - சுலய்மான்
பாடலாசிரியர்: பியூஷ் மிஷ்ரா
குர்தி மல்மல் தி - நிஷப்த்
பாடியவர்: அனுராதா போட்வால், கைலாஷ் கெர், ஸ்னேகா பந்த், சோனு நிகம், சுதேஷ் போஸ்லே
கண்பத் - ஷூட் அவுட் அட் லோகன்ட்வாலா
பாடியவர்: அன்ச்சல், மிகா
இசை: மிகா
பாடலாசிரியர்: மிகா
சீனி கம் - சீனி கம்
பாடியவர்: ஷ்ரேயா கோஸல்
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: சமீர்
ஊன்ச்சா லம்பா - வெல்கம்
பாடியவர்: ஆனந்த் ராஜ் ஆனந்த் & குழு
இசை: ஆனந்த் ராஜ் ஆனந்த்
பாடலாசிரியர்: ஆனந்த் ராஜ் ஆனந்த்
மேரி ஜிந்தாரி - கன்னா & அய்யர்
பாடியவர்: மதுஸ்ரீ, சுக்விந்தர் சிங்
இசை: தபுன் சூத்ரதார்
பாடலாசிரியர்: ராஜேஷ் ஜோரி
ஜூம் பராபர் ஜூம் - ஜூம் பராபர் ஜூம்
பாடியவர்: ஷங்கர் மகாதேவன், சுனிதி சவுஹான், ஜூபீன் கர்க்
இசை: சங்கர் - எசான் - லாய்
பாடலாசிரியர்: குல்சார்
திருமணப் பாடல் - காந்தி மை ஃபாதர்
பாடியவர்: பலர்
இசை: பியூஷ் கனோஜியா
நாகேஷ் குக்குனூர் ஏமாற்றவில்லை.  பார்க்கவேண்டிய திரைப்படம்; நம்பக் கூடிய திரைக்கதை.
ஸ்பாயிலர்சுடன் சில சிதறல்:
ஜீனத் ஆக நடித்த குல் பனாக் (Gul Panag) மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர்.
பல மோசமான படங்களில் ஆயிஷா தகியாவை பார்த்து 'நடிப்பு வராத பொண்ணு' போல என்று நினைப்பை உருவாக்கி வைத்தவர். இந்தப் படத்தில் இவர் இன்னொரு சிம்ரன்!
'Dutch courage' ஆக தண்ணியடித்துவிட்டு வந்து, ஜீனத்திடம் 'ஐ லவ் யூ' சொல்லும் ஷ்ரேயஸ் தல்பாடேவும் (Shreyas Talpade), அதை வெகு இயல்பாக எடுத்துக் கொள்ளும் தோழமையும்; கடைசியாக கல்லூரியில்தான் இந்த மாதிரி கோணங்கித்தனம் செய்து, வழியாமல், எதார்த்தமாக வாழ்க்கை தொடர்ந்தது. அதையே கிராமத்தில் பார்ப்பது 'நடக்காது!' என்று சாதாரணமாக எண்ண வைக்கும். ஆனால், ஜீனத்தின் அழுத்தமான கதாபாத்திர வடிவமைப்பு, அதை சரியாக உணரவைக்கிறது.
வசனங்கள்: எளிமை. ஆனால், உணர்ச்சி & எழுச்சி உண்டு. தினசரி பேசுவது போல் இருந்துகொண்டே பலநாள் வடிகட்டிய சாராம்சங்களைக் கொடுக்கிறது. நாவல் எழுத்தில் கிடைக்கும் அழுத்தம் கொண்டவை.
படத்திற்கு ஆதாரம் (அசல் கதை) மலையாளப் படமாம் (என்ன படம்?)
தமிழ்ப்பதிவர் எல்லாருக்கும் ஏதாவது தீனி இருக்கிறது: சவுதி அரேபிய இஸ்லாமிய ஷரியத்தை எதிர்ப்பவர்; ஆண்கள சார்ந்து இயங்கும் இந்து மதத்தின் விமர்சகர்; முதலாளித்துவத்தின் கூறுகளை தாக்கும் கம்யூனிஸ்ட்; 'ராத்திரி பத்து மணிக்கு' என்று காந்திஜியை மேற்கோள் காட்டும் பெண்ணியவாதி...
