அஸ்ஸலாமு அலைக்கும்,
உலகில் எங்கெல்லாம் முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனரோ அங்கெல்லாம் குர்ஆனை ஓதித் தரும் மதரஸாக்களும், ஆலிம்களும் பலர் உள்ளனர். எனினும், சரியான உச்சரிப்பை வெகு சில இடங்களிலேயே காண முடிகின்றது. அதிலும் உருதுவை தாய்மொழியாக கொண்ட ஹஜ்ரத்தின் உச்சரிப்பு ஒருவிதமும், தமிழை தாய் மொழியாகக் கொண்ட ஹஜ்ரத்தின் உச்சரிப்பு வேறு விதமும், இன்னும் மலையாளம் பேசும் ஹஜ்ரத்துமாரின் உச்சரிப்பு மலையாள வாடையிலேயே இருப்பதும் உண்டு. இதனால், சரியான உச்சரிப்பு என்பது கனவாகவே அமைந்து விடுகின்றது.
எனக்கு தெரிந்த ஒரு அண்ணன் சமீபத்தில் கனெக்டிகட் மாகாணத்தில் வேலைக்காக வந்து சேர்ந்தார். சில நாட்களிலேயே அவரின் குடும்பத்தையும் அமெரிக்காவிற்கு அழைத்துக் கொண்டார். அக் குடும்பத்தில் உள்ள கடைசி பெண்குழந்தைக்கு அங்கும் இங்கும் தேடி ஒரு பாகிஸ்தானிய பெண்ணிடம் குர்ஆன் ஒதுவதிற்காக சேர்த்தனர். அக் குழந்தை வீட்டிற்கு வந்த பின் ஓதும் முறையைக் கண்டு அண்ணிக்கு சந்தேகமே வந்து விட்டது, நாம் சரியான இடத்தில்தான் குழந்தையை சேர்த்தோமா என்று. ஏனெனில் இவர்கள் ஓதி வளர்ந்த‌ ஒரு தமிழ் ஹஜ்ரத்திடம். இக் குழந்தைக்கு கற்றுக் கொடுக்கும் சகோதரியோ சரியான அரபி உச்சரிப்பை கற்றுக் கொடுத்துக் கொண்டுள்ளார். அண்ணி என்னிடம் தொலைபேசியில் உரையாடியபோது, இதைப் பற்றி கூறினார்கள். அதன் பின் நான் அவர்களையும் அந்த சகோதரியிடமே சரியான உச்சரிப்பை கற்றுக் கொள்ளுமாறு கூறினேன். இப்பொழுது தாயும் சேயும் சேர்ந்தே கற்றுக் கொள்கின்றனர்.
அல்ஹம்துலில்லாஹ். ஆனால், எல்லோருக்கும் இது போன்ற சந்தர்ப்பம் கிட்டுவதில்லை. தத்தம் வீடுகளிலேயே அமர்ந்து கொண்டு, வீட்டிற்கு வந்து குர்ஆனை ஓதக் கற்றுக் கொடுக்கும் ஹஜ்ரத்துமாரே சாலச் சிறந்தவர் என வாழ்ந்து விடுகின்றோம்.  நபி (ஸல்) அவர்களின் கூற்றுப் படி, குர் ஆனின் ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் உண்டு. ஆனால் அவற்றை சரியாக ஓத யாரும் முயற்சிப்பதில்லை.
இன்ஷா அல்லாஹ், இந்த பகுதியில், இனி முதல் சரியான முறையில் குர் ஆன் ஓதிட பாடங்களை காண்போம். வல்ல ரஹ்மான் துணையிருப்பானாயின், இவ் வேலை எளிதானதாகவும், பயனுள்ளதாகவும் அமையும். அதற்கு அல்லாஹ் துணையிருப்பானாக. ஆமீன்.
இதற்கான பாடங்கள் கீழ்க்காணும் வலைகளிலிருந்தும், மற்றும் நான் கற்றுக் கொள்ளும் வகுப்புகளின் பாட புத்தகங்க‌ளிலிருந்தும் தொகுக்கப் படும்.
இஸ்லாம் கல்வி
மதீனா அராபிக்
அஸ்‍-ஸித்க், கனடா
தஜ்வீதின் விதிகள்
மதீனா பல்கலைக் கழக பாடங்கள்
குர்ஆனை அழகிய முறையில் வாசிக்க‌
இல்ம் ஃப்ரூட்ஸ்
ஆங்கிலத்தில் தஜ்வீத்
இந்த பகுதியில், இனி வரும் பாடங்களில் ஏதேனும் தவறு இருந்தாலோ, அல்லது, ஐயம் எழுந்தாலோ தயவு செய்து கீழே கருத்துக்களின் மூலம் தெரிவியுங்கள் / அல்லது எனக்கு இம்முகவரியில் மின்னஞ்சல் எழுதுங்கள்.
இன்ஷா அல்லாஹ், அடுத்த பகுதியில் சந்திப்போம்...
