என் மனதை என்ன தான் ஒரு நிலைப்படுத்தி,
அழகிய சாலையாக சமன்படுத்தி வைத்திருந்தாலும்,
அவ்வப்போது, டெலிபோன் காரர்கள்,
ஹைவே காரர்கள், PWD காரர்கள்,
தோண்டிப் போட்டு போய் விடுவது போல,
என் மனதை உன் பேச்சாலும், உன் பார்வைகளாலும்,
உன் சிரிப்பாலும் கலைத்து விட்டுச் சென்று விடுகிறாய்…
உன்னுடன் நடக்கும் போது I Love You
என்று எங்கேயும் பார்த்தால்
தயக்கமாய் தாவும் என் கண்கள்....
Meet my friend
என்று பிறரிடம் என்னை அறிமுகம்
செய்யும் போது ஏனோ மனதுக்குள்
Objection! your honour....
Good Morning Friend என்று விரல்கள் தட்டி
SMS செய்தாலும் உள்ளே என் மனம்
இல்லையென்று தலையை ஆட்டும்....
I love you mummy என்று நீ
செல்லிடபேசியில் பேசும்போது
என் செவியும் அந்த சொற்களுக்கு ஏக்கம் கொள்ளும்...
நாங்கள் என்று நீ சொல்லும்போதெல்லாம் அந்த
சொல்லுக்குள் என்னை எப்போது சேர்த்துக் கொள்வாய்
என்ற கேள்வி எப்போதும் என் மனதில்....
இப்படி எனக்குள் எல்லாமே அசாதாரனமாய் ஓடிக்
கொண்டிருக்க,
நீ மட்டும் வைத்திருக்கிறாய் என்னை நண்பனாய்
மிகச் சாதாரனமாய்.....
ஏதேனும் வேண்டும் என்றால்
என் கரம் கோர்த்து
புருவங்களைப் பிதுக்கி கண்களால் கேட்பாய்.
உன் உதட்டில்
பிரமிப்பின் புன்னகையைப் பிடித்து வைக்க
எனக்குப் பிடிக்காததையும் வாங்கித்தருவேன்.
யாருமே இல்லாத மாலைப்பொழுதுகளில்
சீண்டாதீர்கள் என்று சிணுங்குவாய்.
முரணாய்ப் பேசி முரண்டு பிடிப்பாய்,
புரிந்துகொண்டு
முத்தமிட்டு மூச்சுப்பெறுவேன்.
கால்வலிக்கிறது என்பாய்.
கண்ணில் தூசி என்பாய்.
புதிதாய் வாங்கிய மாலையைப் பார் என்பாய்.
நமக்கிடையே இருக்கும்
இடைவெளியைக் குறைக்க
நீ இடும் அறிக்கைகள் இவையென்றறிந்து,
காற்று காயம் படும் இறுக்கத்தில்
கட்டிக் கொள்வேன்.
இப்போதும்
மங்கலாய்க் கசியும் நினைவிடுக்குகளில்
உன் குரல் கேட்காமலில்லை.
'மாறிவிட்டேன்' என்ற ஒற்றைச்சொல்லில் என்னை
தூக்கிலிடும் முன், என்
கடைசி ஆசையை மட்டும்
நீ கேட்கவேயில்லை.
கேட்டாலும் சொல்வதற்கு என்ன இருக்கிறது
நீ - எனும் சொல்லைத் தவிர.
மனதுக்குள் மறைத்துவைத்த காதலை
தயக்கமில்லாமல் சொல்லிவிட்டேன்
உன்னைத்தவிர எல்லோரிடமும்....
உனக்கொன்று தெரியுமா...?
ஒரு தலை காதலுக்குத்தான் சக்தி அதிகமாம்..
அதனால் தான் நான் சொல்லாத காதலை
நீ தொலைவில் எங்கிருந்தோ தெரிந்துகொண்டாய்.....
என் காதலை தெரிந்து கொண்டாயே தவிர
கொஞ்சமும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறாயே....?
உன்னிடம் எப்போதும் போல் என்னால் பேசமுடியாத நிலை,
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது,
எதுவும் தெரியாது போல் நலம் விசாரிக்க.....?
என் காதலுக்கு தெரியும் உன் மனதில் நான்யென்று,- அனால்;
என் மனதுக்கு தெரியவில்லை ஏன் அதை மறைக்கிறாய் என்று...
ஒரு வேலை என் காதலை ஏற்க மறுக்கிறாயோ...?
எதுவானாலும் பரவாயில்லை என் காதலுக்கு ஒரு பதில்சொல்..
உன்னால் உயிர் ஒன்று உட்சத்தை நோக்கி
உடைந்து விடும் நிலையில் தவிக்கிறது.....
ஏனடா காதலித்தேன் என்று நினைக்கும் முன்பு
சீக்கிரம் என் காதலுக்கு பதில் சொல்லி அனுப்பு
முடிந்தால் அப்படியே சம்மதமும் சொல்லியனுப்பு....
.............................. .....தவிப்புகளுடன் என் உயிர்!!!
என் வாழ்க்கை புத்தகத்தின்
எழுதாத பக்கங்கள் என்னை;
ஏக்கத்தோடு மட்டும்மல்ல,
எமாற்றதொடும் பார்க்கின்றன....
ஏன் என்றல்
அவைகளுக்கு தெரியும்
அப்பக்கங்கள் இனி
எழுதப்பட போவதில்லையென்று....!!
நான்
உன்னிடம் சொன்னதில்லை
காதலுக்கு
வார்த்தைகள் விளக்கவுரை
சொல்வதில்லையே.
