நான் சேலம் குகை மேல்நிலைப்பள்ளியில் பத்தாவது (1994) படித்துக் கொண்டிருந்த சமயம், ஒரு மடம் சார்பாக 3-4 மாவட்டங்களிடையே விவேகானந்தரைப் பற்றி ஒரு கட்டுரைப் போட்டி நடத்தப் பட்டது. நான் அதில் எனது பள்ளி சார்பாக கலந்துக் கொண்டேன். எனது பள்ளி ஆசிரியர்களும் விவேகானந்தரைப் பற்றிய புத்தகங்களை எனக்கு கொடுத்து உதவினர். நான் அனுப்பிய கட்டுரை முதல் பரிசைப் பெற்றிருப்பதாக எங்கள் பள்ளிக்கு தகவல் வந்தது. ஜனவரி மாதம் கோவையில் உள்ள அம்மடத்தில் நடைபெறும் ஒரு பூஜை விழா சமயம் அங்கே வந்து பரிசு பெற்றுக் கொள்ளலாம் என்றும் சொன்னார்கள். பரிசை வழங்க இருந்தவர் முன்னாள் ஆளுநர் சி. சுப்ரமணியம் அவர்கள் என்றும் ஒரு தகவல். ஆனால் சில காரணங்களால் நேரில் போக முடியாத சூழ்நிலை.
இதை எனது தமிழ் ஆசிரியரிடம் சொன்னப்போது அவர் மிகுந்த ஏமாற்றமடைந்தார். முன்னாள் ஆளுநர் கையால் பரிசு வாங்கும் வாய்ப்பை ஏன் விட வேண்டும் என்று கேட்டு என்னை நேரில் சென்றே பரிசை வாங்க சொல்லி கட்டாயப்படுத்தினார். நானும் அப்பாவிடம் இதை எடுத்துச் சொல்ல அவரும் சரி, நாம் கோவை செல்லலாம் என்று ஒத்துக் கொண்டார். ஆங்கிலப் புத்தாண்டு அன்று அப்பாவும் நானும் கோவைக்கு பேருந்தில் கிளம்பினோம்.
அடுத்த நாள் தான் பரிசு வழங்கும் நிகழ்ச்சி என்பதால் அம்மடத்திலியே அன்று இரவு தங்கினோம். அடுத்த நாள் பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்காக காத்திருந்தோம். பரிசு வழங்கும் நிகழ்ச்சி இனிதே முடிந்தது. ஆனால் என்னை மட்டும் கூப்பிடவில்லை. எனது அப்பா சென்று விழா நிர்வாகிகளிடம் கேட்டார். அதற்கு அவர்கள் ஏதோ ஒரு பட்டியலை பார்த்து விட்டு, "சாரி சார், இது தவறி விட்டது" என்று சொல்லி விட்டனர். அப்பா அதற்கு "ஆங்கிலத்தில் சாரி ஒரு கெட்ட வார்த்தை" என்று சொல்லி அவர்களை திட்டி விட்டு பரிசை அவர்களிடமே வாங்கிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினோம்.
குறிப்பு: இது என்னுடைய அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளவே தவிர யார் மனதையும் புண்படுத்த அல்ல.
பாஸ்டன் பக்கம் பெனின் நாட்டு ராஜா வந்திருந்தார். வழக்கமான அரசுமுறை சந்திப்பு, கொடை ஒதுக்கீடு, இன்பச் சுற்றுலா எல்லாம் முடிந்தவுடன் இன்னொரு காரியம் செய்தார்.
அடிமைத் தொழிலில் ஈடுபட்ட தங்கள் முன்னோர்களுக்காக இந்தத் தலைமுறையினரிடம் 'மன்னிப்பு' கோரினார்.
சொகுசாக வந்தோமா...
கேடிலாக் பவனி கொண்டோமா...
என்று விமானம் ஏறி ஊர் போகாமல், ஊடகத்திற்காக காட்சி பொம்மையாக்காமல், உளமார்ந்த  வருத்தங்களை நேரில் தெரிவித்திருக்கிறார்.
இந்த மாதிரி தமிழ்நாடு/இந்தியாவில் தாங்கள் செய்த தவறுகளுக்காக மேட்டுக்குடியினரின் பிரதிநிதிகளான சங்கராச்சாரியார்கள், ஜீயர்கள் (இன்ன பிறர்?) தார்மீகப் பொறுப்பேற்று கிஞ்சித்தாவது சஞ்சலப்பட்டிருக்கிறார்களா?
