5. ஒபாமா 98% ஜனநாயகக் கட்சியின் கொறடா/வழிகாட்டலின் படி செனேட்டில் வாக்களித்திருக்கிறார். ஜான் மகயின் 90% புஷ்ஷோடு ஒத்துப் போய் இருக்கிறார். இவர்களுக்கு 'மாற்றம்' தாரக மந்திரத்தையும் 'மேவ்ரிக்' பட்டத்தையும் வைத்துக் கொள்ள என்ன தகுதி உள்ளது? Bipartisan என்று முழங்கினாலும் செய்கையில் அதை நிரூபிக்காதவர்களின் அடுத்த நான்கு வருடங்கள் புஷ்ஷோடு ஒப்பிட்டால் எவ்வாறு வேறுபடும்?
நூறு சதவிகிதம் ஒத்துக்கொள்கிறேன். இருவருக்கும் ஒரு பெரும் வித்தியாசம் இருப்பதாக தோன்றவில்லை பார்க்க 'என் ஓட்டு' கேள்வியில்.
அரசியலில் வாய்ப்பந்தல் போடுபது எல்லாமே ஓட்டுக்களை வாங்குவதற்கு மட்டுனே. அரசாங்கம் எனும் மாபெரும் இயந்திரத்தை ஒட்டுமொத்தமாக யாராலும் மாற்றிவிட முடியாது. அடுத்த நான்கு வருடங்களில் இரண்டு வருடங்கள் இருக்கும் பிரச்சனைகளை சரிசெய்யவே போய்விடும். இதில் பெரும் பணிகள் காத்து இருக்கின்றன. சரியான திட்டங்கள் தேவை.
அடுத்த ஜனாதிபதி என்ன செய்தாலும் 'அப்பவே சொன்னேன் பாத்தீங்களான்னு' அழ அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
ஒபாமா வந்தால் இன்னும் கட்டுப்பாடுகள் கொண்டு வருவார். வெளிநாட்டுக்கு போகும் வேலைகளை தடை பண்ண ஏதாவது சட்டம் கொண்டு வந்தாலும் வருவார். கொஞ்சம் பெரிய நிறுவனங்களுக்கு தலைவலியாக இருப்பார் என்று தோன்றுகிறது.
அவர் பேசுவதையெல்லாம் செய்ய அரசியலும் லாபிக்களும் தடைசெய்யும். அதனால் ஒரளவு கட்டுப்பாடுகளும் போர் முழக்கங்கள் இல்லாமலும் இருக்கும. ஈராக்கிலிருந்து ஓடிவருதெல்லாம் வேலைக்காகாது. கெட்ட பேரும் தலைவலியும் தான் மிஞ்சும்.
மகெயின் வந்தாலும் ஒபாமாவுக்கும் இவருக்கும் வித்தியாசம் இருக்காது. ஈராக் நிலைமையும் ஆப்கானிஸ்தானும் சீராக வேகமான சரியான முடிவெடுப்பார் என்றே தோன்றுகிறது.பொருளாதாரத்தை வேகமாக நிமிர்த்துவார் என்றே நம்பிக்கை அளிக்கிறார். கொஞ்சமாவது லாபிக்களை ஒழிப்பார்.
இவருடைய ஈரான் கொள்கைகள் கிலியை ஏற்படுத்துகின்றன. அனேகமாக நான்காவது வருட இறுதியில் புஷ் போலவே ஏதாவது வேடிக்கை காட்டுவார். பார்ப்போம்.
6. வேட்டி-சட்டை, குர்தா-பைஜாமா: ஒபாமா/மகயின் - எவருக்கு எது பொருத்தமாக இருக்கும்?
[polldaddy poll=999946]
- சத்யா
இந்தச் செய்தி மருந்து தீர்ந்து போன அமெரிக்க ராணுவத்தைச் சுட்டுகிறதா, அல்லது உலகப் போலிஸ்காரனாக இருக்க அமெரிக்காவுக்கு இனி அரிப்பு இல்லை என்பதைச் சுட்டுகிறதா, அல்லது இதில் தனக்கென்ன ஆதாயம் என்று அலட்சியம் காட்டும் அமெரிக்க வழக்கத்தைக் காட்டுகிறதா?
இத்தனை நூற்றாண்டுகள் கழித்து மறுபடியும் கடற்கொள்ளைக்காரர்கள் இந்திய மாக்கடலில் ஆட்சி செய்கிறார்கள் என்பது முதலியம் மறுபடி கொள்ளையர்களால்தான் வழிநடத்தப்படும் என்று சுட்டுகிறதா?  சீனாவில் ஏற்கனவே அப்படித்தான்.
