Google Indic - கூகிள் இந்தியக், இது ஒரு இந்திய மொழிகளை எழுத பயன்படும் கருவி (tool), இதன் மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளை எளிதாக டைப் செய்யமுடியும். இது முழுக்க முழுக்க யுனிகோட் முறையை உபயோகிப்பதால் டைப் செயப்படும் வார்த்தைகளை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதுமட்டும் இல்லாது ஆங்கில கீபோர்ட் கொண்டே தமிழை சுலபமாகவும் மற்றும் எளிதாகவும் டைப் செய்ய முடிகிறது.
உதாரணமாக, தமிழ் என்று டைப் செய்வதற்கு thamz என்று டைப் செய்தல் போதும். Ctrl + G உபயோகிப்பதன் மூலம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிளை கலந்து எழுத முடியும். இதன் எடிட் ஆப்சன் மூலம் தவறாக டைப் செய்த எழுத்துக்களை சரி செய்துகொள்ளலாம், அதற்கு தவறாக எழுதிய வார்த்தையின்மேல் வைத்து இரு கிளிக்குகள் செய்தால் போதும். தமிழ்பிளாக்.இன் தமிழில் எழுத கூகிள் இந்தியக்கைத்தான் பயன்படுத்துகிறது.
கூகிள் இந்தியக்கில் எழுத: http://www.google.com/transliterate/indic/Tamil
நன்றி:http://www.tamilblog.in/tamil/how-to-write-in-tamil/
பிளாக் என்பது ஒரு வெப்சைட் அல்லது இணையதளமாகும், இதில் உங்களுடைய கருத்துக்களை, எண்ணங்களை மற்றும் விரும்பிய எதையும் வெளிப்படுத்திக்கொள்ள முடியும் .
இதன் மூலம் உங்களுடய எழுதும் திறனையும், கற்பனை வளத்தையும் பெருக்கிக்கொள்ள முடியும். மற்றும் உங்கள் எழுத்துக்களை மற்றவர்கள் படிக்கவும் இது ஒரு நல்ல இடமாக அமையும் . நீங்கள் சிறந்த எழுத்தாளராக இது ஒரு நல்ல வழி என்றுதான் நான் சொல்லுவேன். நிறையபேர் தன்னால் சிறப்பாக எழுத முடிந்து தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுதிக்ககொள்லாமல்  உள்ளனர் அவர்களுக்கெல்லாம் இது ஒரு வரப்பிரசாதம்.
சொந்தமாக நீங்கள் ஒரு பிளாக் அல்லது வலைப்பூ தொடங்க நீங்கள் எந்தவிதமான செலவும் செய்யத்தேவையில்லை. இது www.blogger.com, www.wordpress.com போன்ற தளங்களினால் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது.
இதற்க்கு வெப்டிசைன், HTML போன்றவைகள் தெரியவேண்டும் என்று அவசியம் இல்லை.அப்புறம் என்ன நீங்களும் ஒரு வலைப்பூ தொடங்கலாமே
நன்றி:தமிழ் பிளாக் இன்   http://www.tamilblog.in/blogs/what-is-a-blog/
http://rajasugumaran.blogspot.com/2008/08/blog-post.html
தமிழில் பிளாகர்ஸ் தளம் வந்துவிட்டது. இன்று காலை நான் கூகுல் தளம் பார்த்தபோது Google.co.in offered in: Hindi Bengali Telugu Marathi Tamil என தெரிந்தது, ஏற்கனவே இந்தி, பெங்காலி, தெலுங்கு, மராத்தி, தமிழ் ஆகிய 5 மொழிகளை மட்டுமே கூகுல் இந்தியாவில் இந்திய மொழிகள் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் இன்று மாலை நான் பார்த்தபோது Google.co.in offered in: Hindi Bengali Telugu Marathi Tamil Gujarati Kannada Malayalam Punjabi என இருந்தது, கூடுதலாக குஜராத்தி, கன்னடம், மலையாளம் பஞ்சாபி ஆகிய நான்கு மொழிகளில் புதிதாக சேவை வழங்கப்பட்டிருந்தது.