உன்னுடன் பேசும்போதெல்லாம்
எனக்குள்
அன்னியோன்யமாய்
ஓர்
அணில் கூட்டம் ஓடித்திரியும்.
உன் கண்களில்
படபடக்கும் பட்டாம் பூச்சிகளுக்காய்
என் மனம் முழுதும்
ஈரப் பூக்கள்
இறக்குமதியாகும்.
உன் புன்னகைத் தட்டுகளில்
என் இதயம்
கால் தடுக்கி விழுந்து கிடக்கும்.
பிடிவாதப் புயலாய்
என்
புலன்கள் கொந்தளிக்கும்.
விரலுக்கும் மூளைக்கும்
இடைவிடாமல்
ஓர்
இழுபறி நடக்கும்.
எனக்குள் நடக்கும்
பூகம்பங்களைப் புரியாமல்
நீ
தொடர்ந்து புன்னகைப்பாய்.
நான்
உடைந்துபோன உறுதியுடன்
இடிபாடுகளில் இறுகிக் கிடப்பேன்.
உன் கூந்தல்க்காட்டுக்குள்
சில
மின்னல் பூக்கள் நட்டு,
உன் கண்களுக்குள் அதை
அறுவடை செய்ய ஆசை வரும்.
உன் ஆடைகளுக்குள்
என் ஆசைகளை ஊற்றி வைக்க
சிறு
மோகச் சிந்தனை முளை விடும்.
விரல் அழகா
உன்
நகம் அழகா என்று,
பூக்களும் காற்றும்
நதிக்கரையில் பேசுதோ என்று
சங்கீதச் சிந்தனை சிரித்து வரும்.
நீ
அருகிலிருந்தால்
நான் கனவுகளில் விழுந்து
மௌனமாய் கலைகிறேன்.
நீ
விலகியிருந்தால்
நிஜத்துக்கு வந்து
உன்னுடன் பேசிப் பேசியே
சத்தத்தில் கரைகிறேன்.
கவிதைகளுக்கு சொன்னவற்றை
நான்
உனக்குச் சொல்லியிருக்கலாம்.
சொல்லியிருந்தால் ஒருவேளை
என் வீட்டுப் பூக்களுக்கு
நீ
வாசனை வகுப்பு எடுத்திருப்பாய்.
சொல்லவில்லையே..
காதலுக்கு
வார்த்தைகள் முக்கியமில்லை.
கல்யாணத்துக்கு
மௌனம் முக்கியமில்லை என்று
வார்த்தையில்லாமல் சொல்லிவிட்டுச்
செல்கிறாய் நீ..
இப்போதும் என்னிடமிருந்து
எழுத்துக்கள் கூட எழவில்லை.
உன் மொழி பெயர்ப்புக்காய்
ஒரு துளி
விழிநீர் மட்டும் விழுகிறது.
இத்தனை புகைப்படம் தின்ன கொடுத்ததும்
உன்னில் மீதம்முள்ள அழகுதான் என்ன...?
இங்கே உலக அதிசயங்களுக்கு
போட்டிகள் நடத்தலாம்- ஆனால்;
ஒன்றை மட்டும் தெறிந்து கொள்,
இங்கு காதலிப்பவர்கள் அதிகம்....!
எத்தனை பளபளப்பாய்
மின்னினாலும் என்ன...?
நீ காதலுக்காக
கட்டப்பட்ட கல்லறைதானே...!
உன்னை சாச்சியாய் வைத்தே
கல்லறைகள் கோவில்கள் ஆயின...!
உன்னாலே காதலிப்பவர்கள்
கடவுளிடம் சேர்ந்தார்கள்...!
உலகம் முற்றும்வரை
காதல் வாழும்.....
காதல் முற்றும்வரை
நீயும் வாழ்வாய்.......
யுகயுகமாய் காதலித்தும்
என்ன பிரயோஜனம்?
என்றுமே
என் அனுமானங்களை
கடந்து விடுகிறது
உன் அன்பு மட்டும்!
உன்னால் மட்டுமே முடிகிறது
ஒன்றிரண்டு வார்த்தைகளில்
உயிரை உறிஞ்சும்படியான
காதலை சொல்ல!
பேனாவை தொடாமல்
நாள் முழுவதும்
கைகட்டியபடியே இருந்தேன்,
உன் அளவில்லாத அன்பால்
அடக்கமில்லாதவனாகிவிட மனமில்லாமல்!
உன் அன்பை
பற்றிக் கேட்டேன்
நீ
ஆகாயத்தை கை காட்டினாய்,
இதற்குப் பெயரும் காதல்தானா?
நீ வாசித்ததையே
நானும் வாசிக்கிறேன்;
உனக்கான வாசகனாய்...!
நீ நேசிப்பதையே
நானும் நேசிக்கிறேன்;
உனக்கு நேசமானவனாய்...!
நீ சுவசித்ததையே
நானும் சுவாசிக்கிறேன்;
உனக்கான சுவாசமாய்...!
உனக்கு தெரியாமலே
காதலிக்கிறேன்;
உன்னைமட்டும் காதலிப்பவனாய்...!
நான் இறக்கும் முன்பே
நீயும் காதலித்துவிடு.....
இல்லையேல் என் கல்லறையில்
ஒரு துளி கண்ணீர் விடு.....!!!
காதல் என்னை
கவிதை எழுத வைத்தது,
நானும் உனக்காக
கவிதை எழுதினேன்,
உன்னை மட்டும்  காதலிக்க
வேண்டும் என்று...
பூமி மீது வானம்
மங்கள
வெயில் எறிந்து விளையாடும்
மாலை.
சிலந்தி வலைகளின்
பிசுபிசுப்புக் கயிறுகளில்
கசவு மின்னும் நெசவு
கண்களைத் தின்னும்.
