முதல்வர் அவர்களே - டாக்டர் சு.சு.வுக்கு எழுதுங்கள் ..... மோடிஜிக்கு எழுதிப் பயனில்லை....

கருணையின் மொத்த உருவம் – பகவான் புத்தரின் வழிவந்த, ராஜபக்சே அவர்களின் நல்லாட்சி நடைபெறும் இலங்கையில் -
நேற்று தூக்குதண்டனை விதிக்கப்பட்ட தமிழகத்தைச்
சேர்ந்த 5 மீனவர்களின் உயிரைக் காப்பாற்ற, மாண்புமிகு
தமிழக முதல்வர் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி
அவர்களுக்கு கடிதம் எழுதி இருப்பதாக செய்திகள்
வெளியாகி இருக்கின்றன….

மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது
தமிழக அரசுக்கு இருக்கும் அக்கறையும், அனுதாபமும்
தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும்.
இருந்தாலும், அரசியல் சட்டப்படி,
தமிழகத்திற்கு இலங்கையை நேரடியாக
கையாளக்கூடிய அதிகாரம் இல்லையே.

தமிழகத்திற்கு இது விஷயத்தில், செயல்பட
அதிகாரம் இல்லை என்பதால்,
தமிழக முதல்வரிடமிருந்து பிரதமர் அவர்களுக்கு,
உதவி கோரி இதுவரை எத்தனையோ கடிதங்கள்
போயிருக்கின்றன. ஆனால் பதில் என்று எதாவது
இதுவரை வந்திருக்கிறதா …?

பாவம் பிரதமர் – அவர் எதையென்று கவனிப்பார் …?

மாறி மாறி வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் -
மாநிலங்களில் தேர்தல்கள் -
ஹரியானா, மஹாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர்,
ஜார்கண்ட் என்று ….
ஒரு நாளைக்கு ஐந்து முறை உடை வேறு மாற்ற வேண்டும்….
இடையிடையே, துடைப்ப ஷோக்கள், ‘ஒற்றுமை ரன்’கள் வேறு.
அடுத்து ஆஸ்திரேலியா வேறு போய் அவர்கள்
பாராளுமன்றத்தில் இந்தியில் உரையாற்றியாக வேண்டும்.

எனவே பிரதமர் மோடிஜி அவர்களுக்கு இது குறித்து கவனிக்க நேரமில்லையோ என்னவோ…. இருந்தால் செய்திருக்க மாட்டாரா என்ன …? ஏற்கெனவே 200 மஹாராஷ்டிரா மீனவர்களையும், 60 படகுகளையும் பாகிஸ்தானிடமிருந்து மீட்டுத் தந்தவருக்கு இது ஒரு பெரிய காரியமா என்ன ….?

பிரதமரால், எல்லாவற்றையும் கவனிக்க இயலாது என்பதால் தான் தமிழ் நாட்டுக்கு என்றே, தமிழர் நலனில் மிகுந்த அக்கறை காட்டும் பாஜக மூத்த தலைவரான டாக்டர் சு.சு. அவர்களை நேர்ந்து விட்டிருக்கிறார்….

எனவே, தமிழகத்திற்கு, குறிப்பாக இலங்கையிலிருந்து
உடனடியாக எதாவது நடக்க வேண்டுமென்றால் -
திருவாளர் டாக்டர் சு.சு. அவர்களுக்கு கடிதம் எழுதும்படி
கேட்டுக் கொள்கிறேன். அவர் ராஜபக்சே அவர்களுக்கு
ஒரு ‘போன்’ போட்டாலே போதும். அடுத்த கணம் மீனவர்கள் விடுதலைபெற்று விடுவார்கள்.

இவருக்குப் போய் கடிதமா … என்றெல்லாம்
தயவுசெய்து யோசிக்க வேண்டாம் ..
வேறு வழி இல்லை ….
என்ன செய்வது… பேய்க்கு வாழ்க்கைப்பட்டால்,
புளிய மரத்தில் தானே குடித்தனம் செய்ய வேண்டும்….?