தமிழ்நாட்டில் கூட அப்படித்தான்.
அல்பேனியா, ரஷ்யா, சூடான், நைஜீரியா என்று பல நாடுகளில் கொள்ளையர் ஆட்சி செய்கிறார் என்பதை நான் மறுக்கவில்லை.  ஆனால் உலகமே அப்படித்தான் ஆகப் போகிறதா என்பதுதான் கேள்வி.
இத்தினியூண்டு கடற்கொள்ளைக்காரர்களை ஏதும் செய்ய முடியாத அமெரிக்கக் கடற்படையை யார் இனி சட்டை செய்வார்கள்? - Could Mercenaries Return as Pirate Foes? | Danger Room from Wired.com
4. வெற்றிபெற்ற அடுத்த அமெரிக்க ஜனாதிபதி உங்களை ஆலோசகராக நியமிக்கிறார். என்ன அட்வைஸ் கொடுப்பீர்கள்?
அமெரிக்காவின் உள்விவகாரங்களிலெல்லாம் என்னை ஆலோசனை கேட்கமாட்டார்கள் என்பது சர்வநிச்சயம். எனவே பொதுவில் அமெரிக்காவின் நடப்பு குறித்தும் உலகில் அமெரிக்காவின் பங்கு குறித்துக் கொஞ்சம் சொல்லலாம். இறுதியாக அறிவியல் தொழில் நுட்ப ஆலோசனை கொஞ்சம்.
அரசியல், மதம், ராணுவம், அறிவியலில் பொதுவாக அரை நூற்றாண்டுக்கு முந்தைய சிந்தனையில் தேங்கிப் போகிறார்கள் அமெரிக்கர்கள் என்ற வருத்தம் கலந்த மதிப்பீடு இருக்கிறது எனக்கு.
யுத்தங்கள்
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான உலகில் பரவலாக அமெரிக்காவிற்கு உன்னத பிம்பம் இருக்கிறது. அமெரிக்காவின் வெற்றிகளை (போர் வெற்றிகளையல்ல, ஈடுபட்ட போர்கள் எதிலுமே அமெரிக்கா தீர்மானமான வெற்றியடையவில்லை, இதில் வியட்நாம், குவைத், ஈராக், ஆப்கானிஸ்தான் இன்னும்  ராணுவத் தலையீடுகளைக் கொண்ட க்யூபா, சிலி, நிகராகுவா, போன்ற பல விஷயங்களிலும் அமெரிக்கா பெரிதாகச் சாதிக்கவில்லை. ஆனால் சோகமான உண்மை, சரியாகப் பாதி அமெரிக்கர்கள் இந்தத் தோல்விகளையே வெற்றியாகக் கொண்டாடும் மயக்கத்திலிருக்கிறார்கள்).
போர்வீரர்களை முன்னிருத்தும் நிலை அமெரிக்காவில் ஒழிந்தாலேயொழிய அமெரிக்காவிற்கு உலகில் மதிப்பு கூடப்போவதில்லை, உலகிற்கும் அமெரிக்காவின் தொல்லை குறையப்போவதில்லை.  எல்லாவற்றையுமே இராணுவத்தால் தீர்த்துவிட முடியும் என்ற அசட்டுத்தனத்தை அமெரிக்கா கைவிட்டாக வேண்டும்.  ஆனால் ஜார்ஜியாவை நேட்டோவில் கொண்டுவர ரஷ்யாவின் மீது போர் தொடுக்கலாம், அதன் மூலம் ரஷ்யாவிற்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று உளறும் ரிவால்வார் ரீட்டா ஸேரா பேலின் போன்றவர் துனை ஜனாதிபதியாக வந்தால் இதற்கெல்லாம் சந்தப்பம் குறைவுதான்.
புவி சூடேற்றம்
எண்ணைய்க்குத் துளையிடுவதன் மூலம் அமெரிக்கப் பொருளாதாரத்தை வளர்த்துவிட முடியும் என்பது அபத்தமானது.  அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கும் உலகளாவியச் சூடேற்றத்திற்குச் செவிமடுப்பதன் மூலம் ஒரு புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும். சூடேற்றத்தின் அச்சுறுத்தலையே ஒரு புதிய துவக்கத்திற்கான வாய்ப்பாக மாற்றும் தீர்க்கம் வரவிருக்கும் அமெரிக்க அதிபருக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்.