பகுதி இரண்டு
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே,
நம்மில் நிறைய பேருக்கு, அல்லாஹ் நமக்கு தந்துள்ள அருட்கொடைகளைப் பற்றிய நினைவோ, அதற்கு நன்றி செலுத்த வேண்டும் என்ற எண்ணமோ இருப்பதில்லை. அதிகம் பேரிடம், இது நம்முடைய கடின உழைப்பால் கிட்டியது என்ற எண்ணமே மேலோங்கி உள்ளது. சற்றே ஒரு நொடி நினைத்துப் பாருங்கள். அல்லாஹ் நினைத்தால் இந்த அருட்கொடைகளை ஒரு நொடியில் நம்மிடமிருந்து அகற்றிட முடியும். அந்நிலை ஏற்பட்டால்?
கீழே பதியப்பட்டிருக்கும் படம் இது போல வாழ்ந்த ஒரு மனிதருடையது. தற்போது பக்கவாதத்தால் முடங்கிப் போயிருக்கும் இவரை பேட்டி கண்டனர். அப்பேட்டி அரபியில் இருப்பதால் , முடிந்த வரை சரியான தமிழாக்கம் செய்திருக்கின்றேன். அரபி தெரிந்தவர்கள், இதில் ஏதேனும் பிழை கண்டால் தெரியப் படுத்தவும். நன்றி.
<object width='425' height='350'><param name='movie' value='http://www.youtube.com/v/EGORd3HXywY'></param><param name='wmode' value='transparent'></param><embed src='http://www.youtube.com/v/EGORd3HXywY&rel=0' type='application/x-shockwave-flash' wmode='transparent' width='425' height='350'></embed></object>
பேட்டி காண்பவர்: "உண்மையில் இது அல்லாஹ்வின் ஃகதர் தான் என்பதில் நமக்கு எந்த வித ஆட்சேபணையும் இல்லை. அல்லாஹ் தன் திருமறையில் "...நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம். (அல்குர்ஆன்: 4:19)" என்று கூறுகின்றான். சரி, அப்துல்லாஹ், நீங்கள் கூறுங்கள். உங்கள் வாழ்வில் முன்னமிருந்த மூன்று முக்கிய விடையங்களைப் பற்றி, இப்போது நீங்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பின் மீண்டும்
அவைகளைச் செயல்படுத்தும் பாக்கியம் கிட்டாதா என ஏங்கும் மூன்று விடையங்களைப் பற்றி கூறுங்கள்."
அப்துல்லாஹ்: "மூன்று விடையங்களா? என்னை சார்ந்த மூன்று விடையங்களே எனக்கு நினைவுக்கு வருகின்றது. அவற்றை இப்போது செயல் படுத்த முடியாத நிலையில் இருக்கின்றேனே என்பதே எனக்கு வேதனையளிக்கின்றது.
அவற்றில் முதன்மையானது, மீண்டும் ஒருமுறையாவது அல்லாஹ்விற்கு 'ஸஜ்தா' செய்யும் பாக்கியம் கிட்டுவது. மீண்டும் ஒருமுறை, ஒரே முறை அல்லாஹ்விற்கு ஸஜ்தா செய்ய விரும்புகின்றேன். மீண்டு வரவே முடியாத ஒரு ஸஜ்தாவை அல்லாஹ்விற்கு செய்ய விரும்புகின்றேன், இன்ஷா அல்லாஹ். என்னுடைய பயமும் அதனைச் சுற்றியே உள்ளது. அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றபடி நான் ஆகிவிட்டேனோ என்று அஞ்சுகின்றேன். [68-42 கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில், (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள்.] இன்று என்னால் ஸஜ்தா செய்ய இயலாத நிலையில் உள்ளேன். ஆனால், நான் நடந்து செல்லும் நிலையில் இருந்த போது நிறைய தொழுகைகளை நான் தவற விட்டிருக்கின்றேன். இப்போது என்னை காண்பவர்கள் என் மீது பரிதாபம் கொள்கின்றார்கள். ஆனால் அவர்களில் ஒருவரும் நான் தொழுகையை தவற விட்டபோது எனக்காக பரிதாபப் படவில்லை.
என்னை வருத்தும் இரண்டாவது விடையம், குர்ஆனின் ஒரு பக்கத்தையாவது புரட்டும் வாய்ப்பு. நல்ல நிலையில் இருக்கும் உங்களைப் போன்ற சகோதரர்களுக்கு இது ஒரு விடையமே இல்லை. ஆனால் எனக்கோ மலையைப் போன்றதொரு பெரிய விடையம்.
மூன்றாவது, மகிழ்ச்சியான ஒரு நேரத்தில், அது ஈதுப் பெருநாளோ அல்லது வேறு சந்தர்ப்பமோ வாய்க்கும்போது, என் வீட்டிற்கு சென்று என் தாயை கட்டி அணைக்க வேண்டும்..." (நீண்ட மௌனம் நிலவுகின்றது...)
“எங்கள் இறைவனே! ‘உங்கள் இறைவனை விசுவாசியுங்கள்’ என்று எங்களை ஈமானினளவில் அழைத்தோரின் அழைப்பை நிச்சயமாக நாங்கள் செவியுற்று, நாங்களும் அவ்வாறே ‘ஈமான்’ கொண்டோம். ஆதலால் எங்கள் இறைவனே! நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் பாபங்களிலிருந்து எங்களை விடுவித்து (முடிவில்) நல்லோர்களுடன் எங்களை மரிக்கும்படிச் செய்வாயாக!” (குர்ஆன் 3:193)