ராஜீவ் குடும்பத்தின் பத்தாயிரம் கோடி சொத்து இன்று யாரிடம் இருக்கிறது ? கேட்பது சு.சுவாமி....!! (சா.சா. பகுதி -10 )

திருவாளர் சுப்ரமணியன் சுவாமி எத்தகைய நம்பகத்தன்மை உடையவர் என்பதை புரிந்துகொள்ள உதவும் பேட்டி ஒன்று  இங்கே …..
19/03/2008 அன்று ராஜீவ்-சோனியா தம்பதியின் மகள்
திருமதி பிரியங்கா வாத்ரா வெளியுலகம் அறியாமல்,
ரகசியமாக வேலூர் வந்து அங்கே சிறைப்பட்டிருந்த 14 more words

அடுத்த நிதியமைச்சர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமியா.....??!!! (சாமிகளின் சாகசங்கள் - பகுதி-9 )

திரு.பத்ரி சேஷாத்ரி அவர்கள் டாக்டர் சுப்ரமணியன்
சுவாமியை பேட்டி கண்டதும், அந்த பேட்டி தந்தி
தொலைக்காட்சியில் வந்ததையும் பலர் பார்த்திருப்பீர்கள்.  அப்போதே சுவாமி சொன்னது தான் …. தனக்கும் மோடி  அவர்களுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் இருப்பதாகவும், …

சு.சுவாமியின் மனைவியை நீதிபதி ஆக்க மறுத்ததற்கு ஆர்வி க்கு கிடைத்த தண்டனை ....!!! (சாமிகளின் சாகசங்கள் - பகுதி -8 )

“ஆர்வி” என்கிற ஆர்.வெங்கட்ராமன் தமிழக மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். முதலில் காமராஜர் அமைச்சரவையில் தமிழ்நாட்டில் தொழிலமைச்சராக அவர் ஆற்றிய பணிகள்
அற்புதமானவை. தமிழ்நாட்டில் தொழிற்பேட்டைகள், ஐடிஐ, பாலிடெக்னிக் பயிற்சிப் பள்ளிகள் ஆகியவை துவங்க முழுமுதல் காரணம் அவர் தான்

சு.சுவாமியையும், ச.சாமியையும் பாதுகாத்தது யார்....? நரசிம்மராவா... அல்லது ..... ? (சாமிகளின் சாகசங்கள் -பகுதி -7 )

( ரங்கனாத் வாக்குமூலம் தொடர்ச்சி ) -

கேள்வி – சிவராசன் பத்திரமாகத் தப்பித்துச் செல்வது
குறித்து அவனுக்கு எத்தகைய வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது ?

பதில் – சிவராசன், தான் ஜாப்னா திரும்பச் சென்றால், 150 more words

சாமிகளின் சாகசங்கள் தொடர்கிறது...... சிவராசன் தப்பிக்க சந்திராசாமி உதவியா ...? ( சா.சா. பகுதி-6 )

(  சேர்ந்தே இருந்தவர்கள் தான்  –  சந்திராசாமியும் அவரது நண்பர் சுப்ரமணியன் சுவாமியும் …….  !!!  )

——-

அரசியல்வாதி என்கிற போர்வையில் இயங்கிக்
கொண்டிருக்கிற ஒரு political blackmailer பற்றிய
இடுகைத் தொடர் இது. 46 more words

ஜெயலலிதாவுடன் "தேசபக்தி கூட்டணி" - சுப்ரமணியன் சுவாமியின் 02/02/2009 -ந்தேதி பேட்டி.....

 ( இது என்ன “போஸ்” ….?
கூட்டணி வேண்டுமென்றால்
காலிலும் விழுவாரோ …? ….? )

“சாமிகளின் சாகசங்கள்” இடுகைத் தொடர் சம்பந்தமாக
சில ஆவணங்களை சேகரித்துக் கொண்டிருந்தேன்.
எதேச்சையாக கண்ணில் பட்டது திருவாளர் சுப்ரமணியன் சுவாமி அவர்கள் பிப்ரவரி 2, 2009 – அன்று -