மாசுகட்டுப்பாடுகளுக்குத்  தடை விதிப்பதன் மூலம் பொருளாதாரம் சரியும் என்பது பொய்க்கூற்று. (குறிப்பிடத்தக் அமெரிக்க முதலாளிகளின் பொருளாதராம அச்சுறுத்தப்படும் என்பதே உண்மை). கடந்த இருபது வருடங்களாகத் தொடர்ச்சியாக மாசுக்கட்டுப்பாட்டை ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க், போன்ற நார்டிக் நாடுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் அவர்களின் பொருளாதாரமும் வாழ்க்கைத் தரமும் பிரமிக்கத்தக்க அளவிற்கு முன்னேறியிருக்கிறது.
ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் புதுப் பொருளாதாரத்திற்குத் தங்களைத் தயார் செய்துவருகின்றன. ஆனால் அமெரிக்கா தேக்கநிலையை அடைந்திருக்கிறது. ஹைட் ரோ கார்பன் பொருளாதாரத்தில் விடிவில்லை என்பதை அமெரிக்க அதிபர் உணரவேண்டும்.  தவிர்க்க முடியாத பொருளாதாரச் சரிவிலிருக்கும் ஜப்பான் கூட  இன்றைய பொருளாதார இறக்கத்தை மறுக்காமல் அதேசமயத்தில் வரவிருக்கும் புதுப் பொருளாதாரத்திற்குத் தன்னைத் தயார் செய்துகொள்கிறது.
வளர்நிலையிலிருக்கும் சீனா சில வியக்கத்தக்க முடிவுகளை எடுத்து வருகிறது. இவற்றுடன் ஒப்பிட அமெரிக்கா தேக்கச் சிந்தனையில் இருக்கிறது.
பொருளாதாரம்
வலதுசாரி பொருளாதாரக் கொள்கைகளில் எனக்கு ஓரளவுக்கு நம்பிக்கை உண்டு. ஆனால், இலக்கற்ற வலதுசாரித்தனம் அழிவிற்குக் கொண்டுசெல்லும் என்பதற்கு சமீபத்தில் சரிந்துகொண்டிருக்கும் வீட்டுச் சந்தை உதாரணம்.  ஃபானி மே, ஃப்ரெட்டி மாக் போன்ற 'மொதலாளிகள்'  நேர்மையாக இருப்பார் என்று கருதி அவர்களுக்கு முழுச்சுதந்திரம் கொடுத்ததால் வந்த வினை இது.  சந்தை தன்னைத்தானே சரி செய்துகொள்ளும் என்பது பெருமளவுக்கு உண்மை என்றாலும் அதற்கான காலத் தேவை மிக அதிகம், அந்த இடைவெளிகளில் பெரும்பாலும் அழிந்துபோகிறவர்கள் ஏழைகளாகத்தான் இருக்கிறார்கள்.
இடது சாய்வுள்ள சந்தைப் பொருளாதாரம் எப்படி சிறப்பாக நடக்க முடியும் என்பதற்கு , ஸ்விட்ஸர்லாந்து, ஃபின்லாந்து, ஸ்வீடனிலிருந்து உதாரணங்களைப் பெறமுடியும்.  உலகிலேயே இந்த நாடுகளில்தான் வரிகள் மிக அதிகம்; பொருளாதார வளர்ச்சியில் முதல் ஐந்து இடங்களில் இந்த நாடுகள் இருக்கின்றன.
அப்படியான அரசுகள் இரும்புக்கரத்துடன் உலக வல்லரசாக இருப்பது இயலாததுதான், ஆனால் உலக நண்பனாக, ஆதர்சமாக இருப்பது சாத்தியம்.  குறைகள் இல்லாத மனிதர்களே கிடையாது, எனவே தீர்மானமான வலது/இடது சாரி சிந்தனைகள் ஒருக்காலத்திலும் வெல்லமுடியாது. எப்படி தீர்மானமான கம்யூனிசம் படிப்பதற்குக் கவர்ச்சியாக, நடைமுறையில் சாத்தியமில்லாமல் இருக்கின்றதோ அதே போல முற்றான மூலதனவாதமும் வறட்டுக் கற்பனைதான்.
நெகிழ்ச்சியற்ற பொருளாதாரக் கொள்கைகளால் எந்தப் பயனுமில்லை என்பதை உணர்ந்து  அமெரிக்க அதிபர் வறட்டுச் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டவராக இருப்பது அமெரிக்காவுக்கும், பொதுவில் உலகிற்கும் நல்லது.