பிளாகர்ஸ் ட்ராப்டில் தமிழுக்கான வசதி புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது, தேவையானோர்கள் இந்த தளத்திற்கு செல்ல http://draft.blogger.com/ முகவரிக்கு சென்று உள்ளே செல்ல வேண்டும். . பின்னர் மொழி பகுதியில் தமிழ்மொழியை தேர்வு செய்தால் உங்கள் பிளாக் தளத்தின் கட்டுப்பாட்டு பகுதி முற்றிலும் தமிழாக மாறிவிடும்.
தமிழ் மொழி தேர்வு செய்தால் அதன்பின் வரும் பின்னூட்டங்களின் மின்னஞ்சல்கள் வரும்போது மின்னஞ்சலின் தலைப்பில் எழுத்துறுக்கள் சரியாக வரவில்லை, வரைவு பிளாகர் என்பது சோதனை அடிப்படையில் இப்போது வெளியிடப்பட்டுள்ளதால் முழுமையான சரிசெய்யப்பட்ட அளவில் இது பிளாகர் தளத்தில் வெளியிடப்படும் என்று கருதலாம்.
முயற்சியுங்கள், தமிழை பயன்படுத்துங்கள் தமிழராகிய நீங்கள் தமிழை பயன்படுத்தாமல் ஆங்கிலம் பயன்படுத்தினால் யார் தமிழை பயன்படுத்துவது?
அதனால் இப்போதே தமிழுக்கு மாறுங்கள்,
நன்றி: புதுச்சேரி இரா.சுகுமாரன்
நன்றி: முதவை ஹிதாயத்
தின அடிப்படையில் அல்லது ஒரு நாளிலே பல பதிவுகள் அடிப்படையில் அல்லது கிழமைக்கு ஒன்று என்று பலரும் வலைப் பூக்களில் பதிவுகள் இடுவதைக் காணலாம். அப்படி பதிவுகளை இடும்போது அநேகமானவர்கள் அந்தந்த வலைப் பூச் சேவை வழங்குநர்களின் உள்ளமைந்த சேவையை பயன்படுத்துவதைக் காணலாம். ஆனால் அதில் உள்ள அசெளகரியங்களை மனதில் கொண்டு பதிவுகளைப் பதிவதற்கும் பல்வேறு வலைப் பூக்களை மேலாண்மை செய்வதற்கும் உதவும் வகையில் பல மென்பொருள்கள் உலவுகின்றன. அந்த வகையில் நான் அறிமுகப்படுத்த நினைப்பது,
Windows Live Writer
தரவிறக்கமும் கணினியில் நிறுவுதலும்
மேலும் விபரங்களுக்கு
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் “பிளாகர் தவிர வேறறியேன் பராபரமே” என்று இருந்துவிட்டு தனித்தளத்தில் WordPress பயன்படுத்தத் தொடங்கியதும் தான் WordPressன் அருமை புரிபடத் தொடங்கியது. பிளாகருக்கும் நிறைகள் உண்டு என்பதால், பிளாகரின் குறைகளை அதிகம் சுட்டிக் காட்டாமல் WordPressன் நிறைகளை மட்டும் சுட்டிக் காட்டலாம் என்று நினைக்கிறேன்.