மாலை அழகுதான்,
அத்தனை அழகையும்
இமை மூடி இருட்டாக்கும்
இரவுக்கும்,
அத்தனை ஜன்னல்களையும்
ஒட்டு மொத்தமாய் திறக்கும்
பகலுக்கும் இடையே,
மங்கல் வெளிச்ச
மந்திரத் தோட்டமாய்,
பச்சை மரங்களின் மார்பிலும்,
பருவப் பெண்களின் கனவிலும்
மஞ்சள் தேய்க்கும்
இந்த கதிர் மாலைக் குளியல்.
இருவிழிகள் இருகிளிகளாய்
இதமாய் வந்து
இதயம் கொத்த,
சின்ன என் மழலை
பட்டாம் பூச்சி பிடிக்கும் மாலை.
மாலை அழகுதான்,
விடலைக் காலம் முதல்
முதுமையின்
கைத்தடிக் காலம் வரை.
மாலை அழகு தான்.
சோர்வு என்னை
சுருக்குப் பையில் சொருகும்
வேளைகளிலெல்லாம்
வாசலில்
எனக்காக மாலை காத்திருக்கும்
மடி நிறையக் கதைகளுடன்.
உன்
இதயமெனும் வண்ணத்துப் பூச்சி
இறக்கை அடிக்கிறதா ?
எனும் உனக்கான என்
காதல் கவிதை கூட
இதே சூரியன் அன்றொருநாள்
விழுந்தபோது எழுந்தது தான்.
நல்லவேளை,
என் காதலை
நீ
மாலை நேரத்தில் மறுதலிக்கவில்லை.
உனக்கான வார்த்தைகளை நான்
தேடுவது இப்பொழுதெல்லாம்
குறைந்து விட்டது.
வார்த்தைகளின் தோல்விகள்
என் நெஞ்சில் எந்த சலனத்தையும்
உண்டு செய்யவில்லை
அதற்கு மாறாய் உன் மீதான
புரிதலைத் தான் ஆழமாக்கியது
உன் மௌன குறியீடுகளில்
உள்ள அன்பின் நீண்ட வாசகங்களை போல்
உன் வார்த்தைகளுக்கு என் மனதை
ஊடுருவும் சக்தி இல்லை
இறப்பின் சுவையறியும் பொழுது
தான் என் மனதில் உனக்கான
நேசிப்பின் துளிர்வை உணர்ந்தேன்
மனதின் வெறுமையான பக்கங்களை
நீ மட்டுமே நிரப்புவதாக உணர்ந்தேன்
உன் சுவாசப் பையினை நிரப்ப
வேண்டிய உயிர் காற்றினை
சுமந்தபடி நிற்கும் மரம் நான்
உன் நிழலுக்காக காத்திருக்கிறேன்
இலைகளற்ற கிளைகளில் உன்
அன்பினை நிரப்ப வருவாய் என..................
மெல்லிய ஒரு காலைப் பொழுதில்
மெல்லிசையாய்  சொன்னாய்.
நீ என் உலகம்
திசைகளில் எரியும் தீபம்.
திக்குத் தெரியாத திகைப்பில்
திளைக்க வைத்த வார்த்தைகள் அவை.
நீ
இல்லையேல் எனக்குள் நான்
இளைப்பாற இயலாது,
உனக்குள் நீ உட்கார முடியாது என்றாய்
மழை நின்ற ஈரத்தில்
ஓர் மத்தியான நேரத்தில்.
மனசு
நிரப்பப்பட்ட நிமிடங்கள் அவை.
சாயங்கல வேளையில்
சந்தித்த போது,
இழப்பேன்,
உனக்காய் நான் எதையும் இழப்பேன்
தோளுரசிச் சொன்னாய்.
இதயங்கள் முடிச்சிட்டு
மாலைகள் பல மறைந்தபின்
ஓர் கடிதம் எழுதிக் கேட்கிறாய்,
நம் காதலைத் தொடரத்தான் வேண்டுமா ?
ஆம் என்பதே என் பதில் என்பது
உனக்கேத் தெரியும்.
ஆனாலும்
'இல்லை' என்றே பதில் எழுதுகிறேன்
அதே காதலுடன்.
மகாகவி பாரதியார் காதலைப் பற்றி இப்படிச் சொல்கிறார்.
காதலினாலுயிர் வாழும் - இங்கு
காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்
காதலினால் அறிவுண்டாகும் - இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்
ஆதலினால் அவள் கையைப் - பற்றி
அற்புதம் என்றிரு கண்ணிடை ஒற்றி
வேதனை இன்றி இருந்தேன்........
(காதற்பாட்டு, அந்திப்பொழுது -
பாரதியார் பாடல்கள்)
கண்களில் தொடங்கி கருத்தினில் வளர்ந்து, உருவமில்லாமல் உயிரை வதைக்கும் இன்ப சித்திரவதை காதல்.
கல்லறை வரை அதைப் பொக்கிஷமாய் வைத்திருப்பவர்களும் உண்டு.
"அன்று,
நான் அவள் மனதிலும்,
அவள் என் மனதிலுமாய்
எங்கள் காதலை வளர்த்தோம்
கம்மங்காட்டின் கடைசியிலும்
காளியம்மன் கோயிலிலும்
சோளக்காட்டின் சந்தினிலும்
செம்மண் புழுதியிலும்.
கதிராய், காவியமாய்,
செங்கரும்பாய், செந்தாமரையாய்
செழித்து வளர்ந்த காதல்
சூழ்நிலைச் சூறாவளியால்
சொந்தமின்றி போனது.