அறிவியல்
ஊனமுற்றோர், வறியோர், முதியோர், வேலையிழந்தோர், போன்றவர்களைக் காலில் போட்டு நசுக்குவது வலதுசாரிகளின் பொழுதுபோக்கு. ஆனால், தமக்கென்று வரும்பொழுது தற்பால் நாட்டம் கொண்ட மகளை நெருக்கி அணைத்துக் கொள்வார்கள் (டிக் செய்னி),  கரு ஆதாரச் செல்களில் (Embryonic Stem Cell) ஆராய்ச்சி நடத்தியாவது அல்ஸைமருக்கு மருந்து காணலாம் (நான்ஸி ரேகன்) என்பார்கள்.
தலைவலியும் திருகுவலியும் தனக்கென வரும்பொழுது தங்கள் குடும்பத்திற்கு மாத்திரம் இடதுசாரிகளாக மாறுவது இவர்கள் வழக்கம்.  தனிநபர் செல்வத்தாலும், ராணுவ பலத்தாலும் பணக்கார நாடாகவும், வல்லரசாகவும் இருக்கலாம், ஆனால் முழுக்க ஏழ்மையற்ற, அவலங்களற்ற, பயங்களற்ற நல்லரசாக இருப்பது சாத்தியமில்லை.  வரப்போகும் அமெரிக்க அதிபர் உன்னதத்தை நாடுபவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
அயல்நாட்டுக் கொள்கை
இராக்கில் அமெரிக்கப் படைகளின் இருப்பை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.  எனவே அதைவிட்டு விரைவில் வெளிவருவது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் நல்லது. ஆப்கானிஸ்தானில் படிப்படியாக வெளியேவர முயற்சிக்க வேண்டும்.
சீனாவைப் பற்றிய மயக்கங்கள் நிறைந்த தோற்றம்தான் அமெரிக்காவிலும் உலகிலும் இருக்கிறது; இது பொதுவில் யாருக்குமே நல்லதில்லை. தோழமைகாட்டி சீனாவை வெளியே அழைத்துவர முயற்சிக்க வேண்டும்.
வெனிசூலா, ஈரான் போன்ற நாடுகளிடம் மீசையை முறுக்குவதில் எந்த வீரமும் இல்லை. ஒன்றும் பேசாமலிருந்தாலே போதுமானது. இப்பொழுது இருக்கும் அரசாங்கம் மாறாக அவர்களை உசுப்பேற்றிவிடுவதிலேயே குறியாக இருக்கிறது.
பாரம்பரியம் (பழமைவாதம்)
சிறுவயது முதலிருந்தே அமெரிக்காவில் எனக்கு ஆர்வம் இருந்தது அறிவியல், நுட்பத்தில் அவர்களின் அபார சாதனைகள் வாயிலாகத்தான்.  தடைகளற்ற ஆர்வம் பெருகும் சிந்தனைகளினால் அமெரிக்கா அறிவியல் உலகிற்கு அளப்பரிய பங்காற்றியிருக்கிறது.  கடந்த பத்து/பதினைந்து வருடங்களில் தொடர்ச்சியாக அமெரிக்காவில் அறிவியலுக்கு எதிரான அணுகுமுறை வளர்ந்து வருகிறது (இது ரீகன் காலத்தில் தொடங்கியது; புஷ் இளையர் காலத்தில் உச்சத்தை எட்டியிருக்கிறது).
மதத்தீவிரவாதம் கொஞ்சம் கொஞ்சமாக கட்டற்ற சிந்தனை என்ற அமெரிக்க வாழ்முறையை பாறையிடை வேராகப் பிளந்து வருகிறது. வலதுசாரி அரசியல் முழுக்க முழுக்க இதையே நம்பியிருக்கிறது. முன்னெப்போதுமில்லாத அளவிற்கு அறிவியல் சிந்தனைகள் மீது, கற்பித்தல் மீது, அறிவியல் நிர்வாகத்தின் மீது என்று பல முனைகளிலும் அறிவியல் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு வருகிறது.
நானோநுட்பம், உயிர்நுட்பம், மரபியல் தொடங்கி  சூடேற்றம், மருத்துவ ஆய்வு என்று பல துறைகளில் இன்றைய ஆட்சியாளர் கேட்க விரும்புவதை மாத்திரமே அறிஞர்கள் சொல்ல வேண்டும் என்று வற்புத்தப்படுகிறார்கள். இந்தப் புற்று நோய் முற்றுமுன் இதிலிருந்து அமெரிக்கச் சிந்தனையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் வரவிருக்கும் அதிபருக்கு இருக்கின்றது. அடிப்படை அறிவியலுக்கான ஆதரவு அமெரிக்காவில் வெகுவாகக் குறைந்து வருகிறது (மறுபுறத்தில் ஜப்பான், சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளில் இது அதிகரித்து வருகிறது).