WordPressன் நிறைகள்:
1. WordPress ஒரு கட்டற்ற மென்பொருள். மற்ற அனைத்து நன்மைகளுக்கும் இந்த சிறப்பே அடிப்படை. WordPress.comல் இலவசமாக வலைப்பதிவுகளை உருவாக்கிக் கொள்ள இயல்வது போக, இம்மென்பொருளை பதிவிறக்கி நிறுவி நம் சொந்தத் தளத்தில் இருந்தும் வலைப்பதியலாம். பயனர்களால் உருவாக்கப்படும் மென்பொருள் என்பதால், WordPressன் புதிய பதிப்புகள் அடிக்கடி வெளியாகிக் கொண்டே இருக்கும். இதனால் அண்மைய வலைப்பதிவு நுட்பங்கள் நமக்கு உடனடியாகக் கிடைக்கும். WordPress உருவாக்கும் தன்னார்வலர் குழுவை அணுகி நமக்குத் தேவையான வசதிகளை பெற்றுக் கொள்ள இயலும். பிளாகரின் புதிய பதிப்பு அனைவருக்கும் வரும் வரை காத்திருப்பது போலவோ விரும்பாவிட்டாலும் புதிய பதிப்புக்கு மாறுவது போலவோ WordPressல் கிடையாது.
2. எண்ணற்ற அழகழகான WordPress வார்ப்புருக்கள், பயனுள்ள நீட்சிகள் கிடைக்கின்றன. இந்த நீட்சிகள் மூலம் பல சிறப்பான வசதிகளைப் பெற்றுக் கொள்ளலாம். இவற்றைப் பட்டியல் போட்டால் நீளும்.
மேலும்.......
பின்னூட்டங்களில் தென்படும் பெயர்களுக்குரியவர்கள் பெரும்பாலும் இன்னொரு சக பதிவராகவே இருக்கின்றார். பதிவரல்லாத தனியே வலைப்பதிவு வாசகர்களிடமிருந்து வெளிவரும் மறுமொழிகள் ஒப்பீட்டு அளவில் குறைவானதாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். (அல்லது வலைப்பதிவுலகில் எழுதுபவர்களே படிப்பவர்களாயும் படிப்பவர்களே எழுதுபவர்களாயும் இருக்கிறார்கள் என்பது உண்மையகவும் இருக்கலாம்)
வலைப்பதிவொன்றைப் படிக்கும் பதிவரல்லாத வாசகர் ஒருவர் இடுகை குறித்த தன் கருத்தை இலகுவாகச் சொல்லி விட்டுப் போக பின்னூட்டப் பெட்டிகளிலேயே இணைக்கப்பட்டிருக்கும் தமிழில் உள்ளிடும் முறைகள் உதவக் கூடும். அவ்வாறான ஒரு முறையை எனது பின்னூட்டப் பெட்டியிலும் இணைத்துள்ளேன்.
பாமினி தமிங்கிலம் தமிழ் 99 முறைகளில் பயனர் தனது தெரிவினை அழுத்திய பின்னர் நேரடியாக யுனிகோடில் எழுதும் வாய்ப்பினை இது தருகிறது. ஏற்கனவே எனது பழைய புளொக்கரில் பயனில் இருந்த பாமினி தமிங்கில உள்ளிடும் முறைகளோடு தமிழ் 99 உள்ளிடும் முறையையும் சேர்த்திருக்கின்றேன்.
மேலும் தொடருங்கள்
இணைய உலகில் புதிதாக அடி எடுத்து வைத்திருக்கிறீர்களா?  பல்வேறு தமிழ் வலைப்பதிவுகளைப் பார்த்து படித்து ரசித்து விட்டு, ஆகா நாமும் இப்படி ஒரு வலைப் பதிவு தொடங்கலாமே" நமது எழுத்துக்களையம் கருத்துக்களையும் எழுதலாமே என ஆசைப்படுகிறீர்களா?
மிகவும் சுலபமாக தமிழ் வலைப்பதிவு தொடங்க எளிய வழிமுறைகள்
புதிய தமிழ் வலைப்பதிவு தொடங்க இங்கே கிளிக்கவும். கவலையே படாதீர்கள் முற்றிலும் இலவசம் தான்.
சொந்தமாக இணையதளம் தொடங்கும் ஆசை இருந்தாலும் அதற்கான வடிவமைப்பு மற்றும் கட்டுரைகளை வரிசைப்படுத்துதல் போன்றவற்றின் ஏற்படும் சிரமங்கள் உங்கள் ஆசையில் மண்ணை அள்ளிப் போடுமானால், பிளாக்கர் தரும் வசதியை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இதன் மூலம் திரட்டி வசதியை எளிதாக பெற்றுக்கொள்வீர்கள்.