இன்று,
அவள் அவளின் வீட்டில் கணவனுடன்
நான் என் வீட்டில் என் மனைவியுடன்"
என சோக கீதம் வாசிப்பவர்கள் பலருண்டு.
உரிய பருவத்திற்கு முன்பே வரும் காதல் பெரும்பாலும் பாலினக் கவர்ச்சியாகவே உள்ளது. பள்ளிப்பருவத்தில் எதிர்பாலினரிடம் ஏற்படும் கவர்ச்சியால் பெற்றோர் சொல் காதில் விழாமல் காதலில் கரைவது உண்டு.
காதலில் மூன்று நிலைகள் உண்டு:
1) உடற்கவர்ச்சி
2) உள்ளக் கவர்ச்சி
3) ஈடுபாடு
முதலில் விழிகளில் வியந்து, இடையில் இருவரும் ஒருவரை ஒருவர் வசீகரித்து, கடைசியில் கைப்பிடித்தே தீருவேன் என்ற நிலை என மூன்று படிக்கட்டுகள் காதலில்.
வாலிப வயதில் தங்கள் துணை பற்றிய கற்பனை கணக்கில்லாமல் வருவதும், யாரைப் பார்த்தாலும் இவர் என் கற்பனைக்கு உயிர் கொடுப்பவரோ என்ற எண்ணம் எழுவது இயற்கைதான். அதில் பாதியாவது ஒத்துப்போனால் அவர்மீது ஓர் ஈர்ப்பு ஏற்படும். டீன் ஏஜ் காதலில் முதலிரண்டு நிலைகளின் ஆழம் அதிகம். ஆனால் அதனை மூன்றாம் நிலைக்குக் கொண்டு செல்ல முடியாததற்கு அவர்களின் விட்டுக்கொடுக்காத மனப்பான்மையும், முதிர்ச்சியின்மையுமே காரணங்களாகின்றன.
15 வயதுக்குள் உள்ளவர்களிடம் எடுக்கப்பட்ட சர்வேயில் அவர்களின் டீன் ஏஜ் காதல் 3 அல்லது 4 மாதங்களிலேயே முடிந்துவிட்டதாகக் தெரியவந்துள்ளது. டீன் ஏஜ் காதலர்களின் மூளையை அவர்கள் காதலில் திளைத்திருக்கையில் ஆராய்ந்தபோது, காதல் அவர்களுக்கு போதைப்பொருள் உண்ட மயக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் சொல்லுகின்றன. Cocaine போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் போல் அவர்களின் நடவடிக்கைகள் இருந்துள்ளன.
கனவுகளைச் சுமக்கும் வயதில் காதலைக் கண்டுவிட்டால் மனம் வண்ணத்துப்பூச்சியாய் சிறகடிக்கும். கவிதைகள் வடித்து காவியம் படைக்க முயலும். இந்த முன்வயதில் வரும் காதல் கூடாவிட்டாலும் தன்னிலை பற்றி உணரவைக்கும். தனது விருப்பு, வெறுப்புகள், பலம், பலகீனங்கள் போன்றவற்றை அறியவைக்கும் ஆசிரியராக காதல் அமைந்துவிடுவதுண்டு
முதல் காதலை முன்னனுபவமாக மட்டும் கொண்டு முன்னேறியவர்களும் உண்டு. காதலில் வாழ்க்கையை மூழ்கடித்துக் கொண்டவர்களும் உண்டு. முன் வயதில் வரும் காதல் முறுக்கேறும் வாலிபத்தின் அறிகுறியாய்க் கொண்டு லட்சியத்தை நோக்கி உழைத்தால், வெற்றி தேவதையின் மணமாலை உங்களுக்கே!
அண்ணலும் நோக்கியா
அவளும் நோக்கியா
அவனிடம் N-72
அவளிடம் 6600.
இருவரும்
மறந்தும் கூடத்
திரும்பிப் பார்ப்பதில்லை
1100 வை.
(தற்காலக் காதலில் நிலவும் வர்க்க பேதத்தைக் குறித்து...)
உன்னால்
என்னை நம்ப முடியவில்லை,
பிறகு
என்னால் என்னை எப்படி நம்புவது?
தொலைபேசியில் கண்டபடி
எண்களை அழுத்திவிட்டு
எப்பொழுதும் அப்பாவிடமே
பேசிக்கொண்டிருக்கும்
குழந்தையைப் போல ஆகிவிட்டேன்;
உன்னைத் தெரிந்தவர்களிடம்
கண்டபடி பேசிவிட்டு,
தெரியாதவர்களிடம் பேசிய
வெட்கமும்,
உன்னிடம் பேசமுடியாத
துக்கமுமாக,
நாளெல்லாம்
வெறுமையில் கரைகிறது!
உன் வெட்கம்
என் பேனாவிற்கும் பிடித்துவிட்டது,
தலை குனிந்த பிறகும்
வார்த்தை மட்டும்  வரவேயில்லை!
உன்னை பிடித்திருப்பதால்தான்
நீ தூக்கியெறியும்போதெல்லாம்
பூமாராங் மாதிரி
திரும்பி உன்னிடமே வருகிறேன்!
தூரமாக எறிந்துவிடாதே,
திரும்பி வருவதற்குள்
நீ எங்காவது போய்விடப் போகிறாய்!
ஆவலின் ஆயுள்கைதியாய்
இன்னும்
ஜன்னல்கள் திறக்காத
பாதாளச் சிறைக்குள்
நான்.
உன்
கணிப் பொறிக் கடிதம்
கை நீட்டுமென்று
நான்
தோண்டி எடுத்து வைத்திருந்த
நம்பிக்கைகளின் நகங்களும்
பாசி பிடித்துத் தான்
போய்விட்டன.