சினிமாத்தனம் இல்லாத வெற்றிப்படமா: கடைசியில் ரயில்வே ஸ்டேசன், தில்வானியா துலானியா லே ஜாயேங்கே
காதல் உண்டு; காமெடி உண்டு; திருமண பந்தமும், அந்த உறவின் பாசமும் உண்டு; நட்பு உண்டு; சென்டியும் இருக்கிறது... இருந்தும் மசாலாப் படம் பார்த்தபிறகு மனசு முழுக்க நிறைந்திருக்கும் ஏமாற்றம் மட்டும் இல்லை.
புகைப்படம்: யாஹு
உமேஷ் கோபிநாத் Cleartrip தளம் பற்றி அடிக்கடி எழுதவே அங்கே சென்று பார்க்கும் ஆவல் எழுந்தது. இங்கே Expedia அல்லது SideStep தளங்களைப் போலவே இத்தளம் இந்தியாவின் வெவ்வேறு விமான நிறுவனங்களின் பயண விலையை தேடி தொகுத்துக் கொடுக்கிறது. அவர்கள் சேவையும் சிறப்பாகவே இருப்பதாக உமேஷின் வாசகர்கள் தரும் பின்னூட்டங்களின் வாயிலாக அறிய முடிகிறது.
கூடுதலாக Small World என்ற பகுதியையும் இத்தளம் நிர்வகிக்கிறது.  நீங்கள் பயணிக்க இருக்கும் இந்தியாவின் பல்வேறு நகரங்கள் பற்றிய சிறு விபரங்களை இதன் மூலம் அறிந்து கொள்ள இயலும்.  அதில் சென்னை பற்றிய குறிப்பைப் பார்த்து சற்றே துணுக்குற்றேன்.
People in Chennai are generally averse to speaking in Hindi which makes it difficult to converse with the locals, especially if they are not conversant in English either.
சென்னைக்கு பயணிப்பவர்களுக்கான உபயோகமான தகவல்தானே என்று தோன்றுகிறதா ? பிரச்சனை தகவல் குறித்து அல்ல.அது தொகுக்கப்பட்டிருக்கும் இடம். சென்னை நகரத்தின் எரிச்சலூட்டும் அல்லது அசவுகர்யம் தரும் விஷயங்களில் ஒன்றாக இதைக் குறிப்பிட்டிருக்கிறது இந்த மும்பை நிறுவனம். ஒரு பகுதி மக்கள் அவர்கள் தாய்மொழியில் பேசிக்கொள்வதை எப்படி அசௌகர்யம் என்று கருதலாம் ?
இது போன்ற தகவல்களை கருத்தாக்கமாகத் தராமல்  புள்ளி விபரங்களாகத் தருவது வியாபார நிறுவனங்களுக்கு நல்லது.
சிறுக சிறுக நம் கை பிடித்து அல்ல நேரடியாய் கனவுலகில் குதித்து நீராட சொல்கிறது படம். குளிரும் அனலும் நம் மீது மோதுகிறது அங்கிங்கேனாதாபடி அத்தனை திசைகளிருந்தும் - படம் நிகழும் இடங்கள் குளிராகவும் பிரதான பாத்திரங்களின் காதல் தகிப்பு அனலாகவும்! தொச்தொவ்ச்கீயின் 'வைட் நைட்ஸ்' எனும் புனைவின் அடிப்படையாய்  வந்திருக்கும் இந்த திரைப்படம், ஒரு சிறந்த இலக்கியத்தை திரை வடிவத்திற்கு உருமாற்றம் செய்தவகையில் வெற்றி கண்டு இருக்கிறார் இயக்குனர் 'சஞ்சய் லீலா பன்சாலி'. 'ஜனநாதனின்' 'இயற்கை' போல அல்லாமல் சஞ்சயி'ன்  'சாவரியா' நம்மை முக்கிய கதாபாத்திரங்களின் உணர்வு ஊசலாட்டங்களையும், கள்ளமில்லா காதல் வலிகளையும் அழகாக நம் கண் முன்னே கொண்டு வந்து விடுகிறார். (இதில் 'ஜனநாதன்' 'பன்சாலி' மீது வழக்கு போட போவதாக சொல்லி இருபது பெரும் கூத்து! ).
