சுமங்கலி கேபிள் விஷனுக்குப் போட்டியாக மு.க.அழகிரி தொடங்கியுள்ள ராயல் கேபிள் விஷன் நிறுவனத்தால், கேபிள் டிவி ஆபரேட்டர்களும், மதுரை மக்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
அண்மையில் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி, மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ராயல் கேபிள் விஷன் என்ற நிறுவனத்தை தொடங்கி இருப்பதையும், அது விரைவில் தென் மாவட்டங்கள் முழுவதும் விஸ்தரிக்கப்படும் என்றும் அறிவித்து இருப்பதையும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
இதன் விளைவாக மாறன் குடும்பத்திற்கு சொந்தமான சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்திற்கும், ராயல் கேபிள் விஷன் நிறுவனத்திற்கும் மிகப் பெரிய அளவில் தற்போது தகராறு ஏற்பட்டுள்ளது.
டிராய் விதிப்படி பொதுமக்கள் பார்ப்பதற்கு வசதியாக தொலைக்காட்சி நிறுவனங்கள் கேபிள் நிறுவனங்களுக்கு தங்கள் சேனல்களை பாரபட்சமின்றி வழங்க வேண்டும் என்று ராயல் கேபிள் விஷன் நிறுவனமும், கேபிள் ஆப்பரேட்டர்களை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மு.க.அழகிரி மிரட்டுகிறார் என்று சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனமும் ஒன்றையொன்று பரஸ்பரம் குற்றம் சாட்டி அறிக்கை போரில் இறங்கியுள்ளன.
இதன் விளைவு என்னவென்றால் அனைத்துத் தொலைக்காட்சி சேனல் களையும் பார்க்க முடியாத அளவுக்கு மதுரை மாவட்ட மக்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள கேபிள் ஆபரேட்டர்கள் ராயல் கேபிள் விஷனில் இணையுமாறு ஆளும் கட்சியினரால் மிரட்டப்படுகிறார்கள் என்றும், இது குறித்த புகாரை காவல் துறையினர் ஆளுங்கட்சியின் தலையீடு காரணமாக வாங்கவே மறுக்கின்றனர் என்றும் தகவல்கள் வருகின்றன.
திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பப் பிரச்சனை காரணமாக தமிழக மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது.
மாறன் குடும்பத்திற்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் இடையே பிரிவினை ஏற்பட்டதன் காரணமாக கருணாநிதி குடும்பத்திற்கு வருமானம் வருவது நின்று விட்டது. இதில் தன் மகன் மு.க.அழகிரியின் பக்கம் நின்று குடும்ப வருமானத்தைப் பெருக்க கருணாநிதி தயாராகி விட்டார்.
மதுரையில் தற்போது நிலவும் பிரச்சனை குறித்து திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதியிடம் கருத்து கேட்கப்பட்டபோது, அரசு கேபிள் கார்ப்பரேஷன் என மாநில அரசின் பொதுத்துறை நிறுவனத்தை தமிழக அரசே தொடங்கி நடத்த இருக்கிறது. அதன் மூலம் இந்தத் தொழிலில் ஈடுபட்டு உள்ள அனைவரின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று கூறுகிறார்.
கருணாநிதியின் குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் பிரச்சனை ஏற்பட்ட ஒருசில மாதங்களிலேயே இரண்டு தொலைக்காட்சி சேனல்களை ஆரம்பித்த கருணாநிதிக்கு அரசின் பொதுத்துறை நிறுவனத்தை தொடங்க என்ன தடை இருக்க முடியும்? ஏன் இதில் தாமதம்? எல்லாம் சுயநலம்தான். அப்படி அரசு கேபிள் கார்ப்பரேஷன் வந்தாலும் அதில் அரசியல் தலையீடு இல்லாமல் இருக்குமா என்பதற்கும் எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை.
தன்னுடைய மகனை மீறி தைரியமாக செயல்படக் கூடிய நிலைமையில் திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதி இல்லை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. பல்வேறு துன்பங்களை கவலையை மறந்து ஏதோ சிறிது நேரமாவது தொலைக் காட்சியில் தங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சியைப் பார்த்து பொழுதைக் கழிப்போம் என்றால் அதற்கும் வழியில்லாத நிலை தற்போது மதுரை மாவட்டத்தில் உருவாகி இருக்கிறது.
முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் படுகொலை, தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்பு அதன் காரணமாக மூன்று பேர் மரணம் ஆகிய நிகழ்ச்சிகளின் காரணமாக பொதுமக்களும், கேபிள் டிவி ஆபரேட்டர்களும் செய்வதறியாமல் திகைக்கின்றனர்.