ஏற்கனவே பிளாக்கர் வலைப்பதிவுகளை பயன்படுத்தும் நண்பர்கள், (பழைய பதிவுகளுக்கு எந்த நஷ்டமும் வராமல்) அதனை தமது சொந்த தளத்தில் நிறுவமும் இவ்cவழியை பின்பற்றலாம்.
இச்செய்தி html பற்றி அறிந்தவர்களுக்கு புதிய விஷயம் இல்லையென்றாலும், மற்றவர்களுக்கு பயன்படட்டும் என்ற நோக்கில் பதிகிறேன்.
தொடர்ந்து.....
பல புதிய தமிழ் வலைப்பதிவுகளைக் காண்கையில் மனதில் தோன்றிய எண்ணங்களை இங்கு பதிந்து வைக்கிறேன். இக்கருத்துக்களில் நான் செய்து திருத்திக் கொண்ட பிழைகளும் அடங்கும். இன்னும் நிறைய புதியவர்களைப் பார்க்கையில் கருத்துகள் மாறலாம். கூடலாம்.
தங்கள் வாசிப்புக்காக மட்டுமே எழுதுவோர், நிகழ் வாழ்க்கை நட்பு வட்டத்துக்கு மட்டும் எழுதுவோர் இவ்வேண்டுகோள்களைக் கண்டு கொள்ள வேண்டாம். ஆனால், முன் பின் அறிமுகமில்லா பலரும் தன் எழுத்துக்களைத் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று எழுதுவோர் கவனிக்கலாம்.
தொடர்ந்து.....
மின்னஞ்சல் (Email), இணையதளம் (Website), மின்மன்றம் (Forum), மடலாற்குழு (yahoogroups, msngroups) போன்ற தொழிற்நுட்பங்களை தெரிந்துக்கொண்டு இணையத்தில் சஞ்சரித்தவர்களுக்கு இந்நான்கு வசதிகளையும் ஒருங்கே அமைந்து weblog (blog) என்ற பெயரில் பயன்தருவது மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சி.
கேள்விகள்:
மின்னஞ்சல் (Email) மூலம் நல்ல விஷயங்களை நண்பர்களிடம் பகிர்ந்துக்கொள்பவராக நீங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் நண்பர் மின்னஞ்சலை வரவேற்கிறாரா? அவரை உங்கள் செய்தியினை பார்க்க தேடிவரவைக்க வேண்டாமா?
வலைப்பக்கம் (Website செய்ய ஆசை இருந்து வெப் டிஸைன், வருடாந்திர ஹோஸ்டிங் செலவு, பராமரிப்பு என்று தண்டம் அழ வேண்டும் என்று நினைத்து முயற்சியை கைவிட்டவரா நீங்கள்?
மின்மன்றம் (Forum) சுதந்திரமான உங்கள் கருத்துக்களை மின்மன்றங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்று நினைக்கிறீர்களா?
மடலாற்குழு (Email groups) - கருத்துக்கான செய்திகளும் அது தொடர்பான நண்பர்களின் பதில்களும் ஒரே சொடுக்கில் பார்க்க முடிவதில்லை என்ற வருத்தமா உங்களுக்கு?
பதில்:
இத்தனை பிரச்சினைகளையும் தீர்க்க வந்துவிட்டது, blogging.
இதனை தமிழில் வலைப்பூ, வலைப்பதிவு, குடில் என்று அழைத்தாலும், அதிகமானோர் வலைப்பதிவு என்றே வழங்கிவருகிறார்கள்.