ஆனாலும் என்
கணிப்பொறிக் கதவுகளை
தினசரிக் கடமையாய்
திறந்து பார்க்கத்
தவறுவதே இல்லை.
உன் விரல்கள் வந்து
சத்தமிடாமல் தட்டினாலும்
திறக்க வேண்டுமென்றே
கண்களில்
கதவுகளை நட்டிருக்கிறேன்.
புள்ளிமானே,
என் முகவரியில் ஏதேனும்
புள்ளிகளைத் தொலைத்தாயோ ?
பட்டத்தில் வால் பார்த்து
உள்ளங்கை உதறி
நூல் தொலைத்தாயோ ?
இல்லை
என் முகத்துக்கான
முகவரியையே
தொலைத்து விட்டாயோ ?
ஆற்றுக்குள் விழுந்து விட்ட
அயிரை மீனின்
பெயர் மறந்து போய்விட்டதோ ?
கேள்விச் சாவிகளோடு தான்
கதவுகள் இல்லா
மதில் சுவர் திறக்க
துவாரம் தேடித் திரிகிறேன்.
யாராரோ வந்து
ஏதேதோ எறிந்து விட்டுப்
போகும் என்
இணையக் கடிதக் கூடையில்
இன்னும் உன்
சாமந்திப் பூ மட்டும் வந்து
சேரக் காணோம்.
அந்த வாசம் இல்லாததாலோ
என்னவோ,
பெரு மலையாய் கிடக்கும்
கடிதக் கட்டுகளிலெல்லாம்
வெறும் சுடுகாட்டு வாசனை.
ஒரு மாறுப்பட்ட கற்பனை
அவள் ஒவ்வொரு முறை என்னை கடக்கும் போதும்,
என் மனம் "வந்துட்டாயா வந்துட்டாயா" என்று அலறும்...
"பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்" என்றேன்...
அவளிடம் என் காதலைச் சொல்லும் முன்னர்....
நீ தான் நான் முதன்முதலாக காதலிக்கிற பெண் என்றேன்...
"அடப் பாவி, போன மாதம் தான் என் தோழியிடம்
காதலிக்கிறேன் என்று சொன்னாயே!" என்றாள்.
"அது போன மாசம், நான் இப்போ சொல்றது இந்த மாசம்" என்றேன்...
"இப்போ என்ன? உன் காதலை ஒப்புக் கொள்ள வேண்டுமா?" என்றாள்
"க க க போ" என்றேன்..
"முடியாது! என்று சொன்னாள், என்ன செய்வாய்" என்றாள்..
சற்றே யோசித்து விட்டு "நான், அழுதுடுவேன்!" என்றேன்...
ஒற்றைச் சிரிப்பை உதிர்த்து என்னைப் பார்த்தாள்...
"என்ன சிரிப்பு ராஸ்கல், சின்னப் புள்ளத் தனமாய்" என்று அதட்டினேன்.....
அவள் சோகமாய், என்னை பார்த்தாள்...
"நீ மட்டும் ஹும் சொன்னா, மாமா குச்சி மிட்டாயும்,
குருவி ரொட்டியும் வாங்கித் தருவேனாம்" என்றேன்...
எனது தந்தை காவல்துறையில் இருக்கிறார் என்றாள்...
"பன்றிக்கு நன்றி சொல்லி, குன்றின் மீதேறி நின்றால்,
வென்றிடலாம் எனது மாமாவை" என்றேன்...
இருந்தாலும் நீ ரிஸ்க் எடுக்கிறாய்,
இன்னொரு முறை யோசித்து சொல் என்றாள்...
"ரிஸ்க் எடுக்கிறதெல்லாம்,
எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி" என்றேன்...
பிறகு ஒரு வாரம் என்னை காக்க வைத்து,
ஒரு இனிய பொழுதில், சொன்னாள் அவள் காதலை...
அன்றைக்குத் தான் நான் உணர்ந்தேன்,
"மாப்பு, வெச்சுட்டாயா ஆப்பு" என்று....
.....தொடரும்
என் வாழ்க்கை எப்படி போகும்
உன் சொல்லால் பாதைகள் மாறும்
கனவாய் நீ இல்லை உயிராய்
உள்ளிருந்து மனமாய் இயங்குகிறாய்
பொய்யை மறைக்கின்றேன் நான்
இருப்பதாக இந்த உடலில்
உண்மையில் நீயே எனை
ஆட்கொண்டாய் உன் பார்வையில்
யாரையோ கூப்பிட்டு விட்டு
என்னை அழைத்தேன் என்கிறார்கள்
எனக்கு செவிகள் வேலை செய்யவில்லை
என்று என் நண்பர்கள் சொல்கிறார்கள்
நல்ல வேளை செவிகள் மட்டும் தான்
அவர்களுக்கு தெரிந்திருக்கிறது
என்னுயிரே வேலை செய்ய வில்லை
என்பது உனக்கும் எனக்கும் மட்டுமே
தெரியும்.................
தயவு செய்து யாரிடமும் சொல்லிவிடாதே!
பார்க்கக் கூட வெட்கப் பட்டால்
உனக்கு என் முகம் மறந்துவிடாது
என்றதும் , ஒரு பார்வைப் பார்த்தாயே நீ!
என் ஆயூளில் மறக்க முடியாது
அந்தப் பார்வையை...
என்னப் பேசுவது என்றுத் தெரியாமல்
விழித்த என்னைப் பார்த்து
பயந்துட்டி யா? என்றாயே
குல தெய்வத்தைப் பார்த்து
யாரேனும் பயப்படுவார்களா?
ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியில்
லேசாகப் புன்னகைத்தாய் நீ!