மரண பயம் அவர்களை தற்போது கவ்விக் கொண்டிருக்கிறது. சரியாக சொல்ல வேண்டுமென்றால், பொதுமக்கள் அஞ்சி, நடுங்கி, அடிமைகள் போல வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
கருணாநிதிக்கு நாட்டு மக்களின் மீது அக்கறை இருக்குமானால் மதுரை மாவட்ட மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அனைத்துத் தொலைக்காட்சி சேனல்களை கண்டு மகிழ்வதற்கும் அங்குள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நிம்மதியாக இருப்பதற்கும், நியாயமான வழிமுறையை சுயநலமின்றி வகுக்க வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
திமுகவில் மட்டுமல்ல, தமிழக அரசியலில் இப்போது மிகவும் கவனிக்கப்படும் பிரமுகர் (தலைவர்!) சந்தேகமில்லாமல் மு.க.அழகிரிதான்.
அழகிரி ஒரு இடத்துக்கு அல்லது விழாவுக்கு வருகிறார் என்றாலே அவருக்களிக்கப்படும் மரியாதையின் ரேஞ்சே வேறு. முன்பு மதுரை மற்றும் அதற்கு தெற்கே மட்டுமே இருந்த அழகிரியின் ராஜ்யம் இப்போது தடாலடியாக சென்னை வரை வியாபித்து நிற்கிறது.
கல்யாணம், நூல் வெளியீட்டு விழா, திரைப்பட பூஜைகள் என சகல நிகழ்வுகளுக்கும் தவறாமல் குடும்பத்துடன் ஆஜராகிறார் அழகிரி.
அதிகாரிகள் பலரும் ஒரு கேபினட் அமைச்சருக்குத் தரும் அத்தனை மரியாதைகளையும் அழகிரிக்குத் தருவதையும் பார்க்க முடிகிறது.
சமீபத்தில் சென்னையில் ராஜ் டிவியின் புதிய செய்திச் சேனல் ராஜ் நியூஸ் துவக்க விழாவில் அழகிரியின் வருகையும், அவரை ராஜ் டிவி அதிபர் மற்றும் இயக்குனர்கள் வரவேற்ற விதமும், அந்த நிகழ்ச்சியை விட சுவாரஸ்யமானதாக இருந்தன.
இதற்குக் காரணம், அழகிரி வைத்திருக்கும் எதிர்கால திட்டங்கள்.
சன்னுக்குப் போட்டியாக கேபிள் நெட்வொர்க்கில் முழு வீச்சில் இறங்கியிருக்கும் அழகிரி, விரைவிலேயே ராஜ் டிவி மூலமாக தனியாக டி.டி.எச். சாதனங்களை வழங்கும் திட்டத்திலும் காலடி எடுத்து வைக்க உள்ளாராம்.
கேபிள் நெட்வொர்க் அமைப்பதில் ஆரம்பத்தில் ஏற்பட்ட பின்னடைவைப் போல இம்முறை ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார் அழகிரி. எனவே ஆரம்பத்திலேயே தனது டிடிஎச் சேவைக்குள் குறிப்பிட்ட முக்கியச் சேனல்கள் அனைத்தையும் கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
கலைஞர் டிவியை முதலில் ராஜ் டிவிதான் தொடங்குவதாகக் கூறி வந்தார்கள். ஆனால் கலைஞர் நெட்வொர்க் தனியாகவே துவங்கி பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது. இதில் ராஜ் டிவிக்கு ஏமாற்றம்தான் என்றாலும், ஆளும் கட்சியுடன் நிற்பதில் உள்ள அனுகூலங்கள் அவர்களை அமைதியாக்கிவிட்டது.
இம்முறை அவர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்காமல், டிடிஎச் சேவை வழங்குவதை முழுவதுமாக  ராஜ் டிவிக்கே வழங்கும் திட்டத்திலிருக்கிறாராம் அழகிரி.
கட்சியிலும்...
இன்னொரு பக்கம், கட்சிக்குள் அழகிரியின் கை ஒங்கி வருவதும் வெளிப்படையாகவே தெரிகிறது.
முன்பெல்லாம் கட்சியின் போஸ்டர்களை முதல்வர் கருணாநிதி, அமைச்சர் ஸ்டாலின் படங்கள் மட்டுமே அலங்கரிக்கும். இப்போது கூடுதலாக அழகிரியின் படங்களும் தவறாமல் இடம்பெறத் தொடங்கிவிட்டன.