கதை, கவிதைகள், கட்டுரைகள், ஆலோசனைகள், விமர்சனங்கள், அறிவியல், கணினி தொழிற்நுட்பம் போன்றவைகளை எழுத்தில் வார்த்திட அறிவுத்திறன் உங்களிடம் புதைந்து இருக்கலாம். இதையெல்லாம் நாளிதழுக்கோ வாரஇதழுக்கோ அனுப்பினால் பிரசுரிக்கப்படலாம். ஆனால் எப்பொழுது?
நீங்கள் எழுதிய அத்தனை விஷயங்களையும் அதுவும் அடுத்த வினாடியில் உலகத்தின் பல்வேறு பாகங்களுக்கு எடுத்துச்செல்ல முடியும் - செலவின்றி.
msn முதலாக எண்ணற்ற இணைய பக்கங்கள் இலவசமாகவே வலைப்பதிவு வசதியை தந்தாலும் தற்போதய நிலவரப்படி www.blogger.com தரும் வசதியே சிறந்ததாக உள்ளது.
நீங்கள் செய்ய வேண்டியது இரண்டே விஷங்கள்தான்
1) blogger.com இணையதளம் சென்று உங்களுக்கென்று ஒரு வலைப்பதிவை உருவாக்கி கொள்ள வேண்டியது.
தேவையானவை:
a)பயனர் பெயர் (user name)
b)பாஸ்வேர்ட் (Password)
c)முகவரி http://yourblogname.blogspot.com
d)வலைப்பதிவின் பெயர் - தமிழில் (blog name)
e)பெயர் விளக்கம் (Description)
f)மின்னஞ்சல் முகவரியை இணைப்பது
உபரியாக:
g) ஸ்கிரிப்ட் பகுதியில் ஆல்டர்நேடிவ் எழுத்துருக்களின் பெயர்களை font face-ல் இணைப்பது - இதனால் விண்டோஸ் 98-லும் குறிப்பிட்ட தேனீ போன்ற மற்ற யுனிகோடு எழுத்துருக்கள் அவர்களின் கணினியில் இருக்குமேயானால், இயங்கு எழுத்துரு இல்லாமலேயே பக்கத்தை படிக்க இயலும்.
அதற்கு டெம்ப்லேட் பகுதியில் உள்ள ஸ்கிரிப்ட்டில்
font-family:TheneeUniTx, Latha, TSCu_InaiMathi, TSCu_Amuthu, TSC_Avarangal;
என்பதை இணைக்க வேண்டும்.
h) விண்டோஸ் 98 உட்பட ஏனைய இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் இயங்கு தளத்தில் தேனீ  போன்ற மற்ற எழுத்துருக்கள் இல்லாமலேயே தமது வலைப்பதிவை பார்வையிட வைக்கவேண்டுமானால், இயங்கு எழுத்துருக்கான ஸ்கிரிப்ட்ஐ இணைக்க வேண்டும்.
Head பகுதியில்
என்ற ஸ்கிரிப்ட்டை இணைக்க வேண்டும்.
yoursitename என்பது, நீங்கள் எந்த தளத்தில் தேனீ இயங்கு எழுத்துருவை பதிவேற்றம் செய்திருக்கிறீர்களோ அத்தளத்தின் Url முகவரி.
உதாரணம்:
http://geocities.com/nihalvu/THENEE.eot
2) உங்களின் ஆக்கங்களை உலகத்தில் பல்வேறு பகுதியில் வசிக்கும் வாசகர்கள் படித்து கருத்துச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் செய்ய வேண்டியவை:
a)பதிவுகள் செய்த பின்னர் கீழ்கண்ட தொடுப்பினை தட்டி உங்கள் வலைப்பதிவை தமிழ்மணம்.காம்-வுடன் இணைத்துவிடுங்கள்.