பனி கவிழும் பெடேர்ச்பெர்கின் தெருக்கள், சீமான் சீமாட்டிகளின் இரவு கேளிக்கை விடுதிகள், பார்வையில் காந்தம் கொண்டு கவர்ந்திழுக்கும் பாலியல் தொழிலாளர்கள், நகரத்தின் குறுக்கே ஓடும் ஓடைகள் , அதன் மீது நகரும் ஓடங்கள் என நம்மை அந்த கனவு நகரத்தில் அமிழ்த்தி விடுகிறார் இயக்குனர்.
நகரம் நோக்கி நகர்ந்த ஒரு துள்ளும் வயது கொண்ட பாடகனாய் 'ராஜ்' வந்து சேருகிறான் இந்த கனவுலகத்திற்கு. அங்கு ஓர் பணியின் குளிரும் இளமை தகிப்பும் ஒருங்கே சேர்ந்த  ஒரு தேவதையை கண்டு காதல் வயபடுகிறான். நிஜமாகவே அவள் முகத்திரை விலகிய பின் 'மாஷா அல்லா' எனும் நாமும் காதல் கொள்வோம் 'சகீனா'விடம். ஆனால் அந்த கள்ளமற்ற முகத்தின் பின்னே சிரிப்பின் பின்னே ஒரு பிராத்தனை, ஒரு காத்திருப்பு, ஒரு சோகம் புதைந்து கிடக்கிறது என அறியும் பொழுது ராஜின் பரிதவிப்பு நம்முள்ளும் ஒட்டி கொள்ளும். அவளுடைய பழைய காதலன் ஒரு கனவாய் இருக்க கூடாதா, அவள் காத்திருக்கும் இந்த பாலம் தகர்ந்த விட கூடாதா என மனம் விம்மும். காலத்தின் கரங்கள் கொடுரமானது என அறிந்திருந்தும் அதன் திசையை மாற்றி அமைக்க யத்தனிப்பது மனிதனின் தீரா வேட்க்கை. அப்படியே முயன்று முயன்று முட்டி மோதி அவன் காதல் கை கூடுகிறது. அந்த தேவதை இவன் கரம் பிடித்து, இவன் தோள் சாய்ந்து இவனை ஏற்று கொள்ளும் பொழுது பனி மூட்டம் விலகி பாலத்தின் மீது ஒரு உருவம்.... என்னை புரிந்து கொள்வாய் என ராஜின் கனவை தகர்த்து பாலம் நோக்கி செல்கிறாள். வெற்று வெளியின் ஒலிக்கும் ஊமை கதறலாய் நாம். காதல் எல்லா சாத்தியங்களையும் கொண்டிருக்கும் ஆனால் அது தரும் வலியில் தான் அதனை முழுமையாய் நாம் உணர்கிறோம்.பெண்களின் அக உலகின் ஆழங்கள் எட்டபடாதது மட்டும் அல்ல அதனை அளவிடவும் முடியாது. நீ புரிந்து கொள் என ஒற்றை வாக்கியத்தில்  நம்மை கவிழ்த்து விட்டு அவர்கள் சென்று விடுகிறார்கள். 'வைட் நைட்ஸ்' இன் 'நஸ்தேங்கா' மீது எவ்வளவு காதல் நமக்கு இருந்ததோ அதே அளவு 'சாவரியாவின்' 'சகீனா' விடமும் வைக்கிறோம். ஆனால் இந்த பெண்கள் எல்லாமே சமயம் கிடைத்தால் நம்மை கிறுக்கனாக்கி விடுபவர்கள் தான். என்றென்றும் ஆண்களின் காதல் உன்னதமானது, உயர்வானது, சமய சந்தர்பங்கள் பார்த்து மாற்றம் கொள்ளாதது.  இது 1800'களோ   2100'களோ பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள்.