என்னை தெய்வம் என்றா சொல்கிறாய்
அப்படியென்றால் எனக்கு கோவில் எங்கே?
என இரு கைகளையும் சேர்த்துக் காட்டினாய்...
என் இடப் பக்க மார்பில் கை
வைத்து நான்காட்டினேன் இங்கேயென்று!
உன் முகம் சற்றே ஒரு சிணுங்களை
வெளிப்படித்தியது.
என் நினைவுப் பெட்டகத்தில்
ஒரு நொடியில்
பதிவு செய்யப் பட்டது
அந்தக் காட்சி
இன்னும் ஒரு முறையென்று மனம்
ஏங்க , மீண்டும் முயற்சியில் இறங்கியது
உதடுகள் அந்த சிணுங்களை காண...
அவள் நாசிகளை தொட்ட காற்றை
சுவாசிக்கவே நான் வாழ்கிறேன்
அவள் மனதினை அசைக்கவே
என் ஒவ்வொரு அசைவுகளும் நிகழ்கிறது
அவள் நீரோட்டமான மனதில் என்
நிகழ்வுகள் பாசிப் போல் பசுமையாக
இருக்கவே பாடுபபடுகிறேன்
அவள் இதய துடிப்பில்
என் காதல் அணுஅணுவாய்
நுழைத்திடவே காத்திருக்கிறேன்
அவள் நிழலிணை
என் உயிர் தொடர்ந்திடவே
ஒவ்வொரு நொடியும் முயல்கிறேன்
அவள் மொழிகளை
என் மனதில் பதித்திடவே
ஒவ்வொரு எழுத்தையும் நேசிக்கிறேன்
அவள் முகத்தினில்
என் முகம் பிரதிபலிக்கவே
சுடரில் புறப்பட்டஒளியாய் திரிகிறேன்
அவள் இதழ் சிந்தும் நீரை
சுவைத்திடவே தேன் மொய்க்கும்
வண்டுகள் தேடி அலைக்கிறேன்
அவள் காதினில் நுழையும் ஓசையில்
என் மொழி கலந்திடவே
மென்மையான காற்றாக்கிறேன்
அவள் மடி மீது கண் உறங்கிடவே
என் உயிர் மொத்தத்தையும் உறங்க வைக்கிறேன்
ஜன்னல்களுக்குப் போட்டிருந்த கர்ட்டன்களையும் மீறி தன்னுடைய வெப்பக்கரங்களால் அவளைத் தொட்டுக் கொண்டிருந்தான் சூரியன். கிட்டத்தட்ட ஒரு பிணம் போலவே கிடந்த அவளுக்குள் சூரியனின் வெப்பக்கரங்கள் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. சுவரிலிருந்து குதித்த பல்லியொன்று அவளை குறுக்காகக் கடந்து சென்றது. மடித்து வைத்திருந்த போர்வையின் ஒரு முனையை இறுக்கியபடி கன்னத்தை த‌ரையில் அழுத்திக் கவிழ்ந்து கிடந்தாள். புற உலகின் தொடர்பே இல்லாதபடி  அவள் நினைவில் கருமையேறி இருந்தது. அதில் எந்த வண்ணமும் இல்லை. கருமை...கருமை மட்டுமே அப்பியிருந்தது. ஒரு வேளை பிணமான எல்லோருடைய நினைவுகளும் வண்ணமிழந்து கருமையாகிவிடும்போல!
நேற்று இரவு அவள்கூட நாளை காலை நாம் பிணமாகி இருப்போம் என்று நினைத்தபடியேதான் இருந்தாள். ஆனால் பாருங்கள், இந்த பாழாய்ப்போன அடிவயிறு கணத்து அவளுக்கு உயிர் இருக்கிறது என்று காட்டிக்கொடுத்துவிட்டது. செத்த பிணத்திற்கு சிறுநீர் எப்படி வரும்...நிச்சயம் இது புது பிறவியாகத்தான் இருக்கும்.
கண்ணீரின் அடர்த்தியால் தரையில் அழுத்திக்கிடந்த கன்னத்தை அசைக்க சிரமமாக இருந்தது. வீங்கியிருந்த கன்னங்களை மீறி கண்களை மெல்லத் திறந்தாள். முதல் நொடி சூன்யமாகப்பட்டது. கண்களால் அறையை துழாவினாள் 'ஐயோ ...அதே அறை, அதே அலமாரி, நேற்று உடுத்தியிருந்த அதே உடையோடு நான்...நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேனா? குறைந்தபட்சம் மறதியாவது வந்திருக்கலாம். நான் ஏன் உயிரோடு இருக்கிறேன்? நான் ஏன் நிராகரிக்கப்பட்டேன்?'
அவளுடைய மனம் அழத் தொடங்கிவிட்டது. அவள் மறக்க நினைத்த முகமும் கேட்க விரும்பாத அந்த வார்த்தைகளும் மாறி மாறி அவளை அலைக்கழித்தன. 'நான் ஏன் உயிரோடிருக்கிறேன்?' தனக்குள்ளே திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டாள். துக்கம் அவளை நிரப்பியது. 'இல்லை வாழணும்.. வாழந்தாகணும்' நிமிஷத்தில் தோன்றிய நம்பிக்கை கீற்று அவளை எழ வைத்தது.
கதவைத் திறந்து வாசலில் கிடந்த பால் பாக்கெட்டையும் செய்தித்தாளையும் எடுத்துக்கொண்டு கதவை மூடி தாழிட்டாள். கடிகாரமுள் 10‍‍‍ல் நின்று கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் அதே முகம் ... அதே வார்த்தைகள்...கீழே கிடந்த செய்தித்தாள் அவள் கண்களில் பட்டது. எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள்.