http://www.thamizmanam.com/tamilblogs/bloggers.php?action=submitted
blogger.com வலைப்பதிவு வழங்கும் திரட்டியின் முகவரி
http://yourblogname.blogspot.com/atom.xml
(இங்கு yourblogname என்பது blogspot என்ற பெயருக்கு முன் உள்ள உங்கள் வலைப்பதிவின் முகவரி)
b)தமிழ்மணம் இணையதளத்தில் உங்கள் வலைப்பதிவின் புதிய பதிவு விபரங்கள் திரட்டப்படுகிறது என்ற விபரமும் தொடுப்பும் தரக்கூடிய html ஸ்கிரிப்ட்டை டெம்ப்லேட் பகுதியில் இணைத்திடவேண்டும். உங்கள் வலைப்பதிவை தமிழ்மணத்துடன் இணைத்தபின்னர் இந்த செய்தியும் ஸ்கிரிப்ட்டும் உங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்படும்.
பயன்கள் மற்றும் வசதிகள்:
1) மின்னஞ்சல் அனுப்பும் அளவிற்கு இணைய அறிவு இருந்தால் போதுமானது
2) செலவு இல்லை. (இருக்கவே இருக்கிறது blogger.com போன்ற இலவச வலைப்பதிவு அளிப்பான்கள்)
3) வெப்மாஸ்டர் தேவையில்லை. (தேவையே இல்லை)
4) உங்கள் இஷ்டப்படி எப்பொழுது வேண்டுமானாலும் டிஸைன் மாற்றிக்கொள்ளலாம். இதனால் ஏற்கனவே பதிவு செய்த விஷயங்கள் அழிந்துவிடும் என்று கவலைப்பட வேண்டாம். புதிய பொழிவில் பழைய செய்திகளை பார்வையிட முடியும்.
5) ஒரே நாளில் பல பதிவுகளை செய்யலாம். ஒரு வாரம் செய்யாமலும் இருக்கலாம். இது உங்கள் சாய்ஸ்.
6) தொடர்வேலையின் காரணமாக எந்த செய்தியையும் பதிவு செய்ய முடியவில்லையே என்ற வருத்தமும் புதிய பதிவை உங்கள் நண்பர் பார்க்க வருவாரா என்ற சந்தேகமும் தேவையே இல்லை. (திரட்டி வசதியின் மூலம் உங்கள் நண்பர் தானாகவே புதிய பதிவை அறிந்துக்கொள்வார்)
7) எதை எழுதுவது? என்றாவது எழுதிவைக்கலாம். நீங்கள் விடுமுறையில் சென்ற செய்தியையும் தெரிவித்துவிடலாம்.
8) மறுமொழி கொடுக்க உலகம் முழுவதும் நண்பர்கள் இருக்கிறார்கள். (எளிமையான மறுமொழி வசதி)
9) தன்னைப்பற்றி எதையாவது திட்டி எழுதி வைத்துவிட்டால் மானம் மறியாதை கப்பலேறும் என நினைப்பவர்கள், மறுமொழி இட்ட செய்தியை மின்னஞ்சலின் மூலம் தமக்கு தெரிவிக்க ஏற்பாடு செய்திட முடியும். அல்லது மறுமொழி வசதியை நீக்கி விடலாம்.
10) எத்தனை பேர் படித்தார்கள் என்று (ஸ்டேட் கவுண்ட்டர் போன்ற இலவச சைட் கவுண்டர்களை உங்கள் வலைப்பதிவுடன் இணைத்து நாடு வாரியாக வருகையாளர்களை தெரிந்துக்கொள்ள முடியும்)
11) எழுத்தாளராக, விமர்சகராக உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள முடியும்.
12) எழுதிய தேதி, நேரம் கூட பதிவு செய்துக்கொள்ள முடியும்.
13) தேதிவாரியாக, மாதாவாரியாக எழுதியதை பிரித்து வைக்க முடியும். (Archive வசதி)
14) எல்லாவற்றிற்கும் மேலாக யுனிகோட் வசதியின் மூலம் எந்த எழுத்துரு பிரச்சினையும் இன்றி தமிழில் பதிவு செய்யமுடியும்.