செய்தி:
1. King of Benin to Visit UMass Boston - Arts: "His Majesty is also expected to make a historic public apology for the role played by the dynastic kings of Dahomey in the trans-Atlantic slave trade."
2. Call from a king - The Boston Globe: "While King Kpoto-Zounme Hakpon III said homelessness and poverty are problems among the people in his West African country of 8 million, the main reason for his visit was to apologize for his ancestor's role in the trans-Atlantic slave trade."
அதிகாரபூர்வமாக, சுதந்திரமான இஸ்ரேல் பிறந்து அறுபது ஆண்டுகள் நிறைந்திருக்கிறது. அதற்கான கொண்டாட்டங்களுக்கு யூதர்களைக் கொன்று குவித்த முன்னாள் கொடுங்கோலனான ஜெர்மனி நாட்டு அதிபர் அழைக்கப்பட்டார்.
தன்னுடைய பெற்றோர் காலத்தில் செய்த குற்றத்திற்காக இன்னாள் தலைவர் மெர்க்கெல் மன்னிப்பு கோருகிறார்.
செய்தி:
1. Merkel: Germany will always stand with Israel: "The visit by the German chancellor and at least half of her cabinet to Israel was meant to mark the 60th anniversary of the Jewish state, which was born out of the ashes of World War II and the murder of 6 million Jews by the Nazis.
In a first-ever address by a German chancellor to the Israeli parliament, Ms. Merkel, “The Shoah fills us Germans with shame,” she continued, using the Hebrew word for the Holocaust. “I bow to the victims. I bow to all those who helped the survivors.”"
2. Merkel: Germans 'filled with shame' over Holocaust - USATODAY.com
இன்றைய செய்தி: Muslim Killed For Marrying Hindu
இஸ்லாம் மதத்திற்கு இன்னொரு எண்ணிக்கை கூட்டும் விதமாகத்தான் அவர் செயல்பட்டிருக்கிறார். பிறக்கும் மக்களும் முஸ்லீமாகவே இருப்பார்கள். மனைவியும் மதம் மாறி விட்டார்.
சாதாரணமாக, இன்னொரு மதத்தை சேர்ந்த பெண் மதம் மாறி மணம் புரிந்தால்தான் வெகுண்டு எழுவார்கள். அதாவது, ஹிந்துப் பெண், கிறித்துப் பையனை கரம் பிடித்தால், இந்துக்களுக்கு ரத்தவெறி பிடிக்கும்.
இங்கு இரு சாராரிடம் இருந்து 'மன்னிப்பு' லேது.
1. PUCL : Message: "Mohammad Hanif Shah, 28, who had incurred the wrath of several people two years ago for marrying Hema Bhatnagar, a Hindu who took on the name Heena after marriage and converted to Islam, was shot dead near his residence at Mansore in Madhya Pradesh."
2. » Muslim man killed for marrying a Hindu girl
தொடர்பில்லாத தசாவதாரம்: Kamal & Dasavatharam Issues - Shaivism, Vaishnavism, Hinduism, Religion, Tamil Cinema, History, Kings
கேள்வி நேரம்:
1. இராக்கிடம் அமெரிக்கா எப்பொழுது மன்னிப்பு கோரும்?
2. மனுநீதி பின்பற்றியவர்கள், தாழ்த்தப்பட்டவருக்கு இன்ன வேலை என்று அனுஷ்டிப்பவர்களிடம் இருந்து அபிஷியலாக உரிமை துறப்பு கோரினால், பாரதிய ஜனதாவிற்கு லாபமா?
3. முன்னாளில் (அதாவது ஏழாம் நூற்றாண்டு வரை) சுபிட்சமாக இருந்த சமணர்களிடமும் பௌத்தர்களிடமும் சைவ/வைணவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமா, அல்லது தமிழீழத்தில் செய்வதோடு பேலனஸ் ஆகி கூட்டிக் கழித்து விட வேண்டுமா?
4. அன்று நாஜிகள் வதைத்ததற்காக வருந்தும் மெர்கல், இன்று இரான் மீது பொருளாதார நெருக்கடி கொண்டர்ந்து, வருத்தி, பிராயசித்தம் தேடி -- நாளைய தலைமுறை ஜெர்மனி ராஜாக்கள் மன்னிப்பு கேட்க வழிகோலுகிறாரா?