தினசரி
சனிக்கிழமை, 25 நவம்பர், 2006, சென்னை
14 பக்கங்கள், ரூ. 3.50
பிரதமர் மீது உரிமை மீறல் பிரச்னை  கொண்டுவர
எதிர்கட்சிகள் முடிவு
சட்டப்பேரவையில் கடும் அமளி; அவை ஒத்திவைப்பு
டயர் வெடித்து கார் விபத்து:
காரின் முன்பக்க டயர் வெடித்தது; கார் நிலைக்குலைந்து
தாறுமாறாக ஓடத் தொடங்கியது. அப்போது அருகில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியது....................4 பேர் சம்பவ இடத்திலேயே இயிழந்தனர்.
இன்றும்  நாளையும்
சனிக்கிழமை விய ஆண்டு
கார்த்திகை 9 (25‍.11.06)
தனுசு.............முயற்சி
ஞாயிற்றுக்கிழமை விய ஆண்டு
கார்த்திகை 10 (26.11.06)
தனுசு............வெற்றி
''நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்''
''என்ன விஷயம் சொல்லுங்க''
''நேர்ல பேசணும்''
''என்ன விஷயம்னு சொல்லுங்க''
''நேர்லதான் பேசணும்''
''உங்களுக்கும் எனக்கும் என்ன இருக்கு பேசறதுக்கு?''
சென்னையில் ஒரே நாளில் 2 பேர் கொலை
சென்னை நவம். 25: சென்னையில் ஒரே நாளில்
வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் கொலை செய்யப்பட்டனர்
நண்பர்களுக்குள் நேற்று இரவு பணம் பட்டுவாடா செய்வதில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
கோணிப்பை வியாபாரி வெட்டிக்கொலை.
தகவல் துளிகள்...
சென்னையில் திருமண நகைகள் அறிமுகம்...
''காதல், கல்யாணம்ங்கிறதெல்லாம் மாயை. அந்த மாயை மூணு வருஷத்துல காணாம போயிடும்"
''அப்போ நீங்க கல்யாணமே பண்ணிக்கமாட்டீங்களா?''
''பண்ணிப்பேன்னும் சொல்லமுடியாது, பண்ண மாட்டேன்னும் சொல்ல முடியாது''
சர்வதேச அளவில் கண் சிகிச்சை மையமாக இந்தியா மாறி வருகிறது
மத்திய நிதி அமைச்சர் பேச்சு
அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது பார்வையற்றோர் பயன்படுத்தும் செல்போன்..
இதன் மூலம் எஸ்.எம்.எஸ் செய்திகள் பேச்சாக மாற்றப்பட்டு ஒலிபரப்பாகும்
அத்துடன் செல்போனில் அழைப்பு வரும் எண் பற்றி தகவலும் ஒலிப்பரப்பாகும்.
''எதுக்கு டெய்லியும் எனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புறாங்க? என்னை லவ் பண்றாங்களா இல்லையா...என்னைப் பார்த்து சொல்லச் சொல்லு''
''ஆமா நான் லவ் பண்றேன்''
தஞ்சாவூரில் ரயிலில் அடிபட்டு திருச்சி மாணவர் சாவு
அலட்சியத்தால் மேலும் மேலும் ரயில்கள் ஏறின‌
ரயில்கள் சென்று கொண்டிருக்க தண்டவாளத்தில்
மீண்டும் மீண்டும் அடிபட்டுக் கிடக்கும்
ராமின் உடல் (வட்டமிடப்பட்டுள்ளது)
சிறை வார்டன் மகன் தூக்கிட்டுத் தற்கொலை
சேலம், நவம். 25: சேலத்தில் சிறை வார்டன் மகன்
சுந்தரலிங்கம்(21) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்
ஆடை வாங்குவது தொடர்ப.....இரவு தனது
அறையில் தூக்கி......
''உங்ககிட்ட ஒரு விஷயத்தை சொல்லணும்''
''சொல்லு"
''ஒரு ராஸ்கல் எங்கிட்ட என்ன கேட்டான் தெரியுமா? நீ .......ரூமுக்கு போவியாம். அப்ப அவங்க ஃபிரண்ட்ஸ் வெளியே போயிடுவாங்களாம், அப்புறம்......அவன் எல்லாம் முடிச்சதும் உன்னை கழட்டி விட்டுடுட்டானாம்"
'பெரியார்' பட நாயகியை மாற்ற வேண்டும்
பெரியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தமிழ் பெண்களின் கற்பு பற்றி விமர்சனம் செய்த நடிகை, மணியம்மை பாத்திரத்தில் நடிப்பதாகத் தெரிகிறது.
கற்பு குறித்தும், தமிழ் கலாச்சாரம் குறித்தும் விமர்சித்த நடிகை இப்படத்தில் நடிக்கக்கூடாது என பாமாக எம்.எல்.ஏ வேல்முருகன் வலியுறுத்தினார்.
''அவந்தான் பிடிக்கலைங்கிறானே, நீ ஏன் அவன் பின்னாடியே போற? எங்கிட்ட ஃபிராங்கா சொல்லு அவன் உன்னை டச் பண்ணானா?"
லாலு வீட்டில் பாம்பு
பாட்னா, நவம்.25: மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் வீட்டுப் புல்வெளியில் நேற்று பாம்பு வந்தது
''உயர்ந்த கொடியிலிருந்து
கீழிறங்கும் ஒரு பாம்பென‌
தரை கொத்தும் பார்வை
உன்னுடையது''
மார்க்சிஸ்ட் தலைவர் சுபோத்ராய் மரணம்
.......கொல்கத்தா......காலமானார்
''என்னை உங்க வீட்ல ஏத்துக்க மாட்டாங்களா?''