15) படங்களை சேர்க்க முடியும். (இலவச இமேஜ் ஹோஸ்டிங் செய்ய Tinypic.com இருக்கிறது)
16) ஆல்டர்நேடிவ் எழுத்துருக்கள் மூலம் வலைப்பதிவை படிக்க வசதி செய்ய முடியும்.
17) மின்னஞ்சலின் மூலமும் செய்திகளை பதிவு செய்யமுடியும்.
18) ஒரே பயனர் பெயரில் பல உப வலைப்பதிவுகளை உருவாக்க முடியும்.
19) பெயர், ஊர், தேசம் இவற்றை வெளிப்படுத்திக்கொள்ளாமல் புனைபெயரிலேயே கலக்கிட முடியும். (சாயம் வெளுத்ததும் தர்மஅடி விழலாம்)
20) வலைப்பூ முகவரியை மாற்றிக்கொள்ள இயலும். (பழைய செய்திகளுக்கு எந்த சேதமும் இல்லை)
21) தமிழ் தேதி, யுனிகோட் எழுத்துரு மாற்றி போன்றவைகளை இணைக்க முடியும்.
வலைப்பதிவாளர்கள் யாரேனும் உண்டா?
http://thamizmanam.com -ல் அகர வரிசையில் வலைப்பதிவாளர்களின் பெயர்கள் பட்டியளிடப்படுகின்றது (தமிழ்மணத்தில் பதிவு செய்தவர்கள் மட்டும்).
வலைப்பதிவு உலகத்தில் என்ன நடக்கிறது?
http://www.thamizmanam.com/tamilblogs/readers.php
வலைப்பதிவு உதவிகளுக்கு
http://groups.yahoo.com/group/tamilblogs
யுனிகோட் தட்டச்சு மென்பொருட்கள்
http://developer.thamizha.com/ekalappai
http://murasu.com
http://kstarsoft.com/
வெவ்வேறு தமிழ் எழுத்துருக்களை யுனிகோடாக மாற்ற
http://suratha.com/reader.htm
இலவச இமேஜ் ஹோஸ்டிங்
http://tinypic.com/
வருகையாளர்களை கணக்கிட
http://statcounter.com
நன்றி  http://www.islamkalvi.com/web/tamil_blogging.htm
மலை  போல் குவிந்திருக்கும்
உன் வார்த்தை எல்லாம்
பள்ளத்தில்  வீழ்ந்து  விடும்
என் மவுனத்தால்
சேர்த்திருக்கும்
உன் சார்பு பொய்களெல்லாம்
அவிழ்ந்து வழியும்
என் கூர்ந்த பார்வையால்
என்னை வெல்ல
உன்னிடத்தில்
எத்தனையோ
உனை  வெல்ல
என்னிடத்தில்
ஜீவன்  மட்டும்!
நானும் எனது மகள் அன்புமதியும் இருசக்கர வாகனத்தில் போய் கொண்டிருந்தோம். எதிரே பட்டாசு வெடிப்பு காது கிழிக்க, தாரை, தப்பட்டைகள் முழங்க, குத்தாட்டத்துடன் ஒரு சவ ஊர்வலம் நடு ரோட்டில் வந்தது. கொஞ்சம் ஒதுங்கி நிற்க வேண்டி இருந்தது.
நானென்ன புத்தனின் தந்தையா? கல்யாணமாகி குழந்தைப் பிறக்கும் வரை மரணத்தைக் கண்ணில் காட்டாமல் பிள்ளை வளர்ப்பதற்கு. அன்புமதிக்கு அப்போது 4 வயசு. புதிய விசயத்தை அறிந்து கொள்ளும் குழந்தையின் இயல்பான ஆர்வத்தோடு எல்லாவற்றையும் உன்னிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு வயதான மனிதரின் சவம். மாலை அலங்காரத்துடன் பாடையில் பயணித்துக் கொண்டிருந்தது.
கூட்டம் கடந்ததும் வண்டியைக் கிளம்பினேன். முன்னால் அமர்ந்திருந்த அன்புமதி திரும்பிப் பார்த்து
'ஏம்பா அந்த தாத்தாவை அப்படி தூக்கீட்டு போறாங்க?' என்றாள்.
