நுண்ணோக்கு - தொலைநோக்கு - ஓர் மட்டைப்பந்து
மட்டை விட்டகன்று
நேர்கோட்டில் பயணித்து
எல்லையில் நின்றவனின் கைநழுவி
சாலையில் வழிந்தோடிய சிறுபந்து
என் பாதம் தொட்டு நின்றது.
வரும் வழியில்...
சில்லரை திருட்டிற்காய் சிக்கி
கடைசி கணம் தப்பித்ததை
குறித்த மட்டைக்காரனின் நினைவையும்
கிடைக்கவிருந்த முத்தம்
கைப்பட்டுச்சிதறிய
கண்ணாடிக்கோப்பையின்
ஒலி பாய்ந்து முறிந்ததை
குறித்த எல்லை நின்றவனின் நினைவையும்
...சுமந்தே வந்திருக்கும்.
எண்ணற்ற மட்டைகளை விட்டகன்ற பந்துகள்
பேரிரைச்சலுடன் பாய்ந்தோடும்
இந்த நிச்சய-அநிச்சய பள்ளத்தாக்கின்
மறுபுறம் ஒளிந்திருக்கிறது
கைசேரும் நழுவும் பந்துகளின் (முத்தங்களின் / தண்டனைகளின்) ரகசியப்பட்டியல்.
'அங்கிள்... பால்..' என்ற விளிக்கு பதிலியாய்
ஒரு ஜதை
வெறும் கண்கள்
கொண்ட சக பயணி
வீசிய பந்தை லாவகமாய் பிடித்து
புன்னகை உமிழ்ந்தான் சிறுவன்.
நிலவைச் சுமந்த நடுக்கம் அகலவில்லை கடலுக்கு
இந்த அமாவாசை இரவிலும்...
கடலின் பிம்பமென விரிகிறது
கரையோரத்து சாலை...
அவனும் கடல் பார்க்கிறான் என நினைத்திருந்தேன்
தூண்டிலில் மீனும் முகத்தினில் சிரிப்புமாய்
எனை கடக்கும் வரை...
இறை விலகல்
ஆழ்கடல் அமைதியிலிருந்தும்
சூர்யோதயத்திலிருந்தும்
மொட்டவிழும் நிகழ்விலிருந்தும்
பிறப்பு இறப்பிலிருந்தும்
தூண் துரும்புகளிலிருந்தும்
விஞ்ஞானத்தின் முறம் கொண்டு
விரட்டியடிக்கப்பட்ட கடவுள்
ஆதிவெடிப்பின் கணத்திலும்
முடிவிண்மைக்கு அப்பாலும்
குழந்தையின் சிரிப்பிலும்
சஞ்சரித்த படி
நாய்க்குட்டியின் கண்களின் அன்பையும்
அதன் வாலசைவில் குவிமையம் கொண்ட அன்பிற்கான தேடலையும்
கலந்த பார்வையுடன்
பார்த்துக்கொண்டிருக்கிறார்
தான் இருந்த இடத்தில் நிறைந்துள்ள பெரும்பாழை
அதில் விழத்தொடங்கியுள்ள குப்பைகளை...
- சித்தார்த்
பலிபீடக் குறிப்புகள்
திசைப்பறவை குடியொன்றின் உறைவிடம்.
ஆதவனின் கதிர்கொண்டு
உயிர்க்காற்றை உருவாக்கும்
ரசவாதக் கூடம்.
காட்டாற்று வெள்ளத்தில்
மண்காக்கும் அரண்.
தேடி வரும் உயிர்க்கெல்லாம்
கனி தரும் உணவகம்.
ஆயினும் அது ஒரு மரம் தான்.
தயங்காமல் வெட்டு.
- சித்தார்த்.
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட
அதை கண்டஞ்சி
மதுரை புகாது
புகார் மீள
யுகம் பல கழித்து
சிலையொன்று் உடைபடாமல் போக
ஒரு மந்தைக்கூட்டத்தின்
எருமைத்தோல்
தெரியாமலாச்சு
இளங்கோவடிகள் மன்னிப்பாராக. :)
நீண்ட நாட்களுக்கு பிறகு சென்ற வாரம் எழுதிய கவிதை.
நிதர்சனம்
எம்பிக்குதித்து
உடலின் எல்லையில் மோதி
கீழ் விழுந்து
மீண்டும் முயன்று
மீண்டும் தோற்று
விழுப்புண்களுடன்
புவியீர்ப்பின் கோடையில்
வாடத்தொடங்கும்
பறவை முன்
குழந்தை மனம்
- சித்தார்த்