படத்தில் வரும் அத்தனை நடிகர்களும்  அற்புதமாய் வாழ்ந்து இருக்கிறார்கள்  என்று தான் சொல்ல வேண்டும். முக்கியமாய்  ராஜின்  விடுதி  சொந்தகாரராய்  வரும் 'சொகர செகள்' மற்றும் கதை சொல்லி/தாசியாய்  வரும் 'ராணி முகர்ஜி' இருவரும் நடிப்பின் உச்சத்தை தொட்டு இருக்கிறார்கள்  எனத்தான் சொல்ல வேண்டும். ராணி முகர்ஜி மிகவும் ரசிக்கும் படியே செய்துஇருக்கிறார் அவர் பாத்திரத்தை. ( கரீனா'வின் 'சமேலி' மற்றும்  'சினேகா'வின்  'புதுபேட்டை' க்கு  பின் நான் ரசித்த ஒரு பாலியல் தொழிலாளி பாத்திரம் இதுதான் ).
அரங்க அமைப்பு, பட தொகுப்பு என அத்தனை விஷயங்களையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறது இசை. படம் முழுக்க தன் இசை கோலங்களால் நம்மை ஈர்த்து கொண்டே இருக்கிறார் 'மோன்ட்டி'. இசை கேட்க்கும் பொழுது முதலில் இது 'இஸ்மாயில் தர்பார்' தான் அமைத்திருக்க வேண்டும் என நினைத்தேன். பின் வலை'யில் உலவி தேடிய பொழுது 'மோன்ட்டி' 'இஸ்மாயில்' இன் உதவியாளரை இருந்தவர் என அறிந்து கொண்டேன். நல்ல சீடர். 'மாஷா அல்லா' பாடல் அற்புதமான மெல்லிசை. அத்தனை பாடல்களும் நம்மை மயிலிறகால் வருடும் மென்மையை கொண்டிருக்கின்றன. பின்னணி இசையோ காட்சிகேற்ப்ப நம்மை திரையில் லயிக்க வைக்கிறது.
திரையில் நிகழும் அற்புதமான அனுபவங்களில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் 'சாவரியா' ஒரு தவிர்க்க கூடாத படம். என்னதான் இது ஒரு நாடக பாணியை கொண்டிருந்தாலும்!
வரிசையில் எனக்கு முன்னால் ஒரு சல்வார் கமீஸ் யுவதி. ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பதற்காக DMV (Department of Motor Vehicles) சென்றிருந்தேன். இந்த மாதிரி அலுவலகங்களில் காரியம் ஆக வேண்டுமானால் முதலில் Q-Matic இயந்திரத்திடமிருந்து டோக்கன் வாங்க வேண்டும். பின்பு நாற்காலியில் கொஞ்ச நேரம் ஈ ஓட்டிக் கொண்டிருக்க வேண்டும். ஓர் எலக்ட்ரானிக் குரல் உங்கள் டோக்கன் எண்ணை அழைத்து, எந்த கவுன்ட்டருக்கு நீங்கள் போக வேண்டும் என்பதைக் குறிப்பிடும்.
சரி, சல்வார் கமீஸ் யுவதிக்கு வருவோம். அவர் டோக்கன் வாங்கிக் கொண்டு இருக்கையில் அமராமல், நேராக ஒரு கவுன்ட்டர் அருகே போய் உள்ளிருந்த நபரிடம் என்னவோ சொல்லி விட்டு வந்தார். (தனது டோக்கன் எண்ணைச் சொன்னார் என்பது பின்பு தெரிந்தது.)
பதினைந்து நிமிஷங்களுக்குப் பின் முன்னர் கிசுகிசுத்து விட்டு வந்த அதே கவுன்ட்டருக்கு அவர் அழைக்கப்பட்டார். அதற்குப் பக்கத்தில் இருந்த கவுன்ட்டருக்கு சற்று நேரத்தில் நான் அழைக்கப்பட்டேன்.
அங்கே நின்றிருந்த பத்து நிமிஷங்களும் பக்கத்து கவுன்ட்டரில் அட்சர சுத்தமான ஹிந்தியிலேதான் சம்பாஷணை நடந்தது. நானிருப்பது வாஷிங்டனா, புது டெல்லியா என்று ஒரு விநாடி எனக்குக் குழப்பம். அமெரிக்காவில் எந்த அரசாங்க அலுவலகத்திலாவது தமிழில் மட்டுமே பேசி வேலையை முடித்துக் கொண்டு வர முடியுமா என்று தேவையில்லாமல் யோசித்தேன்.
ஹிந்தி படித்துத் தொலையுங்கள் என்றால் யாராவது கேட்கிறீர்களா !