'அவரு இறந்து போயிட்டாரு' என்றேன்.
'இறந்து போறதுன்னா' உடனே அடுத்த வினா. எப்படிச் சொல்லி விளங்க வைப்பது என்று கொஞ்ச நேரம் யோசித்தேன்.
' இறந்து போயிட்டாங்கன்னா அவங்களால மூச்சு விட முடியாது. பேச முடியாது, நடக்க முடியாது, ஒன்னுமே பண்ண முடியாது. தக்காளிப் பழம் கெட்டுப் போற மாதிரி அதற்கப்புறம் தூக்கிப் போட வேண்டியது தான். ரெம்ப வயசானாலோ இல்ல ரெம்ப உடம்பு சரியில்லன்னாலோ இறந்திருவாங்க.'
இதற்கு மேல் பெரிய விளக்கங்கள் ஒன்றும் சொல்ல முடியாமல் நிறுத்தினேன்.
புரிந்ததா இல்லையா தெரியவில்லை அடுத்த கேள்விக்குத் தாவினாள்.
' இப்ப அவங்கள எங்க எடுத்திட்டு போறாங்கப்பா? '
' சுடுகாட்டுக்கு '
' அங்க போயி என்னப்பா பண்ணுவாங்க?'
' மண்ணு தோண்டி புதைப்பாங்க, இல்லன்னா எரிப்பாங்க'
' அய்யோ.. அப்ப அவங்களுக்கு  வலிக்காதாப்பா ?'
' அதுதான் இறந்துட்டா ஒன்னுமே தெரியாதே.  கடைல  சிக்கன் வாங்கீட்டு வந்து வீட்டுல சமையல் பண்ணுறோம்ல கோழி கத்துதா, அதுக்கு வலிக்குதா, ஏன்னா அது ஏற்கனவே செத்துப் போச்சி. அது மாதிரி தான் .'
புரிந்திருக்கும் போல அமைதியாய் கொஞ்ச நேரம் இருந்தாள் அன்புமதி.
என்ன சிந்திப்பாளென்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.
' அப்பா நீங்களும் செத்திருவீங்களாப்பா?' என்றாள் வேகமாக.
' ஆமா பாப்பா, எல்லாரும் ஒரு நாள் செத்துத் தான் ஆகணும்.'  நானும் சாவேன்  என்றதும் அன்புமதியின் முகம் சிறிது வாடியது.
' நீங்க செத்துட்டா அப்பாவுக்கு நான் என்ன பண்ணுறது.' என்றாள் வருத்தமாக. அடுத்த என்னுடைய பதிலுக்காக காத்திருந்தாள் முகத்தைப் பார்தத படி.
' அன்புமதி பெருசானதுகப்புறம் , அப்பாவுக்கு நல்லா வயசானதுகப்புறம் தான் சாவேன் குட்டி' என்றேன்.
ஒரு நொடிக்கும் குறைவான இடைவெளியில் சட்டென்று  'அப்பயும்  வயசானாலும் நீங்க சாகக் கூடாது சரியாப்பா'  என்று சொல்லி விட்டு பதிலுக்குக் காத்திருந்தாள்.
நான் ஒன்றும் சொல்லாமல் நெகிழ்ந்த ஒரு முத்தத்தை அன்புமதியின் பிஞ்சுக் கன்னத்தில் கொடுத்துவிட்டு அமைதியாய் வண்டியை ஓட்டத் துவங்கினேன்.
மனசு நிறைந்திருந்தது.
ஒரு  நேசப் பொழுதில்
நீண்ட என் நகங்கள்
உன் சட்டை  நூலில்
சிக்கித்  தவிக்கும்
நகம்  உடையுமோ...
உடை  கிழியுமோ...
வழக்குகள் முடியும்
வாழ்க்கை முடியும்  பொழுது.