''அப்படியில்ல, உங்களுக்கும் எனக்கும் ஒத்து வராது''
''ஏன்...?''
''அப்படித்தான், இங்கிருந்து போங்க...கிளம்புங்க..''
அடுத்த நாள் காலை தினசரியின் இரண்டாவது பக்கத்தில் வலது ஓரமாக அந்த செய்தி வந்திருந்தது.
சென்னையில் தனியாக தங்கியிருந்த இளம்பெண் தற்கொலை
சென்னை, நவம். 26: சென்னை அடையாறில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி போலிஸார் கூறியதாவது:
சென்னை அடையாறு காந்தி நகரில் தனியாக அறை எடுத்து தங்கியிருந்தவர் தன்யா (22) கோவையை சேர்ந்த இவர், அண்ணாசாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்தார். சொந்த ஊருக்குத் திரும்பிப் போவதாகக் கூறி  கடந்த வாரம் வேலையை ராஜினாமா செய்திருக்கிறார் தன்யா.
இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இவர் தூக்கில் தொங்கியதை ஜன்னல் வழியாகப் பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள்.
இது தொடர்பாக போலீஸார் அடையாறு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இவர் தற்கொலைக்கு காதல் காரணமாக இருக்குமா என்றும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
1. காதல் என்பது போதி மரம் (ஈ)
<object width='425' height='350'><param name='movie' value='http://www.youtube.com/v/P-GZn83yaYY'></param><param name='wmode' value='transparent'></param><embed src='http://www.youtube.com/v/P-GZn83yaYY&rel=0' type='application/x-shockwave-flash' wmode='transparent' width='425' height='350'></embed></object>
2. காதல் என்பது பொதுவுடைமை (பாலைவன ரோஜாக்கள்)
<object width='425' height='350'><param name='movie' value='http://www.youtube.com/v/2_pkzZk0VEc'></param><param name='wmode' value='transparent'></param><embed src='http://www.youtube.com/v/2_pkzZk0VEc&rel=0' type='application/x-shockwave-flash' wmode='transparent' width='425' height='350'></embed></object>
3. காதல் என்பது கடவுள் அல்லவா! (ஒரு கல்லூரியின் கதை)
<object width='425' height='350'><param name='movie' value='http://www.youtube.com/v/iMgfXmcDNt8'></param><param name='wmode' value='transparent'></param><embed src='http://www.youtube.com/v/iMgfXmcDNt8&rel=0' type='application/x-shockwave-flash' wmode='transparent' width='425' height='350'></embed></object>
4. காதல் என்பது தூங்கும் மிருகம் (என்னவளே)
<object width='425' height='350'><param name='movie' value='http://www.youtube.com/v/C4JdbcveLr0'></param><param name='wmode' value='transparent'></param><embed src='http://www.youtube.com/v/C4JdbcveLr0&rel=0' type='application/x-shockwave-flash' wmode='transparent' width='425' height='350'></embed></object>
5. காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ (ஆறிலிருந்து அறுபது வரை)
<object width='425' height='350'><param name='movie' value='http://www.youtube.com/v/7Bjq3XnRxWQ'></param><param name='wmode' value='transparent'></param><embed src='http://www.youtube.com/v/7Bjq3XnRxWQ&rel=0' type='application/x-shockwave-flash' wmode='transparent' width='425' height='350'></embed></object>
6. காதல் என்பதா? காமம் என்பதா?! (ஜெமினி)
<object width='425' height='350'><param name='movie' value='http://www.youtube.com/v/Tkel0nPwo6c'></param><param name='wmode' value='transparent'></param><embed src='http://www.youtube.com/v/Tkel0nPwo6c&rel=0' type='application/x-shockwave-flash' wmode='transparent' width='425' height='350'></embed></object>
7. இதுதான் காதல் என்பதா? (புதிய முகம்)
<object width='425' height='350'><param name='movie' value='http://www.youtube.com/v/yPI6BXAYnos'></param><param name='wmode' value='transparent'></param><embed src='http://www.youtube.com/v/yPI6BXAYnos&rel=0' type='application/x-shockwave-flash' wmode='transparent' width='425' height='350'></embed></object>
8. காதல் என்பது வன்முறையா (பாலா)
<object width='425' height='350'><param name='movie' value='http://www.youtube.com/v/2SxNKxIdKE4'></param><param name='wmode' value='transparent'></param><embed src='http://www.youtube.com/v/2SxNKxIdKE4&rel=0' type='application/x-shockwave-flash' wmode='transparent' width='425' height='350'></embed></object>
9. காதல் என்பது இரு மணமுடிச்சு (குஷி)
<object width='425' height='350'><param name='movie' value='http://www.youtube.com/v/9VIPoXJceME'></param><param name='wmode' value='transparent'></param><embed src='http://www.youtube.com/v/9VIPoXJceME&rel=0' type='application/x-shockwave-flash' wmode='transparent' width='425' height='350'></embed></object>
10. காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது (சின்னத்தம்பி பெரியதம்பி)
<object width='425' height='350'><param name='movie' value='http://www.youtube.com/v/CPcKYglmhcQ'></param><param name='wmode' value='transparent'></param><embed src='http://www.youtube.com/v/CPcKYglmhcQ&rel=0' type='application/x-shockwave-flash' wmode='transparent' width='425' height='350'></embed></object>
11. காதல் என்பது உணர்வின் கவசம் (அகரம்)
12. காதல் என்பது காவியமானால் கதாநாயகன் வேண்டும் :: நாளை நமதே