அறிவியலுக்கு எதிராகத் திரும்பிவரும் அமெரிக்க சமூகத்தை ஒழுங்கமைக்க வேண்டியது வளமையான அமெரிக்க எதிர்காலத்திற்கு முக்கியம்.
5. ஜான் எட்வர்ட்ஸிடம் உங்களுக்கு மதிப்பு இருந்தது. திருமணத்திற்கு அப்பால் உறவு கொண்டதால் அது சரிந்துள்ளதா? அவரின் கொள்கைகள் அப்படியே இருக்கும் பட்சத்தில், பில் க்ளின்டன் பாதம் பணியும் ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்சியும் -- அவரை நிராகரித்து ஒதுக்குவது எப்படி சரியாகும்?
நாளையுடன் முடியும்
நன்றி: (Th)ink
நன்றி: Rivers and conflict | Streams of blood, or streams of peace | Economist.com: "Talk of thirsty armies marching to battle is surely overdone, but violence and drought can easily go together"
உலக நாடுகளுக்கிடையே பாயும் நதிகளின் எண்ணிக்கை - 263
கடந்த ஐம்பந்தாண்டுகளில், நதிநீர் பங்கீட்டுக்காக 400 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது.
பெரும்பாலான நாடுகள் அமைதியாக பிரித்துக் கொண்டாலும், தண்ணீருக்காக 37 வன்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்த முப்பத்தேழில், 30 சண்டை இஸ்ரேலுக்கும் அண்டை நாடுகளுக்கும் நடுவில் மூண்டிருக்கிறது. ஜோர்டான் நதியின் மேற்பாகம் எவருக்கு சொந்தம்?
எண்ணெயும் வைரமும்தான் தற்போதைக்கு சர்வாதிகாரிகளின் விருப்பமாக உள்ளன. கோங்கோ (Congo), அங்கோலா (Angola) போன்ற கொடுங்கோல் ஆட்சிநாயகர்களுக்கு தண்ணீரைக் கடத்துவது கஷ்டமான காரியம்.
தமிழகப் புலவர்களுக்கு பிடித்த பாடுபொருளான சஹாரா பாலைவனத்திற்கு கூப்பிடு தூரத்தில் இருக்கும் நைல், நைஜர், வோல்டா, ஜம்பேசி எல்லாமே ஆபத்தான பகுதிகளாக ஐ.நா. அறிவித்துள்ளது.
ஆனால், உலக வங்கியை நம்பியிருக்கும் ஆப்பிரிக்க நாடுகள் போல் அல்லாமல் சீனா தன்னிச்சையாக நதிகளை தடுத்தாட்கொண்டு, அணையெழுப்பி, திசைதிருப்பி, இயற்கையை சுதந்திரமாக கட்டுப்படுத்துகின்றது.
ருசியாவின் ஆப் (Ob) நதியோடு இணையும் இர்திஷ் (Irtysh) நதியை நிறுத்துவதாகட்டும்; கஜக்ஸ்தானின் பல்காஷ் (Balkhash) ஏரியை நிரப்பும் இலி (Ili) நதியாகட்டும்... யாரும் தட்டிக் கேட்க முடியவில்லை. (கஜக்ஸ்தான் மக்கள்தொகை: 15 மில்./சைனா: 1300 மில்.)
இதே ரீதியில் உலகம் வெம்மை அடைந்து கொண்டிருந்தால் மௌரிடானியா (Mauritania), மாலி, எத்தியிப்போ போன்ற நாடுகளில் தனிநாடு கேட்டுப் போராடுபவர்களின் பிரிவினைவாதம் வலுப்பட்டு கலகம் வெடிக்கலாம். ஆப்பிரிக்காவின் மக்கள் பெருக்கமும் இந்த இனப் போராட்டத்திற்கும் நன்னீர் பற்றாக்குறைக்கும் தூபம் போட்டு சாமரம் வீசுகின்றன.
நேபாளத்தில் சமீபத்தில் நடந்த மாவோயிச வெற்றிக்கும், முன்னுமொரு காலத்தில் ஆப்கானிஸ்தானில் தாலிபான் வளர்ந்ததற்கும் கூட வறட்சிதான் காரணம்.
எமது இணையத் தளமான ஒருதகவல்.கொம் இப் புது வருடத்திலிருந்து புதிய தோற்றத்துடன் உலா வருகிறது. உங்களதுஆக்கங்களைனைஎமது இணையத்தளத்தில் பிரசுரம் செய்ய vikramloma@gmail.com க்கு அவற்றினை யூனிகோட்டில் தட்டச்சு செய்து அனுப்பவும். ஆசிரியரின் பார்வைக்குப் பின் அவை பிரசுரிக்கப் படும்.
http://oruthakaval.com