இதுகுறித்து நம்மிடம் பேசிய திமுகவின் முக்கியத் தலைவரும் அமைச்சருமான பிரமுகர் இப்படிக் கூறுகிறார்:
"அவர் என்ன சினிமா வில்லனா... எதற்காக இந்த அளவு அவரை வேறுபடுத்திப் பார்க்கிறீர்கள்... திமுகவும் அவரும் பிரித்துப் பார்க்க முடியாத விஷயங்கள். ஒரு கட்சிக்குத் தலைமை ஏற்கிற பக்குவமும், தகுதியும் அவருக்கு நிறைய உண்டு. நடக்கப் போகும் அதிசய மாறுதல்களை பார்க்கத்தானே போகிறீர்கள்... இவரா இப்படி என மூக்கின் மீது விரலை வைப்பீர்கள். அத்தனை திட்டங்களை வைத்திருக்கிறார் அழகிரி. எல்லாமே கட்சியின் நன்மைக்குத்தான்" என்றார் அவர்.
அட...
சன் டிவி மற்றும் அதனுடன் தொடர்புள்ள எவரோடும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்று வீரவசனம் பேசிவிட்டு, இப்போது சன் சேனல்களை பெற அழகிரி துடிப்பது ஏன் என்று எஸ்சிவி கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரையில் ராயல் கேபிள் விஷன் சார்பில் பத்திரிகையாளர்களை சந்தித்த மு.க.அழகிரி தன்னிலை விளக்கம் தந்துள்ளார். தன்னிலை விளக்கத் தோடு விடாமல் எஸ்.சி.வி. மீது சில இட்டுக் கட்டிய குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதால், அதற்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு நாங்கள் தள்ளப் பட்டிருக்கிறோம். எஸ்.சி.வி நிறுவனம் கேபிள் ஆபரேட்டர்களை துன்புறுத்தியதாகவும், அதற்கு ஆதாரமாக தன்னிடம் சி.டி. இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். எஸ்.சி.வி. துன்புறுத்தி இருந்தால் அதன் இணைப்பை பெற்று இத்தனை ஆண்டு காலம் எஸ்.சி.வி.யுடன் அவர்கள் இணைந்து பணியாற்றி இருப்பார்களா? இதுபோன்ற புகாரை இத்தனை ஆண்டுகளும் யாரும் கூறவில்லை. ஏன், கடந்த ஓராண்டு காலமாகக்கூட யாரும் கூறவில்லையே. இப்போது சில அதிகாரிகள் மூலம் யாரையாவது மிரட்டி இவர்களே சி.டி. தயாரித்திருக்கலாமே ஒழிய இது முற்றிலும் இட்டுக்கட்டிய குற்றச்சாட்டாகும்.
பெரும்பாலான ஆபரேட்டர்கள் அவர்களோடு இணைந்து விட்டதாகவும், சன் குழும இணைப்பு இல்லாததால் பொதுமக்கள் யாரும் கவலைப்படவில்லை என்றும் அந்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். அவர்களோடு இணைந்த ஆபரேட்டர்கள் எப்படி இணைந்தார்கள், ஏன் இணைந்தார்கள், எப்படிப்பட்ட நெருக்கடிகளினால் இணைந்தார்கள் என்பது அவர்களது மனசாட்சிக்கே தெரிந்த விவகாரம். பொதுமக்களும் அறிந்த விவகாரம். அதனுள் செல்ல நாங்கள் விரும்பவில்லை. சன் டிவி குழும இணைப்பு இல்லாததால் பொதுமக்கள் குறிப்பாக தாய்மார்கள் அடைந்துள்ள கொதிப்பின் காரணமாகத்தானே தன்னிலை விளக்கம் அளிக்க புறப்பட்டிருக்கிறார்கள். பிறகு முழு பூசணியை சோற்றில் மறைக்கும் முயற்சியில் ஈடுபடலாமா? பொதுமக்கள் கொதிப்பு இல்லை என்றால் சன் குழும இணைப்பை பெற டிராய் மூலம் முயற்சிகள் நடைபெறுவதாக கூறுவது ஏன்?
பொதுமக்களுக்கு கேபிள் டி.வி. இணைப்புகளை குறைந்த கட்டணத்தில் தரவேண்டும் என்ற எண்ணம் உண்மையி லேயே மு.க.அழகிரிக்கு இருந்தால், அதிமுக ஆட்சி நடைபெற்றபோது ஆர்.சி.வி. நிறுவனத்தை தொடங்காதது ஏன்?
சன் டிவி மற்றும் அதனோடு தொடர்புடையவர்களோடு ஒட்டுமில்லை உறவுமில்லை என்று சில நாட்களுக்கு முன்பு வீரவசனம் பேசிவிட்டு, இப்போது சன் குழும இணைப்பை பெற டிராய்க்கு போகப்போவதாகவும் நீதிமன்றம் மூலம் முயற்சிக்கப் போவதாகவும் துடியாய் துடிப்பது ஏன்?
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் இறுதியில் வெல்லும் என்பதை தவிர வேறு எதுவும் இப்போது கூற நாங்கள் விரும்பவில்லை. இவ்வாறு எஸ்சிவி கூறியுள்ளது.
நன்றி: விடுதலை